3-டிசம்பர்-2014 கீச்சுகள்




சார்ஜ் இருக்கும் நேரத்தை விட சார்ஜர்ல இருக்கிற நேரந்தான் அதிகமாயிருக்கு, கேட்டா ஸ்மார்ட் போனுங்கிறாங்க
   
ஹாலிவுட் படங்களில் நடிக்க விரும்பவில்லை -விஜய் # நோகாம அங்கே நோம்பு கும்பிட முடியாது.கெட்டப் எல்லாம் மாத்தனும்.எதுக்கு ரிஸ்க்?
   
விஜய் = விக்ரம் ,விஷால் ,விக்டரி எல்லாமே வி ல ஆரம்பிக்குது.பொங்கல் ரேஸ் ல யார் வின்? ரேஸ் னா யார் ஜெயிப்பாங்கனு வெளில விசாரிச்சுப்பாருங்க
   
அஜித்துக்கு டான்ஸ் ஆட தெரியாதாம்#குரங்குதான் குட்டிக்கரணம் அடிச்சி க்ளாப்ஸ் வாங்கும் நாங்க சிங்கம் நடந்து வந்தாலே போதும் அரங்கம் அதிரும்:-//
   
இன்று பலரும் சாப்பிடும்போது உணவிலுள்ள மிளகை அலட்சியமா தூக்கியெறியிறோம் ஆனா இந்த குறு'மிளகு தான் இந்தியாவ சிறப்பிச்சதும் அடிமைப்படுத்தியதும்!
   
ஒரு பெண்ணை ஈர்ப்பதற்கு ஆண் அழகாய் தான் இருக்கவேண்டு. மென்பதில்லை கொஞ்சம் அன்பாய் இருந்தாலே போதுமானது 😍
   
கடவுள், அரிசில பேரெழுதி வெச்ச மாதிரி, அஞ்சாறு செண்ட் இடமும் எழுதி வெச்சிருந்தா வாழ்க்கை இன்னும் சிறப்பா இருந்திருக்கும்!
   
தியேட்டர் லிஸ்ட் போட்டு போஸ்ட்டர் ஓட்டுரதுக்கும். தியேட்டர்காரனே வந்து போஸ்ட்டர் ஒட்டுரதுக்கும் வித்தியாசம் இருக்கு. http://pbs.twimg.com/media/B31pJ4SCEAAPd3c.jpg
   
கடவுள் சாப்பாட்டுல பெயர் எழுதுறதெல்லாம் இருக்கட்டும்... அந்த லிஸ்ட்ல எல்லாரோட பெயரும் இல்லாததுதான் பிரச்சனை...
   
இவர்களை காணவில்லை தயவுசெய்து பகிருங்கள். http://pbs.twimg.com/media/B309Xr9CMAECXxu.jpg
   
தோழியை காதலியாக்குவதில் மிகப் பெரிய பிரச்சனை தோழியை இழக்க வேண்டியிருக்கும் என்பதே.
   
மைடியர் லைஃப், "எவ்வளவு அடிச்சாலும் தாங்குற, நீ ரொம்ப நல்லவ" பட்டமெல்லாம் எனக்கு வேண்டாம். கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்து அடிக்கவும். #சொந்தக்கதை
   
இலவச டீவி இலவச மிக்ஸி இலவச கிரைண்டர் இலவச விசிறி இலவச வரன் எப்போது..?!!
   
உலகத்துக்கு உங்களை தெரிய - வெற்றி உலகத்தை உங்களுக்கு தெரிய - தோல்வி
   
எவ்வளவு பெரிய பிரச்சனையை சொன்னாலும் பின்மண்டையில் அடிபட்ட சார்லி போல் 'இது யாரு உங்க ஒய்ஃபா' என்றுதான் கடவுள் கேட்கிறார் !
   
மணல் வீடுகட்டி, அங்கிருந்து நீயும் இங்கிருந்து நானும் வாசல் தோண்டுகையில், கைகள் இணைந்த தருணம், மின்னலாய் வெட்டி சொல்லிற்று வெட்கத்தை!
   
தமிழனுக்கு மறந்து போனது பத்துப்பாட்டு பள்ளி ஆண்டு விழா மேடையில் குத்துப்பாட்டு #ப.பி
   
"என்னடா.. வித்தியாசமா பாக்குற?!" என மோகம் தவிர்த்த பார்வையை சுட்டிக் கேட்கும் பெண்ணைக் காதலிக்க வேண்டும்.
   
உன்னில் துவங்கி உன்னிலே முடிகின்றேன் . வட்டம் சதுரம் என்கிறது உலகம் நானோ நீ என்ற ஒற்றைப் புள்ளியிலிருந்து நகரவேயில்லை
   
வரலாறு மிஸ் வர்ஷா = சுனாமி தினம் வருசா வருசம் எப்போ அனுஷ்டிக்கப்படுது? அல்டிமேட் ஸ்டூடண்ட் = இந்த வருசம் மட்டும் டிசம்பர் 4
   

0 comments:

Post a Comment