மதன் ッ @imathan_ | ||
அவரு அழகா நின்னு போட்டோவுக்கு போஸ் குடுப்பாராம் அது சிம்ளிசிட்டியாம் இவரு போட்டோ எடுக்குறதே தெரியாம முகத்த மூடி தூங்குறது பப்ளிசிட்டியாம்.. | ||
நாயோன் @writernaayon | ||
அஜித்தின் நடையை விமர்சித்து திருப்தியடைகிறார்கள், நடத்தையை விமர்சிக்க காரணமில்லாதவர்கள்! | ||
ட்விட்டர்MGR @RavikumarMGR | ||
நாய் மாதிரி அலைஞ்சா அவன் ஏழை!நாயோட அலைஞ்சா அவன் பணக்காரன்!#இதான் உலகம்! | ||
Gokila Honey @gokila_honey | ||
RT@Nivethee பணக்கார சிறுவன் கோவப்படும்போது அவன் அறைக்கதவு படீரென சாத்தபடுகிறது ஏழை சிறுவன் கோவப்படும்போது அவன் முதுகில் படீரென சாத்தபடுகிறது | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
சிஎஸ்கே : தம்பி, நீ படிச்ச ஸ்கூல்ல, நாங்க... கேகேஆர் : ஹெஸ்மாஸ்டரா? சிஎஸ்கே : சிலபஸ்'டா | ||
»-மான்விழியாள்♥» @Nivethee | ||
பணக்கார சிறுவன் கோவப்படும்போது அவன் அறைக்கதவு படீரென சாத்தப்படுகிறது..ஏழை சிறுவன் கோவப்படும்போது அவன் முதுகில் படீரென சாத்தப்படுகிறது! | ||
SKP Karuna @skpkaruna | ||
ஒரு கிராமத்து இளைஞன் இன்று சென்றடைந்த இடம், அவன் விருப்பத்துடன் பயின்ற தாய் தமிழ் தந்தது! பெரும் மகிழ்வுடன் நான்! http://t.co/XlQoyYAlHQ | ||
கர்ணா @karna_sakthi | ||
அஜித் வரிசைல நிக்கிறான், விஜய் தரையில தூங்குறான்றியே ஊர்ல நிறைய அப்பத்தாக செருப்பு கூட போடாம 80 வருசமா நடக்குது குமாரு :-// | ||
Kumaran @MrAlestrado | ||
இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்.. மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா? | ||
»-சைதை தமிழரசன்» @Vaanavaraayan | ||
லவ் பெயிளியர்னா பால்டாயில் வாங்கி குடிச்சிருங்க ட்விட்டர் பேஸ்புக்ன்னு வந்து உசுர வாங்காதீங்க.. | ||
மிருதுளா @mrithulaM | ||
ஆணோடு பழகும் பெண் பலவற்றைத் தெரிந்துக்கொள்கிறாள், பெண்ணோடு பழகும் ஆண் பெண்ணைத் தெரிந்துக்கொள்கிறான் | ||
Sri @Sricalifornia | ||
பொறுத்தார் பூமியாள்வார். பொங்குவோர் பிரபலமாவார். வேடிக்கை பார்ப்பவர் பகடைக்காயாவார். அவ்ளோதான்சார் வாழ்க்கை. | ||
ப்ரியா @malathiipriya | ||
அன்பானவர்களை வெறுத்து ஒதுக்கினாலும்... அவர்களுக்கே தெரியாமல் அவர்களை பின் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறோம் திருட்டுத்தனமாக | ||
சாரே @Prabinraj1 | ||
எருமைமாடு சைஸ்ல நாயை வாக்கிங் கூட்டீட்டு போனா அது ஒரு சமூவ அந்தஸ்தாம், இருங்கடா நான் எருமை மாட்டையே வாக்கிங் கூட்டீட்டு வறேன் :) | ||
நாட்டி நாரதர் @mpgiri | ||
நம்மபசங்க பொண்ணுங்க பேர்ல ட்விட்பண்ணி மல்டிபுள் பர்சனாலிட்டியா வளர்ராங்க.ஒருநாள் கடைக்குபோய் நாப்கின் லிப்ஸ்டிக்கெல்லாம் வாங்கப் போறானுங்க | ||
ஏகலைவன்© @Eakalaivan | ||
கோயிலுக்கு வெளியே விட்ட காலணி காணாமல் போனது. செருப்பில்லாத ஒருவனின் பிரார்த்தனை நிறைவேறியது. | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
எல்லோரும் மேட்ச் ஜெயிக்க அடிச்சு ஆடுவாங்க, யூசுப் பதான் அடுத்த மேட்சுல டீம்ல இருக்க அடிச்சு விளையாடுறான் | ||
BabyPriya @urs_priya | ||
ஓரே ஒரு ஆசை தான்.....என்னால் நிறைவேற்ற இயலாத எந்த ஆசையும் உனக்கு தோன்றிவிடக் கூடாது என்பதே:) | ||
நாயோன் @writernaayon | ||
மாம்பழக்கடையில் ஒவ்வொரு வகையின் பெயரும் விலையும் எழுதித் தொங்கவிட்டிருந்தார்கள். மா விலைத் தோரணம்! | ||
புரட்சி கனல் @IamKanal | ||
விஜய் தூங்கும்போ காலுக்குமேல் கால போட்டு தான் தூங்குறார் போல.. ஸ்டைல்டா. http://t.co/zO1dt3sNEP | ||
0 comments:
Post a Comment