29-மே-2014 கீச்சுகள்




அம்மா அம்மா -ன்னு பாடினா இளையராஜா; யம்மா யம்மா- ன்னு பாடின தேவா; ஹம்மா ஹம்மா- ன்னு பாடினா ரகுமான். #தட்ஸ் ஆல் யுவர் ஆனர்
   
சிஎஸ்கே நாலைஞ்சு சிக்ஸ் அடிச்சப்பறம்தான் அம்பானி முகத்துல சிரிப்பு வருது. #அப்பாடா.. இன்னிக்கு எம்பொண்டாட்டி தப்ச்சாடா!
   
வரலாற்றுரீதியாக ஆணாதிக்கத்தின் வெற்றி என்பது பெண் சுதந்திரம் என்று நம்பச் செய்து பெண்களை ஆடைக்குறைப்பு செய்ய வைத்தது தான்!
   
நமதூர் ராணுவ வீரருக்கு நாம்தானே உதவனும், http://t.co/uHjQs6yLnL
   
நனைந்து போகும் சிறுமியிடம் குடைக்குள் வருகிறாயா என்றேன் மழைக்குள் வருகிறீர்களா என்றாள்
   
பந்தய குதிரையாய் தன்னை மாற்றி வெற்றி திரைப்படங்கள் தொடர்ந்து தந்து தோரயமாக 3000 குடும்பங்களை வாழ வைக்கும் விஜய் நடிகனை தாண்டி சமூக சேவகன்!
   
குழந்தைகள் தியேட்டருக்கு போக விரும்புவது படத்துக்காக அல்ல...இடைவேளைக்காக!
   
ஆவூன்னா கண் கலங்குவதாலும், தோல்வியின் தவப்புதல்வன் என்பதாலும் ரோஹித் இன்று முதல் கிரிக்கெட் வைகோ என என்போடு அழைப்படுவார்
   
ஜெயிச்சதுக்கு ஓடிவந்து ஏன் பொண்டாண்டிய தூக்குனேல பஜ்ஜி. . தோத்ததுக்கு என்ற மவன தூக்கிட்டு வா. . -அம்பானி
   
அடுத்தவன் பொண்டாட்டிய காப்பாத்துரதுல CSK மாதிரி ஒரு டீம துபாய்ல கூட பாக்க முடியாது
   
என்னிக்கு கோயிலுக்கு போகாம சாமி படத்த வீட்டுக்கு கொன்டுவந்து வெச்சு கும்பிட ஆரம்பிச்சானோ அன்னைக்கு ஆரம்பிச்சது தான்டா இந்த திருட்டு விசிடி !
   
மொபைல் ரீசார்ஜ், ஈபி பில் கட்ட,கேஸ் கனெக்சன் பே பண்ண,தட்கல் டிக்கெட் இப்டி எல்லாத்துக்கும் பயன்படும் ஒரே 'ஆண்'ட்ராய்ட் அப்ளிகேசன்தான் கணவன்
   
அம்மா சரக்கு, அம்மா இட்லி, அம்மா தண்ணி, அம்மா தியேட்டர், வரிசையில் அம்மா கிரிகெட் :D http://t.co/KV2unCETOr
   
இனிமேல் எவளாவது டைரிமில்க் வேணும்னு கேப்பீங்க . . . http://t.co/7MDGE33UnE
   
தோனி லவ்வர்ஸ் போடுங்க விசில், தோனி ஹேட்டர்ஸ், இந்தாங்க சிஎஸ்கேவோட நடு விரல் # CSKடா
   
டாக்டர் ஷாலினி மட்டும் தான் இது வரை நான் பார்த்த பெண்ணியவாதிகளில் உண்மையிலேயே தன்னை அலங்கரித்துக் கொள்ளாமல் பொதுவெளியில் முன்வைப்பது.
   
ஆம்வேயின் இந்திய தலைவர் கைது # புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்...தீபாராதனை காட்டுரவர மொதக்கொண்டு சேல்ஸ்மேனா மாத்தி வெச்சுருக்காரு -//
   
அப்பாவின் குறைகளை எல்லாம் அவர் ரிடையர் ஆன பிறகு தான் அம்மாவும் பிள்ளைகளும் கண்டு பிடிக்கிறார்கள் .....!
   
படிச்சவங்க தான் கல்வி அமைச்சரா இருக்கனுமாம்.காமராஜர் பத்திலாம் படிச்சே இருக்க மாட்டானுங்க போல.
   
என் மொபைலில் சார்ச் இருக்கும் வரைதான் என்னால் உங்கள் போராட்டங்களில் கலந்து கொள்ள முடியும் .
   

0 comments:

Post a Comment