3-மே-2014 கீச்சுகள்




இயற்கை அளித்த நரை யை திரை இட்டு மறைக்காதவர் ,அதையே சில்வர் க்ரே ஹேர் ஸ்டைல் என ட்ரென்ட் ஆக்கியவர் வேறு யாராவது இருந்தா நீ கூறு
   
ஆடு மேய்த்துகொண்டிருந்தவரிடம் இருக்கும் நிம்மதி நாயை வாக்கிங் கூட்டி செல்பவர்களுக்கு இருப்பது இல்லை
   
நான் BE-CSE முடித்து உள்ளேன்... வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன்,,,, உங்களால் முடிந்தால் வேலை கிடைக்க உதவி செய்யுங்கள்... RT
   
யாரையும் பிடிக்கவில்லை என்றால் இப்போதெல்லாம் முகத்தை திருப்பிக் கொள்வதில்லை. மொபைலை பார்க்கத் துவங்கி விடுகிறேன்.
   
70 எழுத்துக்களிலேயே ஒரு ட்வீட்டை முடிச்சிட்டா எதோ மிச்ச சில்லறையை கடைக்காரன்ட்டயே விட்டுட்டுப் போறா மாதிரி ஒரு பீலிங்கு!
   
சிரிச்சா போச்சின்னு ஒரு ஃபைனல் இன்டர்வியூ வச்சித்தான் SBI ஸ்டாப்ஸ செலெக்ட் பண்ணுவாங்க போல...!!
   
கோடை காலம் தொடங்கி விட்டது கோயிலுக்கு போய் புண்ணியம் சேர்ப்பதைவிட பறவைகளுக்கு தண்ணிர் வையுங்கள் புண்ணியமாய் போகும் !!!
   
அட்சயதிருதியைக்கு ஏன் கடைக்காரர்கள் தங்கத்தை இலவசமாக தரக்கூடாது? அவங்க சொல்றமாறி தங்கம் பெருகியதும் அத நாம திருப்பி கொடுத்தா போச்சு ;)
   
அட்சய திரிதியை அன்னிக்கி வாங்குன ஒன்னு வருசம் முழுக்க தொடர்ந்து வருதுன்னா, அது கடன் மட்டும் தான்.!
   
காதலி கூட நீங்க பேசுறத ரிகார்டு பண்ணி திரும்ப நீங்களே தனியா கேட்டு பாருங்க # கண்ணாடிய பாத்து காரி துப்பிக்கணும் போல இருக்கும்
   
கட்டிமுடிச்ச கட்டடத்துக்கு "Building"ன்னு பேருவெச்ச கூமுட்டைதான்:) RT @Tparavai: உரிச்ச கோழிக்கு ,'dressed' நு பேர்வச்சது எந்தக் கூமுட்டை?
   
நான் டிவிட்டர்க்கு புதுசு என்னுடைய இந்த டிவிட்டை RT செய்து ஆதரவு தருமாறு வேண்டி விரும்பி நல்லெண்ணம் கொண்டவர்களை கேட்டுக்கொள்கிறேன்..!
   
அட்சய திருதியை எது செய்தாலும் பெருகும் என்பது நம்பிக்கை தங்கம்தான் வாங்கணும்னு இல்ல 3 பேருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்திட்டு வந்தாச்சு
   
ரஜினி இந்த வயசுலயும் தன் பட பூஜைக்கு மைசூர் வரை போறார். ஆனா சில நடிகருங்க உள்ளூர்லேயே இருந்தும் அவங்க பட பூஜைக்கு போகறதில்ல. தலைக்கனமோ ?
   
Missing Vaali.. வந்துட்டான்யா லிங்கா.. எப்பவும் இருப்பான் யங்கா எங்களுக்கு கிங்கா தன்னை எதிர்த்தவனுக்கு சங்கா.. அப்டீன்னு கலக்கீருப்பார்
   
ஏன் ஓய்வு பெற்றார் என்று வாஜ்பாயும்,ஏன் இன்னும் ஓய்வு பெறவில்லை என்று கலைஞரும் நினைக்க வைக்கின்றனர்!
   
இதைத்தான் கவுண்டர் வேறு மாதிரியாக சொன்னார் "பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டா லிவருக்கு நல்லது" #அட்சய திருத்யை
   
ஓட்டுக்கேட்க ஹெலிகாப்டர் ஏறி ஓடோடி வந்த புரட்சித்தலைவியே! நாட்ல ஒரு பிரச்னைன்னா வராம ஓய்வெடுப்பதுதான் அண்ணா கற்றுக்கொடுத்த பாடமா?
   
என் குழந்தைக்கு, நான் காட்டும் எல்லாப் பொருட்களுமே ஆப்பிள் ப்ராடக்ட்ஸ் ஆயிடுச்சு...ஐ மரம், ஐ பொம்மை, ஐ கதவு #மகளதிகாரம்
   
ஒரு காலத்தில் ரோட்டில் வாழைப்பழ தோல் செய்த வழுக்கி விழ வைக்கும் வேலையை தற்போது குடித்துவிட்டு தூற எறிந்த தண்ணீர் பாக்கெட்டுகள் செய்கின்றன!!
   

0 comments:

Post a Comment