2-டிசம்பர்-2014 கீச்சுகள்




விஜய் படத்த தடை பண்ண படத்துல தான் குறை கண்டுபிடிக்கனும்! அதே அஜித் படத்த தடை பண்ண போட்டியா இன்னொரு படத்த ரிலிஸ் பண்ணாவே போதும்!!
   
மழை வித்யாசம் பார்க்காமல் பொழிகின்றது ஆனால் அது பெய்யும்போது பணக்காரர்களுக்கு பொழுதுபோக்காகவும் ஏழைகளுக்கு போராட்டமாகவும் மாறிவிடுகின்றது!!!
   
TRP க்காக ரியாலிட்டி ஷோல நாடகம் போடுற விஜய் டிவியவிட நாடகத்த மட்டுமே போட்டு உசுர வாங்குற சன்டிவி எவ்ளோ மேல்.
   
சிறுமிக்கு AB+ இரத்தம் தேவை படுகிறது . முடியுமானவரை SHARES செய்து இந்த சிறுமி இன் உயிரைகாப்பதுவோம்..! Phno : +918860372707 இடம் :புத்தூர்
   
ஒலகத்துலயே ரொம்ப கடினமான விசயம் நம்மை வெறுப்பவர்கு நம்மை புரியவைப்பது அல்ல; நம்மை அதிகமாய் நேசிப்பவர்கு நம்மை புரிய வைப்பது தான்!
   
அவனிடம் சண்டையிட்டுவிட்டு அழுது தீர்க்க அவன் தோளையே தேடுகிறது மானங்கெட்ட மனது...!!
   
உண்மையாக நினைத்து ஒரு சிலரிடம் பழகும் போது தான் இது நிரந்தரம் இல்லை என அவர்களே சில சமயம் உணர்த்திவிடுகிறார்கள்..
   
தமிழர்கள் அனைவரும் தமிழை வளர்க்கதான் ஆசைபடுகிறோம்! ஆனால் என்ன? கையெழுத்தும், பெயரின் முதல்எழுத்தும் ஆங்கிலத்தில்தான் போடுகிறோம்!?
   
"மாட்டுத் தாவணி": மாடு கட்டும் கயிறு தாம்பு+அணி | தாம்பு= கயிறு -- மாட்டுச் சந்தை ஆதலால் மாட்டுத் தாம்பணி->மாட்டுத் தாவணி என பேச்சுவழக்கு:)
   
இல்லாத பிரச்சனைகளைப் பற்றி, வேண்டாத கற்பனைகள் செய்து கவலைப்படுவதில், பெண்களுக்கு நிகர் - பெண்களே !!
   
ஐயப்ப சாமிகள் டாஸ்மாக்கில் செருப்பு போடாமல் தண்ணி அடித்து இந்த லோகத்துக்கு என்ன சொல்ல விரும்புகிறார்கள்
   
மணக்கோலம் அதுவரை கண்டிடாத தனித்துவமான ஒரு களையை இந்தப் பெண்களுக்குத் தந்து விடுகிறது!
   
காங்கிரசை விட்டால் இந்தியாவை காப்பாற்ற ஆளில்லை-குஷ்பு காங்கிரஸ்சுக்கே உங்களை விட்டா ஆளில்லைன்னு நிலைமை!
   
வெளிநாடு வந்து பணத்துக்கு முன்னுரிமை கொடுத்து வாழ்க்கையை தொலைச்சு நிக்கிற ஒவ்வொருவனுக்குள்ளும் ஒரு கனவு வாழ்க்கை செத்துக் கொண்டிருக்கும்.
   
அதாவது ராஜா படம் ஓடலன்னா அதுக்கு ராஜா மீசிக் தான் காரணம். ரஹ்மான் படம் ஓடலன்னா டைரக்டர், மத்தவங்க தான் காரணம்... நல்லாருக்கு சார் நியாயம்
   
அடிக்கடி கோபப்பட்டால் கோபத்திற்கு மரியாதை இல்லை!!! கோபமே படாவிட்டால் நமக்கே மரியாதை இல்லை!!!
   
கல்விக்கு சரஸ்வதி, செல்வத்துக்கு லட்சுமி வேலை வாங்கி தர்றதுக்கு தான் தெய்வம் இல்லை..! #ரசித்தது
   
நம் அருமை புரிய சிலரை விட்டு ஒதுங்கி இருப்பதாக நினைக்கின்றோம் ஆனால் அவர்களோ நாம் இல்லாமல் வாழ பழகி விடுகின்றார்கள் என்பதை புரியாமல்!!!
   
I love you என பெண் சொல்லும் போது, I allow you என்பதாகவே புரிந்து கொள்ளப்படுகிறது.!
   
யாரோட உதவியும் தயவும் இல்லாம யாராலயும் முன்னுக்கு வரமுடியாது அப்படி வந்ததா நினைக்கறவங்க அவங்களுக்கு உதவினவங்கள மறந்துடுறாங்க அவ்வளவுதான்
   

0 comments:

Post a Comment