9-டிசம்பர்-2014 கீச்சுகள்




எப்ப 'அன்பே சிவம்' படம் பார்க்கும்போதும் படுபாவிக இந்த படத்தை போயி பிளாப் பண்ணிடானுகளேனு கோபப்படறவங்க மட்டும் இதை RT பண்ணுங்க! #Ktv
   
கடைசிவரை விவசாயத்திற்காவே வாழ்ந்த நம்மாழ்வாருக்கு தரும் குறைந்தபட்ச அஞ்சலி-இத்திட்டத்தை கைவிடுவதுதான் #stopmethaneexplorationinkaveridelta
   
நாங்கள் தமிழர்கள். நாங்கள் உலகுக்கு சோறு போடவே விரும்புகிறோம்.. சோற்றுக்கு பிச்சை எடுக்க அல்ல.. #StopMethaneExplorationInKaveriDelta
   
டேக தீவிரமா கண்காணிச்சுட்டே இருங்கய்யா! சைடு கேப்புல #VjDealingTheSameProblemThisChapterKaththi அப்டினு சொருவீரும் ஒரு க்ரூப்பு :-/
   
திடீர் விவசாயி!! ஆமா நா விவசாயில்ல, இப்ப கூட பேசலனா நாளைக்கு என் பையன் சோத்த சாப்டு வளரமாட்டான்! #StopMethaneExplorationInKaveriDelta
   
சற்று பொறுங்கள், எமக்கான வாய்க்கரிசியையாகினும் கடைசியாய் விளைவித்துக் கொள்கிறோம்...!!! #StopMethaneExplorationInKauveriDelta
   
மீத்தேன்னா தமிழ்ல கொள்ளி வாயு..பேரு கூட சரியாதான் வச்சு இருக்கான் தமிழன். #StopMethaneExplorationInKaveriDelta
   
அவங்க அரிசிய விளைவிக்க கஷ்டபட்டாங்க. நாம அரிசிய வாங்க கஷ்டபடுறோம். எதிர்காலம் அரிசிய பாக்கவே கஷ்டபடும்! #StopMethaneExplorationInKaveriDelta
   
அப்பா ஸ்கூல்ல மியூசியம் போனோம்பா என்னடா கண்ணா பாத்தீங்க ம்..அரிசி,மாசில்லாத தண்ணி அப்றம் விவசாயிகள் #StopMethaneExplorationInKaveriDelta
   
எல்லா ட்ரென்ட்டையும் ப்ரேக் பண்ண அஜித் ரசிகர்களா! இத ட்ரென்ட் செய்ங்க. தல பக்கம் பல தலைகள் திரும்பும். #stopmethaneexplorationinkaveridelta
   
ஒரு கார்பன் நான்கு ஹைட்ரஜன் எடுக்கிறேன் என்று இரண்டு ஹைட்ரஜன் ஒரு ஆக்சிஜனை உறிஞ்சிவிடாதீர்கள் #StopMethaneExplorationInKaveriDelta
   
நாளுக்கு அரைமணிநேரம் மட்டுமே ஒளிபரப்பு என்றிருந்தவரை செய்திகள் பரிமாறப்பட்டன.நாள் முழுதும் ஒளிபரப்பு என்றானபின்,செய்திகள் உருவாக்கபடுகின்றன!
   
தமிழனிடம், விவசாயமே போதுமா? கேஸ் வேண்டாமா?என்று கேப்பது உசுரு போதுமா?அப்போ மசுரு வேண்டாமா?என்பதை போல!.#StopMethaneExplorationInKauveriDelta
   
மக்கள் முதல்வரின் மீது அக்கறை கொண்ட நடிகர்கள் டெல்டா மக்களின் மீதும் அக்கறை கொண்டு போராட்டம் செய்யலாம்! #StopMethaneExplorationInKaveriDelta
   
ஒரு இனத்தை அழிக்கிறது மட்டுமில்ல தனிப்பட்ட மனிதனோட வாழ்வாதாரத்தை அழிக்கிறது கூட படுகொலை தான் !#StopMethaneExplorationInKaveriDelta
   
#StopMethaneExplorationInKaveriDelta டேக் பயனில்லை என்பவர்களுக்கு அண்ணா நூலகம் பற்றிய டேக் கவனம் ஈர்க்கப்பட்டு இன்னமும் நூலகமாகவே இருக்கு
   
சோலைவனங்களை உங்கள் சந்ததிக்கு உருவாக்கித்தராவிட்டால் பரவாயில்லை.பாலைவனங்களை உருவாக்காமல் இரு #StopMethaneExplorationInKaveriDelta"
   
எந்த காரணத்துக்காவும் இந்த டேக் நிறுத்திராதிங்க நமக்கு பதில் சொல்லும் வரை எறும்பு ஊர கல்லும் தேயும்! #StopMethaneExplorationInKaveriDelta
   
சும்மா களத்துக்கு வா கம்மாய்க்கு வானு நொட்ட சொல்லாதீங்கடே இங்க ட்ரெண்ட் ஆனா நேஷனல் சேனல்லாம் கவணிப்பான் #StopMethaneExplorationInKaveriDelta
   
அய்யாவை எரித்துவிட்டு திரும்பியபோது குளித்த நதி அப்பாவை எரித்துவிட்டு வரும்போது காணாமல் போயிருந்தது.! #StopMethaneExplorationInKaveriDelta
   

0 comments:

Post a Comment