7-டிசம்பர்-2014 கீச்சுகள்
எல்லாரையும் உறவுமுறை வச்சுக் கூப்பிடுறதுதான் நம்ம ஊர் சிறப்பு. எல்லா இடத்திலேயும் அவர் Santa Clausதான். நம்ம ஊர்லதான் கிரிஸ்துமஸ் தாத்தா :-)
   
நேற்று மாலை கார்த்திகை தீபம் ஏற்றிய அடுத்த சில நிமிடங்களில் எங்கள் திருவண்ணாமலை நகரம். http://pbs.twimg.com/media/B4MHFagCYAAHNR5.jpg
   
ஷங்கர் = டீசர் இவ்ளவ் ஷார்ப்பா இருக்கும்னு நீங்க சொல்லவே இல்ல? கவுதம் = சுனாமி எப்பவும் சொல்லிக்கிட்டு வராது சார்!
   
வாழ்நாள் முழுக்க பாத்திட்டு இருக்க போறோம்னு தெரியாமல்,ஒரு முகத்தை ஈர்க்கப்பட்டு 2 முறை திரும்பி பார்த்து தொலைத்த நாள் இன்று :-))))))
   
காதல் அழிவதில்லை முடிஞ்சதும் ஆழ்வார் போட்றான் கேடிவி காரன். சனிப்பொணம் தனியா போகக்கூடாதுனு ப்ளான் பண்ணிட்டான் போல!
   
சில பதில்களை சொல்வதற்கு அதிக நேரம் ஆகாதெனினும் கேட்பவர்கள் மறக்க அதிக நாட்கள் ஆகும் என்பதாலேயே சொல்லப்படுவதில்லை
   
கோடை காலத்து கடவுள் வாட்டர், குளிர் காலத்து கடவுள் ஹீட்டர்
   
என்னயா பன்னான் என் கட்சிக்காரன்? ஒரு மெல்லிசான கோடு போட்டிருக்கான்.. அதுக்கு இப்படியா நாலு நாளா வெச்சு அடிப்பீங்க.;/ http://pbs.twimg.com/media/B4JCbtWCAAA7iIe.jpg
   
நகம் கடிக்கவும், பேனா மூடிய ஆராயவும், விட்டத்துல இருக்கும் ஓட்டைய எண்ணவும் உருவாக்கப்பட்ட இடம் தான் எக்சாம் ஹால்!
   
ஒரு சிலருக்காக என்னுடைய விருப்பங்களை குழி தோண்டி புதைக்க வேண்டும் என்றால், அந்த ஒரு சிலரை இழந்து விடுவதே நிம்மதி...
   
லிங்கா டிவி ப்ரோமோஸ் எல்லாத்துலையும் LYCA பெயர் வருதே? ஏம்பா இந்த தமிழன உணர்வாளர்கள் யாருமே போர் கொடி தூக்கல? அட டுவிட்டர்லையும் தான் ;-//
   
பொறுப்பு அதிகம் உள்ள ஆண், எளிதில் கோழை பட்டத்தை பெற்றுவிடுகிறான்.
   
எப்போதும் ஓர் சோகமான மனநிலையை வலுக்கட்டாயமாக உருவாக்கி கொள்பவர்கள் சுற்றியிருப்பவர்களை சந்தோஷமான சூழலில் இருக்க விடுவதில்லை!
   
ஆண் தனக்காக வாழும் நேரம் குறைவே! அதிலாவது அவன் அவனாக இருக்கட்டுமே!
   
விவசாயம் தொழில் மட்டும் அல்ல அது ஒரு கலை.! உழவன் ஒவ்வொரு நாற்று நடும் போது தன்னுடைய நம்பிக்கையையும் நடுகின்றான்..!!
   
ஒரு பொண்ணு பொறக்குறப்ப கூடவே ஒரு அப்பாவும் பொறக்குறாரு..பொண்ணுங்க வேகமா வளர்ந்துடுறாங்க..சில அப்பாங்கதான் குழந்தையாவே இருந்துடுறாங்க ;)
   
நுனிநாக்கு ஆங்கிலம் கற்றுக் கொள் தவறில்லை! ஆனால் தமிழ் ஐ சரியாக பேச தெரியும் என்று கர்வம் கொள்.
   
சாதாரணர்களும் பிரபலம் ஆகலாம் எனக் காண்பித்ததோடு, பிரபலங்களும் மிகவும் சாதாரணமானவர்கள் என்று காட்டிக்கொடுத்து விடுகிறது இணையம்
   
22வருடங்களாக நடிகனாக முயற்சிக்கும் ஒரு உயிரினத்தின் சோகக்கதை... #AnilaiArindhaal http://pbs.twimg.com/media/B4IyzSPIIAAb3cf.jpg
   
இத எடுத்தவன் சும்மா இருக்கான். :-( https://www.youtube.com/watch?v=qBJ_UpyQw_s&sns=fb #படம் கூட வேணாண்டா இது மாதிரி ஒரு டிரைலர் எடுங்கடா பாப்பம்
   

0 comments:

Post a Comment