1-ஜூன்-2014 கீச்சுகள்




தமிழரா பிறந்துட்டு எனக்கு தமிழ் தெரியாதுன்னு சொல்றதும் எனக்கு என் அப்பன் பேரு தெரியாதுன்னு சொல்றதும் ஒன்னு தான்…
   
இன்விடேஷன்ல மாப்பிள்ள பேர் இருக்கோ இல்லயோ தன் பேர் இருக்கான்னு பாக்றவன் சொந்தக்காரன், பத்திரிகையே வைக்கலன்னாலும் முதல் ஆளா வர்றவன் நண்பன்
   
பேச்சிலர் ரூமுக்கெல்லாம் காவல் தெய்வம் வாசல்ல கெடக்குற சாக்சுதான்.
   
காதுக்கே கேட்காத அளவுக்கு கமுக்கமா பேசுபவள் காதலி .. காது குடுத்து கேக்க முடியாத அளவுக்கு கண்டமேனிக்கி பேசுபவள் மனைவி ..
   
இளையராஜாவை உதாசீனம் செய்யும் எல்லோரும் ஒரு நாள் அவரிடம் திரும்புவீர்கள். நாங்கள் இப்போதே அவரிடம் இருக்கிறோம். அவ்வளவு தான் வித்தியாசம்.
   
எங்க தாத்தா சுதந்திரத்துக்காக ரொம்ப போராடினவங்க. "அப்புடியா? பரவால்லயே?" "ஆமா. ஆனா. கடைசி வரை பாட்டி தரவே இல்ல"
   
அழுக்கடைந்த சட்டை நாலு நாள் தாடி குடித்து சிவப்பேரிய கண்கள் கர்ப்பிணி ஒருத்திக்கு சட்டென எழுந்து தன் இருக்கையை பேருந்தில் கொடுத்தானே பேரழகன்
   
ஏமாற்ற எல்லா வாய்ப்புகளிருந்தும் நேர்மையாய் இருப்பவர்கள் ஏமாளிகளாகி விடுகின்றனர்
   
தமிழர்களின் வரலாற்றுக் கருவூலமான யாழ் நூலகம் சிங்கள அரக்கர்களால் எரிக்கப்பட்ட நாள் இன்று :( #May31 #1981 http://t.co/FeX1GQpm8Z
   
காஞ்சுபோன சப்பாத்தி சாப்பிடற உங்களுக்கு அவ்ளோ இதுனா.ஒரே மாவுல இட்லி,தோசை,ஊத்தப்பம் ,ரோஸ்ட்னு விதவிதமா சாப்பிடற எங்களுக்கு எவ்ளோ இருக்கும்.
   
உலகிலேயே அதிகமுறை நடித்துக்காட்டப்பட்ட நாடகம் -வயித்து வலி #பள்ளி குழந்தைகள்
   
விஜயின் பெஸ்ட் மூவி கில்லியாம் அஜித்க்கு அப்படி எதுவும் இல்லியாம் #அடுத்தவன் அழுக்கு ஜட்டிய ஆட்டையப்போட்டு அணிவதற்கு அம்மணமாய் திரிவதே மேல்!
   
ட்விட்டரை பற்றி நன்கு தெரிந்தவனுக்கு ட்விட்டரை தவிர வேறெதுவும் பெஸ்ட் என்ட்டர்டெயின்மென்ட் இருக்காது.
   
புகை பிடித்தவனின் புகைப்படம் புகை பிடிக்கிறது -ஊதுபத்தி #இன்று புகையிலை எதிர்ப்பு தினம்
   
ஒரு புத்தகத்த முழுசா வாசிச்சு முடிக்கிறது நமக்கு கிடைச்ச வெற்றி , வாசிச்சத இன்னொருத்தர் கூட பகிர்ந்துக்கிறது புத்தகத்துக்கு கிடைச்ச வெற்றி.
   
ஹா ஹா ஹா.. சச்சின் ஆல்வேஸ் எ கிரிக்கெட்டர்! வீட்லயும் பழக்கதோஷம் விடல... :-) http://t.co/gC9nBivgw9
   
சினிமா நடிகன்னா இவன் நடிகன். http://t.co/V5Fvm6KfsF
   
என்னை ஜெராக்ஸ் எடுக்க முடியுமா ? என்றாள்.பத்து மாதம் ஆகும் பரவாயில்லையா என்றேன். வெட்கப்படுகிறாள் #tweetlikekaruppu
   
ஆண்களுக்கு ஆடைகளில் வெரைட்டி குறைவென்பது பெண்களின் ரசனையும் சம்பந்தப்பட்டது:)
   
புரண்டு படுத்தால் கலைந்துவிட கூடுமென தூக்கத்தை கூட தொலைத்த தெய்வம் தாயல்லவா
   

0 comments:

Post a Comment