1-ஏப்ரல்-2014 கீச்சுகள்

தாய் என்பவள் மற்றநாளில் நிலாவைக் காட்டியும்,அம்மாவாசையன்று "நீ சாப்டாதான் நிலா வருமாம்"என்று சொல்லியும் தன் குழந்தைக்கு சோறூட்டி விடுகிறாள்.
   
மூன்றாவது முறையாக இன்று உலக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய பெண்கள் கபடி அணி. இதை கட்டாயம் வாழ்த்த வேண்டும். பெருமையா இருக்கு !
   
சம்பந்தமே இல்லாமல் திபெத்தில் இருந்து வந்தவன் சுதந்திரமாக நடமாடுகிறான், இரத்த பந்தம் உள்ள இலங்கை தமிழன் அகதி முகாம்களில் # இந்திய இறையான்மை
   

31-மார்ச்-2014 கீச்சுகள்

யார் தயவும் இல்லாம உழைத்து முன்னுக்கு வந்தவங்கள சொல்லுன்னா அஜித்ன்றான், ஆர்யான்றான், ராப்பகலா கஷ்டப்பட்ட தன் தகப்பனை மறந்து விட்டு.
   
கர்த்தர் பூமிக்கு வந்தா எனக்கு ஏதாவது தா'னு கேட்க்க மாட்டேன்,அரை மணி நேரம் 'ஆசிர்வாதம்' சேனல் பாருய்யானு சொல்லுவேன் #உஸ்ஸ்ஸ்,முடில
   
ஜாதி மதம் இனம் மொழி ஆண் பெண் வயது இதையெலாம் கடந்து நம்மை இணைத்திருப்பது #Thala என்ற மந்திரசொல், அவர பத்தி பேச ரசிகை என்ற அடையாளம் போதும்.
   

30-மார்ச்-2014 கீச்சுகள்

டெலிபோனை கண்டுபிடித்தது ஏதேனும் ஒரு அம்மாவாக இருந்திருந்தால் 'ஹலோ'க்கு பதிலாக 'சாப்பிட்டியா' இருந்திருக்க கூடும்.
   
அம்மா சொன்ன போது புரியாதவை எல்லாம் அம்மாவாய்ச் சொல்லும்போது தான் புரிகிறது!!
   
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள். http://t.co/3Gjb1HyLxq
   

29-மார்ச்-2014 கீச்சுகள்

நம் வார்த்தைகளே தவறாகப் புரிந்துகொள்ளப்படும் இடங்களில், மௌனங்கள் இன்னும் மோசமாகவே மொழிபெயர்க்கப்பட்டு விடும்
   
இதே டீம் தான் ஏசியா கப்ல குத்து வாங்குச்சு, ஏன்னா அப்ப டீம் இருந்துச்சே தவிர தோனி இல்ல :-)
   
கோவத்துல மொபைல்ல தூக்கி எறியும் போதும் கூட, சரியா பஞ்சு மெத்தைல எறியுறாவங்ககிட்ட தான் கத்துக்கணும் கோபத்திலும் நிதானமாய் இருப்பது எப்படின்னு
   

28-மார்ச்-2014 கீச்சுகள்

தயாளுவுடன் அழகிரி திடீர் சந்திப்பு.#எங்க உன் புருஷன்? //ராத்திரி பூரா குளிர் ஜுரம்.தூங்கிட்டாருப்பா // 7 மணிக்கே அப்படி என்னடா தூக்கம்.!
   
ஊழல்ல சம்பந்தப்பட்ட டீம்ஸ் ஆட கூடாதா ?? அப்போ ஊழல்ல சம்பந்தப்பட்ட எந்த கட்சியும் எலெக்சன் ல நிக்க கூடாதுன்னு தடை செய்ய முடியுமா ??
   
விஜயும் , சூர்யாவும் தூக்கி குப்பையிலிட்ட யோஹன்/துருவநட்சத்திரத்தை தான் இப்போது தல55 என கொண்டாடுகிறார்கள் வாக்மேன் ரசிகர்கள்
   

27-மார்ச்-2014 கீச்சுகள்

பசங்க குரூப்புல ஒரு பொண்ணு இருந்தா அது சென்னை, பொண்ணுங்க குரூப்புல ஒரு பையன் இருந்தா அதுதான் பெங்களூரு :-/
   
அங்கிள் நீங்க வேணா உங்க படத்துக்கு "தொந்தி" னு டைட்டில் வெச்சுகோங்க , அதன் உங்களுக்கு பொருத்தமா இருக்கும்
   
துப்பாக்கிக்கு ஒரு குழல் - ஒரு விஜய் (சிங்கிள் ஆக்ட் ) கத்திக்கு இரண்டு முனை , So இரண்டு விஜய் ( டபுள் ஆக்ட் )
   

26-மார்ச்-2014 கீச்சுகள்

மனைவியை விட அழகான பெண்ணை சைட் அடிக்கக் கூடாது என்பது முதல் பாடம்; மனைவியை விட அழகான பெண்ணே கிடையாது என்பது கடைசிப் பாடம்.
   
காதலி என்பவள் காதலன் சொல்வதைத் தவிர்த்து மற்ற யார் எது சொன்னாலும் உடனே நம்பக்கூடியவள் !!
   
கட்சிக்காக மகனையே தேர்க்காலில் இட்ட நவீன மனுநீதிச் சோழனே!! ;-)) #அடிங்கடா ஃப்ளக்ஸ
   

25-மார்ச்-2014 கீச்சுகள்

விஜய் டீவி சிகரம் தொட்ட பெண்கள் விருது இலக்கியத்திற்காக எனக்கு கிடைத்திருக்கிறது.விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் விருதை வழங்கினார்..
   
பிறந்த வீட்டில் அப்பாவின் அன்பும், புகுந்த வீட்டில் கணவனின் அன்பும் முழுமையாக கிடைக்க பெற்ற எந்த பெண்ணும் பெண்ணியம் பேச விழைவதில்லை
   
இன்னுமா எறும்ப சுறுசுறுப்புக்கு உதாரணமா சொல்றீங்க? பிள்ளையை பள்ளிக்கும், கணவனை ஆஃபீஸுக்கும் அனுப்பும் பரபரப்பில் ஒரு தாயை பார்த்ததில்லையா?
   

24-மார்ச்-2014 கீச்சுகள்

இணைய தீவிர(வி)வாதிகள் என்ற ஒரு கூட்டம் உண்டு. எதையும் எல்லைமீறி ரசிப்பது இவர்களது பொதுகுணம்.அதென்ன எல்லை என (cont) http://t.co/3y69oeFurC
   
ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு நல்ல குணமேனும் இருக்கத்தான் செய்கிறது ..அதை கண்டுகொள்ளும் அவகாசம் அடுத்தவருக்கு எளிதாக வாய்ப்பதில்லை
   
ஜீதமிழ்ல ஞாயிறு 4மணிக்கு பட்டத்துயானை படம்னு சென்னை முழுசும் போஸ்டர் ஓட்டிருக்கானுக! #யாரும் பார்த்திரகூடாதுனு விழிப்புணர்வு போஸ்டர் போல!
   

23-மார்ச்-2014 கீச்சுகள்

அட இளங்குருத்துகளா, இந்தி எதிர்ப்பில்லடா, இந்தித்திணிப்பு எதிர்ப்பு, ரெண்டுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்டா!Stop branding Tamils
   
T20 மேட்ச்ல வேற நாட்டு தேசியகீதம் பாடும் போது மட்டும் ஹாரிஸ் ஜெயராஜ்க்கு பக்குன்னு இருக்கும் எங்க கண்டுபிடிச்சுடுவாங்களோ
   
ஒரு காலத்தில் குழந்தைகளுக்கு செல்லம் கொடுத்து கெடுத்தோம் இப்போது செல் போஃன் கொடுத்து கெடுக்கிறோம்.
   

22-மார்ச்-2014 கீச்சுகள்

அதான் தோத்துட்டீங்கள்ல இப்பவாச்சும் சொல்லுங்கடா எங்க அந்த மலேசியா ப்ளைட்ட ஒளிச்சு வெச்சிருக்கீங்க?
   
எவ்வித தயக்கமுமின்றி ஒரு பெண் நம்மிடம் பேசுகிறாள் என்றால் நம்மை முழுமையாக நம்பகிறாள் என்றர்த்தம்.
   
இனி ஸ்கூல் போக வேண்டிதில்லன்னு சந்தோசப்படும் 12th மக்களுக்கு, வாழ்வின் ஆகச் சிறந்த மகிழ்ச்சியான காலம் முடிந்துவிட்டது என்று எப்படிச் சொல்வது
   

21-மார்ச்-2014 கீச்சுகள்

அவசரம்: என் நண்பரின் தாய் கடந்த புதன்கிழமையிலிருந்து காணவில்லை... பகிர்ந்து உதவுங்கள் நண்பர்களே_/|\_ http://t.co/UjAIdUvhmm
   
வெண்பொங்கல்ல போடுற மிளகுயெல்லாம் நமக்கே வரும் ஆனால் சக்கரை பொங்கல்ல போடுற முந்திரி திராட்சை ஒன்னுகூட நமக்கு வராது இதுதான் வாழ்க்கை..!
   
எல்கேஜில சேர்க்க குழ்ந்தையை கூட்டிட்டு போனா,குழந்தை எதுவரைக்கும் படிச்சிருக்குனு கேக்குறாய்ங்க!அடப்பாவிங்களா!!!
   

20-மார்ச்-2014 கீச்சுகள்

நண்பர்களே ! இதுவரை நீங்கள் பழகிய பிரசன்னா முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய கோணத்தில் ஒரு மகிழ்வான செய்தியை (cont) http://t.co/pYFD9nGEiU
   
நிலம் வைத்திருப்பவர் பணக்காரர் எனில் நலம் வைத்திருப்பவர் பெரும்பணக்காரர்:)
   
இன்று என் மகளின் பெயர் சூட்டு விழா இனிதே நிறைவுற்றது. மகளின் பெயர் " வெண்பா"
   

19-மார்ச்-2014 கீச்சுகள்

நண்பன் ரத்ததானம் செய்ய அழைத்தான்! நண்பன் கிரீஸ்துவன் நோயாளி முஸ்லிம் நான் ஹிந்து! பெருமை கொண்டேன் நான் ஒரு இந்தியன் என்று சொல்ல!
   
இந்திய நாட்டில் ஏழைகள் ஆப்பிள் உண்ண, உடம்பு சரி இல்லாமல் போக வேண்டியிருக்கிறது !!
   
பத்துமணிக்கு கறியெல்லாம் வித்துபோகுது,சும்மா இருக்குற நேரத்துல சந்கீதமாவது கத்துகலாம்னு உங்க வீடுதேடி வந்துருக்கேன் http://t.co/f3Q1xqNfqQ
   

18-மார்ச்-2014 கீச்சுகள்

இருவரி சிறுகதை - தொலைதூரகிரகத்தின் குழந்தை ஒன்று, விளையாட பொம்மை கேட்டது. பூமியில் விமானம் ஒன்று காணாமல் போனது.
   
பிரபஞ்சம் எவ்வளவு சின்னது என காட்டியது WWW பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என காட்டியது MH370.
   
ரெண்டு பேர் தெலுங்குல பேசினா தெலுங்கர், மலையாலத்துல பேசினா மலையாலி, கன்னடத்துல பேசினா கன்னடர், ஆங்கிலத்துல பேசிக்கினா தமிழர்! வாழ்க தமிழ்!
   

17-மார்ச்-2014 கீச்சுகள்

கவிதையை பரிசாக கேட்டாள் நான் அவளுக்கு முகம் பார்க்கும் கண்ணாடியை பரிசாக அளித்துவிட்டேன் . அதில் உன்னையே பார் என . . . நீயே ஒரு கவிதை தானே?
   
தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு ஈழமே ஒரு பெரிய விசயம் இல்லைன்றப்ப குஜராத் படுகொலைகள எல்லாம் விளக்கி... உஸ்ஸ்ஸ்
   
யாரு அந்த அஞ்சாவது ஆளு ? யாருக்கும் அஞ்சாத ஆளு... ஒன்னு இல்ல ரெண்டு "55" #Thala55