29-டிசம்பர்-2014 கீச்சுகள்




1நாளைக்கு 2 தடவ ஏழரைய சந்திக்கிற கடிகாரம் நல்லாதான் ஓடுது... 30 வருஷத்துக்கு ஒருக்கா ஏழரைய சந்திக்கிற நாமதான் பரிகாரத்த தேடி ஓடுறோம்...!
   
தல ஃபேன்ஸ கடுப்பேத்த, youtubeல EA ட்ரைலர் வராம தடுத்திட்டேன் என்னடா பண்ணின? நெட் கனக்சன புடுங்கி விட்டுட்டேன் #sorryforeverythink
   
ஹாரிஸ்க்கு இசை எங்க இருந்து வருதுனு கேட்டாலே பதில் தெரியாது… அவரு கிட்ட போய் trailer எப்ப வரும்னு கேட்டு உக்காந்திருக்காங்க பாரு……
   
ஒரு பெருங்கூட்டத்துக்குள் இருந்தும் நாம் தனிமையை உணர்ந்தோமேயானால் அது நமக்கான இடமில்லை!
   
எவ்வளவு சண்டை வந்து பேசாமல் இடைவெளி விட்டு பிரிந்து இருந்தாலும் நம்மை அடுத்தவரிடம் விட்டுக்குடுக்காத உறவோ தோழமையோ வாழ்வின் மிகப்பெரிய வரம்!
   
பழைய பேஷண்ட் ரவிக்குமார டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க.. அப்டியே புது பேஷண்ட் விஷால அட்மிட் பண்ணிருங்க.. #EvanaIrundhaalumKaariThuppuvom
   
படியில் இறங்கும் போது கால் இடறி விழப்போன குழந்தை தனக்குத் தானே 'பாத்து, பாத்து'ன்னு சொல்லிக்கிது :)))
   
தோனிக்கு விளையாடத்தெரியல/மோடிக்கு ஆட்சி நடத்த தெரியல/ரஜினிக்கு நடிக்கத்தெரியல/ ஜாக்குக்கு ட்விட்டர டிசைன் பண்ணத்தெரியல-சரி நீபோய் புடுங்கேன்
   
தல தீபாவளி தல பொங்கல் பார்த்திருப்ப தல புத்தாண்டு பாத்திருக்கியா அடுத்த வருஷம் பார்ப்ப !
   
ஸ்வட்டர், மப்ளர் எல்லாம் மனைவிக்கும், குழந்தைக்கும் கொடுத்துவிட்டு துண்டை கட்டிக்கொண்டு பைக்கை ஓட்டிச் செல்லும் தகப்பன் உண்மைக் கடவுள்.
   
உன் பேரு என்ன? செந்தில்குமார் ங்கண்ணா! பேரு ரொம்ப மொக்கையா இருக்கே? நன்றிங்ணா.நம்ம பேரு என்னங்க்ணா? மாடசாமி அடேங்கப்பா.மார்வலஸ்
   
ஒரு விமர்சனம் சொல்றதுக்கே முகத்துல நவரசத்தையும் கொண்டு வராப்ல! இவருக்கு ஒரு அவார்டு பார்செல்... :) http://pbs.twimg.com/media/B586odJCIAEt6D1.jpg
   
ராம்கோபால் வர்மா எவ்ளோ பெரிய டைரக்டர் தெரியுமா?? எங்க அவர் எடுத்த ஒரு படம் பேர் சொல்லு போடா போடா துப்பாக்கிடா #yennaiArindhalTrailerFeast
   
பெவிலியன்ல இருந்து பிட்சுக்கு நடக்கிற நேரத்தை விட, பிட்சுல இருக்கிற நேரம் ரொம்ப குறைவா இருக்கு # தோனி
   
ஞாயிறு மதியத் தூக்கங்களின் இன்பமே உறங்கி எழுந்தபின் 'மாலையா காலையா' என திருதிருவென விழிக்குமொரு குழந்தையின் மனநிலைதான்
   
சில பெண்களுக்கு அழகு இருக்கிறதே என்கிற திமிர். மற்ற பெண்களுக்கு திமிராவது இருக்கட்டுமே என்கிற திமிர்.
   
தொட்டதுக்குலாம் கோவிப்பதில்லை அவன்; தொடாமலிருப்பதற்கு மட்டுந்தான் :)
   
கண்ணை காப்பது இமை, உன் தாயை காப்பதில் என்ன சுமை... -ஆட்டோ வாசகம்.. #நாடி நரம்பெல்லாம் ஆர்டி வெறி ஊறின ஒருத்தன் தான் இதை எழுதியிருக்கனும்...
   
குழந்தைகளுக்கான மருந்துகளை இனிப்பாக தயாரிக்க தெரியாமல் ராக்கெட் விட்டு என்ன பயன்.
   
கங்கை அமரன் யாராவது பாடுறதை ரசிக்கும் போது கைல ஒரு பெயின்டிங் ப்ரஷ்ஷைக் கொடுத்து எதாவது சுவருக்குப் பக்கத்துல கொண்டு விட்டுடணும்;-))
   

0 comments:

Post a Comment