12-மே-2014 கீச்சுகள்




எல்லோர் மொபைலிலும் உண்டு ஏராளமான ,விதவிதமான பெயர்கள்.ஆனால் அனைவர் மொபைலிலும் அம்மா வின் மொபைல் எண் அம்மா என்றே பதிவாகி இருக்கும்
   
"நீ பிறந்ததால்தானேடா நான் அம்மா.." என்றுரைத்து அன்னையர் தினத்துக்கும் எனக்கே வாழ்த்து சொல்கிறாள் அம்மா!
   
எம்ஜியார் ரசிகர்களாம் இன்னமும் அதிமுகாக்கு ஓட்டு போடுற மாதிரி தான் இவனுங்க சச்சின் பேர சொல்லி மும்பைக்குக்கு சப்போர்ட் பண்றதும்!
   
சூப்பர் ஸ்டார் ட்விட்டர் ரெக்கார்ட்ட ப்ரேக் பண்ணும்னா தல தான் இங்க வரணும் #டாட்
   
தாயையையும் சேயையும் பிரிக்க கூடாதெனும் நல்லெண்னெத்தாலேயே தமிழன், சிக்கன் பிரியானியில் முட்டையையும் சேர்த்தான் #அன்னையர் தின நல்வாழ்த்துகள்
   
இவருக்காக 1 நிமிடம் ஒதுக்குங்கள் என் மனதை தொட்ட படம் http://t.co/KRpeYxFlOv
   
தோனி டூ வான்கடே ஸ்டேடியம் : லகலகலகலகலகலக
   
அடுத்தவன் மொழி பேசி அவன் போல் கை கால் வீசி நடப்பதுதான் நாகரீகம் என்றால், இருந்து விட்டு போவோம் தமிழ் மொழி மட்டும் பேசும் காட்டுமிராண்டியாய்
   
தற்போது உயிரோடு இல்லை எனத்தெரிந்தும் ஃபிரெண்ட்ஸ் லிஸ்ட்டுல இருந்து நீக்க மனமில்லாத சில நண்பர்கள் எல்லாருடைய ஃபேஸ்புக்கிலும் உண்டு.!
   
இப்ப "நானும் என் லவ்வரும் mutual understandingல பிரிஞ்சுட்டோம்" என சொல்வது ஃபேஷனாகிட்டு வருது. Mutual Understanding இருந்தா வாழுங்களேண்டா:-/
   
யாரென்று தெரிகிறதா ? தோனி என்று புரிகிறதா ? http://t.co/MjfxTKp5bD
   
அன்னயர்தின ட்விட்சுகள பாத்தா இதான் தோனுது http://t.co/H9gjecmtZw RT
   
RT @sindhutalks: ட்விட்டர் மட்டும் இல்லைனா, தமிழனுக்கு +2 இரண்டாம் தாள் பரிட்சைக்குப்பிறகு தமிழில் எழுத வாய்ப்பே இல்லாம போயிருக்கும்
   
இன்னிக்கு துணிக்கடை வாசல்ல காத்துகிடக்கற கணவர்கள் எல்லாருமே அன்னிக்கு அக்கா தங்கச்சி துணியெடுக்கறப்ப சீக்கிரம் வரசொல்லி மிரட்டினவங்க தான்
   
நாத்திகன் கூட வணங்கும் தெய்வம் அம்மா #அன்னையர் தின வாழ்த்துக்கள்
   
அன்னை என்பவள் பெண்ணாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை... தாய்மனம் கொண்ட அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். :)))
   
மேக்ஸ்வெல்லாவது அருகம்புல்லாவது, யுவராஜ் எடைக்கு போட்ட பழைய பேட்டுல கிரிக்கெட் ஆட கத்துக்கிட்ட கத்துக்குட்டி மேக்ஸ்வெல்
   
தோல்வி அடையும்போது உன்னைத்தூற்றும் உலகம் வெற்றி பெற்றதும் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடும் .சமீபத்தியஉதா =யுவராஜ்
   
ட்வீட்டப் போனாலும் ட்வீட் போட்டுட்டு டிவிட்டர்லயே குத்த வச்சு இருப்பாங்களாம்.. அதுக்கு ஏன்யா மதுரைக்குப் போறீங்க? பக்கத்துல டீக்கடை இல்லயா!
   
பொம்மைக்கு சோறூட்ட முனையும் குழந்தையைப் பார்த்துச் சிரித்தான்.. கடவுளுக்குப் படையல் வைத்துக் கும்பிட்ட மனிதன்!
   

0 comments:

Post a Comment