1-ஜூலை-2014 கீச்சுகள்

பையனையோ,பெண்ணையோ பெத்து விஜய் டிவியில் கொடுத்தரனும் அவனுங்களே பாட்டு,டேன்ஸ் சொல்லி தந்து ஹீரோ/ஹீரோயின் ஆக்கி கல்யாணமும் பண்ணிவெச்சுடுவானுங்க
   
பூமியுடன் சண்டை எதுவும் இல்லை எனினும் 'போர்' மூலமே பெற வேண்டியிருக்கிறது நிலத்தடி நீரை
   
நடிகர்கள் அழகாக தெரிந்த படங்கள்..ஜீவா- கோ,விஜய்- சச்சின்,அதர்வா-முப்பொழுதும் உன் கற்பனைகள்,சூர்யா-வாரணம் ஆயிரம்,அஜித்-தனி Blog எழுதணும்..
   

30-ஜூன்-2014 கீச்சுகள்

பையனையோ,பெண்ணையோ பெத்து விஜய் டிவியில் கொடுத்தரனும் அவனுங்களே பாட்டு,டேன்ஸ் சொல்லி தந்து ஹீரோ/ஹீரோயின் ஆக்கி கல்யாணமும் பண்ணிவெச்சுடுவானுங்க
   
KFC கோழில புழு இருக்குன்னு தெரிஞ்சுதான, அங்கயே coke, pepsi னு பூச்சிமருந்து தர்றாங்க!
   
எனக்கு ஐந்து வருடம் முன்பிறந்து நீ இல்லாமல்,வாழ முடியாது, என்றுரைத்த பொய்க்காரன்தானே - நீ
   

29-ஜூன்-2014 கீச்சுகள்

விஜய் = எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு.தெரிஞ்சுக்கிட்டவன் ஜெயிப்பான். அஜித் = நியாயமான வெற்றி தான் நிஜம்.புரிஞ்சுக்கிட்டவன் நிலைப்பான்
   
என்னை சூப்பர் ஸ்டாராக தேர்ந்தெடுத்த குமுதத்திற்கு நன்றி _ விஜய் # உண்மையை உலகுக்கு உணர்த்திய தினமணி க்கு நன்றி
   
100கிலோ அரிசி மூட்டைய தூக்குறவனால அத வாங்க முடியாது . . 100கிலோ அரிசி மூட்டைய வாங்குறவனால அத தூக்க முடியாது . . இதான் சார் வாழ்க்கை
   

28-ஜூன்-2014 கீச்சுகள்

ஒருத்தியோடவே வாழ்ந்த ராமனும் கடவுள்… பலபேரோட கூத்தடிச்ச கிருஷ்ணனும் கடவுள்… மொட்டபயலாவே இருக்குற பிள்ளையாரும் கடவுள்… அப்ப நானும் கடவுள்…
   
17 வயதில் கல்வி கடன் 30 வயதில் கல்யாணக்கடன் 40 வயதில் வீட்டுக்கடன் 50 வயதுக்கு மேல் பெத்தகடன் இப்படியே முடிந்து விடுகிறது ஆண்களின் வாழ்க்கை
   
எந்த அரசாங்கமும் சினிமாவுக்கு நல்லது பண்ணலை - கமல் ஹாஸன் பரபரப்பு பேச்சு.# என்னதாண்டா வேணும் உங்களுக்கு?? மானிய விலையில் மண்ணெண்ணையா வேணும்?
   

27-ஜூன்-2014 கீச்சுகள்

"ஆறுதல்" என்பது நமக்கு உண்மையாக இருப்பவர்களால் சொல்லப்படும் சில பொய்கள்!
   
உற்றுப் பார்த்தவுடன் இழுத்து மூடுவீர்கள் என்றால், வீட்டிலிருந்து கிளம்பும்போதே அதைச் செய்யலாமே.
   
சிந்திக்க வேண்டிய விஷயம்தான் ;-((( http://pbs.twimg.com/media/BrCnnW4CUAEPmw8.jpg
   

26-ஜூன்-2014 கீச்சுகள்

பெண்களுக்கு, பனாரஸ் பட்டு காஞ்சி பட்டு சாமுத்ரிகா பட்டு... ஆண்களுக்கு, துன்பப்பட்டு துயரப்பட்டு கஷ்டப்பட்டு...
   
அடுக்கிவைத்த ரெக்கார்டு நோட்டை ஆசிரியர் திருத்தும்போது நம்ம நோட் வர்றதுக்குள்ள பீரியட் பெல் அடிச்சிடனும்னு வேண்டிய நாட்கள் இனிமையானவை
   
பெரிய ஹோட்டல்களை நடுத்தர மக்கள் லேன்டுமாரக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்
   

25-ஜூன்-2014 கீச்சுகள்

பிறந்தநாள் = தமிழ் + இசை = கண்ணதாசன் + எம்.எஸ்.வி -- இயலும் இசையும் ஒரே நாளில் பிறக்க வைத்த இறைவன்:) http://pbs.twimg.com/media/Bq3ME0HIcAAnn1U.jpg
   
மொக்கையா எழுதுனாலும் பெண் என்பதால் பாராட்டி அவர்களை மொக்கையாகவே எழுத வைத்துக் கொண்டிருக்கும் ஆண்கள் உண்மையில் திறமைசாலிகள்தான்
   
நம்ம நாட்ல கடல் நீர குடி நீரா ஆக்குறதவிட , மழை நீர கடல் நீரா ஆக்காம இருந்தாளே பாதி தண்ணி பஞ்சமே வராது #உறுப்படியா_சொல்லுவோம
   

24-ஜூன்-2014 கீச்சுகள்

இரண்டு நாள் ஓய்வுக்குப்பின் தொடரப்போகும் வேலையை விட, மீண்டும் போடப்போகும் வேஷமும், செயற்கை புன்னகைகளுமே திங்கட்கிழமைகளை பாரமாக்குகின்றன.
   
எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்கிறார்கள் சில பெரியவர்கள்....இழுத்துப்போடுவதே வேலையாய் செய்கிறார்கள் குழந்தைகள்!
   
*கிடா* குலசாமிக்கு நேர்ந்து குட்டியாய் வந்து சேர்ந்தது கிடா தோட்டம் துரவெல்லாம் கூடவே அலைந்தது கொல்லைப்புறம் (cont) http://tl.gd/n_1s27p49
   

23-ஜூன்-2014 கீச்சுகள்

எதிரெதிர் திசையில் செல்லும் இரண்டு பேருந்துகளோடும் ஒரே நேரத்தில் பயணிக்கும் வல்லமை வாய்ந்தது வான்நிலா!
   
வீட்டுக்கு ஒரு விஜய் ரசிகரை க்கொண்ட இளைய தளபதி க்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
   
தல அஜித்தின் தன்னம்பிக்கை, மனிதத்தன்மை, சுயமரியாதை போன்றவற்றை உலகுக்கு உணர்த்திய விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
   

22-ஜூன்-2014 கீச்சுகள்

தூத்துக்குடியில் மீனவரசிகரிடம் கைகொடுத்துவிட்டு உடனே சோடாவில் கைகழுவியவனுக்கு மரியாதையெல்லாம் குடுக்க முடியாது.
   
நீ RTகாக திட்றியோ இல்ல வெறுத்து திட்றியோ, தன் மேல விழுற ஒவ்வொரு கல்லும் தானாவே பூக்களா மாத்துற நல்ல மனசு விஜய்கிட்ட இருக்கு.
   
கழுதைகிட்ட 100 ரூவா நோட்ட குடுத்தா அப்புடியே சாப்ட்டுரும். ப்ட் அதுக்கு தெரியாது அதுல 3குயர் பேப்பர்வாங்கி சாப்டலம்ன்னு#ப.பி
   

21-ஜூன்-2014 கீச்சுகள்

இந்தி ஒரு சப்பை மொழி.எவனும் ஒரு மாதத்தில் பேசலாம்.பிறப்பால் தமிழ் அல்லாதவர் தலையால் தண்ணீர் குடித்தால் மட்டுமே தமிழ் பேசுவது சாத்தியம்!
   
மோடி ஆள்வதால் நாங்க ஹிந்தி கத்துக்கறோம்.ஓக்கே.நாளை ஒரு வேளை ஜெ பிரதமர் ஆனால் எல்லோரும் தமிழ் கத்துக்குவீங்களா?
   
குடையின்கீழ் இரண்டு பேருக்குத்தான் இடமிருக்கிறது. உன் வெட்கத்தை வேறு எங்காவது ஒதுங்கச் சொல் .
   

20-ஜூன்-2014 கீச்சுகள்

என்னது அதிகம் பேர் பேசுறதுனால இந்தி தேசிய மொழியா..அப்போ நாட்ல புலிய விட நாய் தான் அதிகமா இருக்கு.. நாய தேசிய விலங்கா அறிவிச்சிரலாமா.
   
செல்போன மேலவச்சா நெஞ்சுவலி வருமாம் கீழவச்சா ஆண்மைகுறைவு ஆகுமாம் பின்ன எங்கதாண்டா வைக்குறது #கயித்தகட்டி_தரதரனு_இழுத்துட்டுதான்_போகனும்
   
ஏம்பா...ரெண்டு நாளைக்கு முன்னாடி மகேஷ் பாபு ஏதாச்சும் லெட்டர் எழுதி மோடிக்கு அனுப்புனாரா???
   

19-ஜூன்-2014 கீச்சுகள்

ஒவ்வோர் இரவிலும் கதை கேட்டு நச்சரிக்கிறாள், ஏதோ ஒரு இளவரசியின் காதல் கதையென பொய் சொல்லி உன்னைப் பற்றியே தினமும் சொல்கிறேன்
   
குமுதம் - விஜய் இரு தரப்புக்கும் ஏதோ லடாய் இருந்துச்சாம் .அதுக்கு சமாதானக்கொடிதான் சூப்பர் ஸ்டார் வாக்கெடுப்பில் விஜய்க்கு சாதகமாம்.
   
நெருங்கி பழகி பின் பிரிதலின் உச்சமாய் யாரோவாகிய அந்த பார்வையை தவிர்த்திருக்கலாம் நீ.
   

18-ஜூன்-2014 கீச்சுகள்

ஒண்ணா மண்ணா கூடவேத்தாணடா சுத்திகிட்டுருந்தீங்க, திடீர்னு ஃபுட்பால்லாம் பாக்க ஆரமிச்சிட்டீங்க ! ;) http://pbs.twimg.com/media/BqRYP6NCAAAPZtV.jpg
   
தமிழர்களால் செதுக்கப்பட்ட ஒட்டு இல்லாத, ஒரே கல்லாலான சங்கிலி தொடர்! பண்டைய கோவில்கள் பறைசாற்றும் தமிழனின் திறமை! http://pbs.twimg.com/media/BqUdPaHCQAEQFyv.jpg
   
கலைஞரும் பெரியாரும் இல்லை என்றால் முந்தாநேத்து எழுதின VAO எக்ஸாம் ஹிந்தில தான் எழுத வேண்டி வந்திருக்கும்
   

17-ஜூன்-2014 கீச்சுகள்

ATMல் பணம் எடுக்கும்போது பணம் வராமல் கணக்கில் குறைந்தால் https://secweb.rbi.org.in/BO/ ComplaintToNodalOfficer.html தளத்தில் புகார் பதியுங்கள்
   
துப்பாக்கி'யோடு பெருமையா சுத்திகிட்டு இருந்த எங்க தலைவா' இப்போ எந்த ஜில்லா'விலும் கத்தி' குத்து வாங்க சக்தி இல்ல... -இது சத்யா'சாதனை காலம்
   
மனதில் உள்ளவற்றை வெளிப்படையாக ஒருவரிடமாவது பெண் பேச முடியுமெனில் அவளை விட அதிர்ஷ்டசாலி வேறு யாருமில்லை.
   

16-ஜூன்-2014 கீச்சுகள்

அம்மாவின் அன்பு: தோசை அப்பாவின் அன்பு: தோசைக்கல் # தோசையின் ருசி தெரியும். தோசைக்கல்லின் தியாகம் தெரியாது.
   
"மகனே, எனக்கு 2நாளா காய்ச்சல், டாக்டர்கிட்ட கூட்டி போடா." "மாத்திரையை போட்டுட்டுப் படுய்யா..Father's day ட்விட் போடுறப்ப டிஸ்டர்ப் பண்ணாத-/
   
அப்பா சிரித்தாலும் அழுதாலும் வெறுத்தாலும் தான் என்றைக்கும் என்றென்றைக்கும் நீங்கள் தான் அப்பா என்நாயகன் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்