1-ஜூன்-2015 கீச்சுகள்

ஒரு முதலாளியை ''வேலையை விட்டுட்டு போயிடுவேன்''னு மிரட்ரளவுக்கு வேலை செய்யனும் அதான் திறமை!
   
இன்று 12.00 pm மணிக்கு புதிய தலைமுறையில் எனது குறும்படம் பரிசுவென்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது! Pl do watch it.. #Max RT pl
   
எதிர்பார்க்கல இல்ல? நான் திரும்பி வருவேன்னு எதிர்பார்க்கல இல்ல? ஆமாங்க்ணா, திருந்தி வருவீங்கன்னு பார்த்தா மறுபடி அஞ்சானாதான் வந்தீக
   

31-மே-2015 கீச்சுகள்

"மாஸ்"னு டைட்டில் வச்சதுக்கே இந்த அடி,3மாசத்துல "புலி" வருது #நானாவுது சைக்கில்ல லைட் இல்லாம வந்தேன் பின்னாடி ஒருத்தன் சைக்கிலே இல்லாம வரான்
   
சூர்யா மாற்றான் எடுத்து இரட்டையர்கதைய ஒழிச்சாரு அஞ்சான் எடுத்து டான் கதைகளை ஒழிச்சாரு இப்போ மாசு எடுத்து பேய்படங்களை ஒழித்தார் #லெஜன்டுடா
   
SUNMUSIC interview நீங்க பண்ண படத்துல உங்களுக்கு பிடிச்ச படம் எது வெங்கட்பிரபு : மாஸ் மங்காத்தானு தான் சொல்வார்னு நம்பிருந்த ஆமைகள் வருத்தம்
   

30-மே-2015 கீச்சுகள்

கவர் வாங்கிட்டு ரிவ்யூ பண்றவங்க பேச்சைக்கேட்டு படத்துக்குபோவதும் ராதிகா பேச்சைக்கேட்டு சென்னை அமிர்தா ல சேர்வதும் 1,
   
தூரத்துல தெரியிதே என்ன நாடு? இந்தியா சார் அங்க போகனும்,விசா ரெடி பண்ணுங்க http://pbs.twimg.com/media/CGKS_E2UIAAEC0V.jpg
   
இப்ப வெங்கட்ட திட்றதால அஜித் ரசிகர்கள் மானஸ்தன்கள் மட்டும் நினைச்சிடாதீங்க தோழர்களே இப்டி தான் கௌதம் who is Thalaனு கேட்டப்ப திட்னானுங்க ...
   

29-மே-2015 கீச்சுகள்

கரும்பு நட்டேன் விற்கவில்லை, கம்பு நட்டேன் விற்கவில்லை, நெல் நட்டேன் விற்கவில்லை. கடைசியில் கல் நட்டேன் விற்றுவிட்டது -விவசாயி👳
   
காய்விடுவதையும்,பழம்விடுவதையும் விரல்களிலேயே வைத்திருக்கிறார்கள் குழந்தைகள்! நாம்தான் மனங்களில் வைத்திருக்கிறோம்.
   
இப்பொழுதும் நம்மிடையே காமராசர்கள் இருக்கிறார்கள்!ஆனால் நாம் தான் அவர்களை ஒரு கவுன்சிலராகக் கூட ஆக்குவதில்லை!
   

28-மே-2015 கீச்சுகள்

நான் சென்னைல இருக்கேனா இல்லை துபாய் 5 ஸ்டார் ஹோட்டல்ல இருக்கேனானு ராதிகா கேட்ட "சென்னை அமிர்தா" காலேஜ் இது தானாம். http://pbs.twimg.com/media/CF_TcxxVEAAm1a4.jpg
   
MCA முடிச்சிருக்கேன்.. எதாச்சும் வேலை இருந்தால் தயவுசெய்து கூறவும்.., #Help_me
   
காசு வெறி பிடித்து அலையும் இளையராஜா! http://indiavaasan.blogspot.in/2015/05/blog-post_27.html?m=1
   

27-மே-2015 கீச்சுகள்

உண்மையான ரசிகர்களின் ஆதரவுதான் சிம்புவை காப்பாற்றி வருகிறது.அதுவே பக்க பலம்.
   
சிம்புவுக்கு ஒரு கோரிக்கை. சில நடிகர்களைப் போல் வாழ்க்கையிலும் நடிக்க கற்கவேண்டும்.
   
தஞ்சையில் நடந்த சோகம்! நடிகர் ஜீவா இதுக்கு பதில் சொல்லியே ஆகனும்! உங்கள் நட்பில் செய்தியாளர்கள் இருந்தால் பகிருங்கள்! http://pbs.twimg.com/media/CF7IN71UgAAbMkE.jpg
   

26-மே-2015 கீச்சுகள்

வெய்யில்ல வேலை செய்யும் விவசாயி கூட புன்் சிரிப்போடு வேலை செய்யறார்.இந்த ஏசி ரூம்ல வேலை செய்யும் பேங்க் ஆபீசருங்க ரொம்ப சலிச்சுக்கறானுங்க.்
   
ஆயிரமாயிரம் உயிர்களை கொல்லும் ஐஎஸ்ஐஎஸ் நாய்கள் முஸ்லீம்கள் என்றால் அந்த வரிசையில் நானில்லை ! எனக்கு அப்படி ஒரு நாய் கூட்டம் தேவையில்லை !!
   
சொந்த ஊர்ல நாலு பேர் கிட்ட அசிங்கபடாமா இருக்கணும்னா வெளியூர் ல நாலு பேர் கிட்ட அசிங்க பட்டு தான் ஆகணும்
   

25-மே-2015 கீச்சுகள்

இந்த முருகதாஸு, விஜய் அண்ணா பேர் சொல்லிட்டு கைத்தட்டுவாங்களான்னு பார்க்கும் போது. ஆடியன்ஸ்: கையெல்லாம் தட்ட முடியாது http://pbs.twimg.com/media/CFxHzKrUkAAjUCm.jpg
   
"தலையோடு நடிச்சேன்" ன்டு சொன்னதுக்கே இப்படியா ?? ப்பா !! அஜீத் என்கிற மனிதர் நிறைய நபர்களை சம்பாதித்திருக்கிறார் 👏👍👍👏👏👍👍👍👏👏👍
   
உனக்கான கைதட்டல் ஒலிக்க நீ விழாவுக்குப்போகவேண்டும், மேடை ஏற வேண்டும் என்ற அவசியம் இல்லை
   

24-மே-2015 கீச்சுகள்

இது தான்பா என்டு . ஓரு பேச்சுக்கு பைனல் வான்னு சொன்னா போற இடத்துக்கெல்லாம் வந்து பீதிய கிளப்பனா எப்படிப்பா #MIvsCSK http://pbs.twimg.com/media/CFoZs6zUgAEVWwn.jpg
   
அடிக்கடி பாரட்டு விழா நடந்தா அது - திமுக ஆட்சி..!! அடிக்கடி பதவி ஏற்பு விழா நடந்தா அது - அதிமுக ஆட்சி..!! தட் ஆல் யுவர் ஹானர்..!!
   
என்னதான் சொல்லுங்க, வாய்சவடால் விட்டு கம்பீரமா நிக்கிறதுல, ரஜினிய விட கேப்டன் பல படி மேல தான்...
   

23-மே-2015 கீச்சுகள்

அழுதுகிட்டே பதவியேத்துட்டு, சிரிச்சுட்டே ராஜினாமா பண்ற மனசுருக்கே அதான் சார் கடவுள் #ஓபிஎஸ்
   
Gayle பாத்துப்பான் AB DE பாத்துப்பான்னு சொன்னீங்களே டா .. ஆனா அவனுங்க வெளிய உக்காந்து மேட்ச் பாத்துட்டு இருக்கானுங்களே டா .. #CSKvsRCB
   
ஹாஹா, ரோஹித்து ரோஹித்து, ஸ்கெட்சு பெங்களூருக்கில்ல, மும்பைக்கு தான் # சிஎஸ்கே ஜிகர்தண்டாக்கள்
   

22-மே-2015 கீச்சுகள்

#WeLovePuli தளபதி ரசிகனாய் நான் தளபதிய ரசிப்பதை விட பிறர் தளபதியை ரசிப்பதை பார்த்து ரசிப்பதே எனக்கு பிடிக்கும். Such a vid is that.
   
உணவின் ருசியை அதிகரிக்க Monosodium glutamate அனுமதிக்கப்பட்ட அளவு 0.01 PPM மேகி நூடூல்ஸில் இது 17 PPM # மழலைகள் ஜாக்கிரதை.பெற்றோர்கள் கவனம்
   
1st மார்க்- 41 பேர் 2nd மார்க்-192 பேர் 3rd மார்க்- 540 பேர் இதுக்கு விஜய் அவார்ட்ஸ்சே பரவாயில்ல போல! #10thresults #SSLC
   

21-மே-2015 கீச்சுகள்

ஒரு ஏழை நண்பனை தான் ஒரு ஏழை என்று உணரவைத்திடாத நண்பர்களே சிறந்த நட்பிற்கு அடையாளம்!
   
ஹீரோஸ்னா கை குடுத்துட்டு போயீடுவாங்க ஆனா நீங்க ஒருத்தர் மட்டும்தான் அண்ணா எங்க தோள்மேல கை போட்டு பேசுவீங்க #WeLoveUAnna #Touched #WeLovePuli
   
இதே மோடி இந்திய கிராமங்கள் பூரா சுற்றுப்பயணம் செஞ்சு.விவசாயிகளை.சந்திச்சு ஊக்கப்படுத்தி இருந்தா விவசாயம் செழிக்கும்.இந்தியா கொழிக்கும்.
   

20-மே-2015 கீச்சுகள்

பத்து நாட்களாய் கிரின் டீ சாப்பிட்டு அரைகிலொ குறைந்து விட்டது # நான் டீத்தூளை சொன்னேன் :(
   
உண்டியலில் காசு போடத்துடிக்கும் குழந்தைக்கு வேண்டுதல்கள் இருப்பதில்லை
   
நாம "ஐ லவ் யு" சொன்னா அத மதிச்சு அதே சந்தோஷத்தோட திரும்ப சொல்ற ஒரே ஜீவன்.? "டாக்கிங் டாம்🐱'' தான்😥😥
   

19-மே-2015 கீச்சுகள்

+2 வில் 1124 மதிப்பெண். தாய் தந்தையற்ற சகோதரி. படிக்க உதவி கேட்டு நிற்கிறார். நல்ல உள்ளங்கள் உதவலாமே.! #PlsRT http://pbs.twimg.com/media/CFRMpgbWEAApP5a.jpg
   
தமிழன் அழியலாம் - தமிழ் அழியுமா ? உடல் அழியும் - உயிர் அழியும் - அழியாது எங்கள் உணர்வு !!! #RememberingTamilGenocide http://pbs.twimg.com/media/CFSEfakVIAA1uHv.jpg
   
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 50 ஆண்டுகளில் நடக்காததை 5 ஆண்டுகளில் நடத்தி காட்டுவோம் -அன்புமணி # திரிஷா கல்யாணமா? வாலு ரிலீசா? எதை சொல்றாரு
   

18-மே-2015 கீச்சுகள்

மட்டன் வெட்டுவியே உனக்கு இப்ப மல்லிகை ருசிக்கிறதா... மீச முறுக்குவியே கூந்தல் வாசம் மணக்கிறதா... #maari audio may 25 th .. Teaser 20 th
   
எய்ம் பண்றான், அம்பு விட்றான், மிஸ் ஆயிடுது, ஜஸ்ட் ஒரு நூல்ல மிஸ் ஆகிடுது http://pbs.twimg.com/media/CFMZ0MfUgAAYv87.jpg
   
டிடி கத்துறானு சேனல மாத்துனா சன்டிவில சூர்யா அதுக்கும் மேல.. பார்க்குரியா.. பார்க்குரியானு கத்துறான் பார்க்க முடியாது போடா..:-/
   

17-மே-2015 கீச்சுகள்

இந்த குழந்தையை அவினாசி-பூண்டி பாலம் அருகே பெற்றோர் தொலைத்துவிட்டனர். தகவலுக்கு அவினாசி மகளிர்காவல்நிலையம் அணுகவும் http://pbs.twimg.com/media/CFEM6x7UkAAPRSG.jpg
   
முப்பது வருசமா பொண்ணுங்க தானே மொதோ மார்க்கு அப்பறம் ஏன் எல்லா I.A.S-ம் ஆம்பளையாவே இருக்கானுக..? மனப்பாடம் பண்ணி கலெக்டரு ஆக முடியாதுல்ல
   
அவினாசி அருகே பூண்டி பலத்தின் அருகே பெற்றோர் தொலைத்துவிட்டனர். விபரத்திற்கு அவினாசி மகளிர் காவல் நிலையத்தை அனுகவும் http://pbs.twimg.com/media/CFGv1aeUgAAQ8GN.jpg