தமிழரசி @barathi_ | ||
இறவா வரம் கேட்ட யாரோ ஒரு அரக்கன் தான் பிளாஸ்டிக்கா பிறந்திருக்கனும்! | ||
மின்னல்சுதா @sweetsudha1 | ||
அம்மாக்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு - கவலைப்படுவது !! | ||
தேவா © @DeventhiraM | ||
விஜய்யும், Csk வும் ஒன்னு தான் தோல்விகள் வெகு சில மட்டுமே ஆனால் அந்த தோல்விக்காக எதிரிகள் ஏங்குவார்கள் தோற்றதும் அதிக விமர்சிக்க படுவார்கள் | ||
ஜப்பான் ரகு® @japan_raghu | ||
மழைநீர் சேமிப்பு ! இதை பிரிண்ட்அவுட் எடுத்து கிராமபுற மக்களுக்கு தரலாமே! http://t.co/sEvEzEnjh0 | ||
சிக்கல்காரன் @ThowfiqS | ||
செத்துட்டான்னு நெனச்ச சொந்தக்காரன் நாளைக்கு போன் பண்ணுவான் பாருங்க,என் பொண்ணு 1130மார்க்,உன் பையன் எவ்ளோனு #மீள் | ||
Angel Lin @Lin31183 | ||
யார் புன்னகையை திருப்பி அளிக்க முடியாவிட்டாலும் குழந்தைகளின் புன்னகையைப் புறக்கணிக்காதீர்கள் ... பாவம் உலகம் சுகமானது என நம்புகிறார்கள் ...! | ||
கோட்டிக்காரன் @shanth_twits | ||
வெகு யதார்த்தமாய் ரூபாய்த்தாளில் காணும் "ஐ லவ் யூ" எனும் வாசகம் படிக்கும் ஒவ்வொரு பொழுதிலும் என்றோ அவள் சொன்ன குரலில்தான் வாசிக்கிறது மனது.. | ||
ஜெனிஷா @jenisudha | ||
ஒரு உறவை முறித்துக்கொள்ள பொய்களை விடவும் உண்மைகளே அதிகம் காரணமாகின்றன ! | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
சென்ரல் ரயில்நிலைய குண்டுவெடிப்பு பற்றி துப்பு தெரிந்தால் 044-22502500 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம், 5லட்சம் பரிசு-காவல்துறை அறிவிப்பு. | ||
கோகுல்பிரசாத் @kabulivala | ||
ஒரு பெண் ஒரு பருவத்தில் அழகாக இருப்பாள்.பருவத்திலும் ஒரு பொழுதில். பொழுதிலும் ஒரு கணம் தான். ஆண் அக்கணத்துக்காகவே சாகிறான் | ||
லிங்க்கூ @Linkkoo | ||
ஹா ஹா RT @DMariappan ஜல்லிகட்டு, கல்யாணம் 2லயும் வளர்க்குறவன் எஸ்கேப் ஆயிருவான், அடக்குறவனுக்கு தான் உசிர் போயிரும் | ||
♥பொன்குழந்தை♥ @kaavkaus | ||
உனக்குப் பிடித்தவர்களின் தீய குணங்கள் உன் கண்ணுக்கு தெரியாது..... உனக்குப் பிடிக்காதவர்களின் நல்ல குணங்கள் உன் கண்ணுக்கு தெரியாது..... | ||
காட்டுபயல் @ikaatupayal | ||
கடல் நீரை குடிநீராய் மாற்ற திட்டம் போடும் அரசு , முதலில் மழை நீர் கடல் நீர் ஆவதை தடுக்க வேண்டும் | ||
BabyPriya @urs_priya | ||
"கைப்பை பத்திரம் " என்று கணவர் சொல்வதற்கும் மகள் சொல்வதற்கும் உள்ள வித்தியாசம் பணத்துக்கும் டைரிமில்க்கிற்கும் உள்ள வித்தியாசம் | ||
This iS Me @Im_sme | ||
மேக்ஸ்வெல் அடிக்கிற அடிக்கு ஆரஞ்சு கேப் இல்ல, ஆரஞ்சு யூனிஃபார்மே கொடுக்கணும்! #CSKvsKXIP | ||
மின்னல்சுதா @sweetsudha1 | ||
எந்த நடிகையுமே வீட்ல பாத்திரம் தேய்ப்பதில்லை !! ஆனாலும் அவங்க சிபாரிசு பண்ணற டிஷ்வாஷ் சோப்பை தான் வாங்கறோம் :-) #எ.மா.ச.வா. | ||
டேனியப்பா @minimeens | ||
RT @barathi_: இறவா வரம் கேட்ட யாரோ ஒரு அரக்கன் தான் பிளாஸ்டிக்கா பிறந்திருக்கனும்! | ||
டுவிட்டர் பவன். @bommaiya | ||
வீரத்துக்காக கொம்புகளை பிடிப்பது மிருகவதையென்றால்... பாலுக்காக மடியைப்பிடிப்பதும் மிருகவதை தானே..? | ||
சௌம்யா @arattaigirl | ||
சின்சியாரிட்டிக்கு தமிழில் இளிச்சவாய்த்தனம் என்று அர்த்தம் | ||
KRS @kryes | ||
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி | தமிழ் -- "எள்ளல்" தேவையில்லை! உண்மையான பொருள் என்ன?= http://t.co/KctrQVQ49d | ||
0 comments:
Post a Comment