7-அக்டோபர்-2015 கீச்சுகள்




விலகிச் செல்வது போல் தெரிந்தாலே வில(க்)கிவிடு. இனிமையாய்ப் பழகிய ஞாபகமாவது இருக்கும். இழுத்துப் பிடித்து நிறுத்தினால் இருபக்கமும் ரணம் தான்.
   
பள்ளியில் படித்து கொண்டே ஆட்டோ ஓட்டி தன் குடும்பத்தை பாத்து கொள்ளும் #மாணவி, http://pbs.twimg.com/media/CQoV-FrUYAAmdnM.jpg
   
தேனீ போல சுறுசுறுப்பாக இருங்கள் ஆனால் வார்த்தையால் அடுத்தோரை கொட்டாதீர்கள்
   
இந்த புகைபடம் கிடைத்தது ஒரு வேளை அரியதாக இருக்கலாம்.......... நேதாஜி மற்றும் ஹிட்லர்..... http://pbs.twimg.com/media/CQkbYSXUEAAOLvw.jpg
   
யாரோட நல்ல கெட்ட குணம் எதுவும் எனக்கு தெரியாது... என்னிடம் பாசமாக பேசும்வரை அவர்கள் எனக்கு நல்லவர்களே... அவர்கள் பர்சனல் எனக்கு தேவையில்லை
   
காதல்ங்கறது ஆட்டோ பயணம் மாதிரி ஒருத்தர் இறங்கினா இன்னொருவர் ஏறிடுவாங்க 😂😂😂
   
ஆணுக்கு நாணமும் பெண்ணுக்கு திமிரும் அழகுதான். சிட்டிகை அளவுகளில்!
   
உலகின் மிக பழமையான இன்றும் இயக்கத்தில் இருக்கும் பல்கலைகழகம் University of Bologna, இத்தாலி (கி.பி 1088) #அறிவோம் http://pbs.twimg.com/media/CQof8coUsAAAQHr.jpg
   
வாழ்க்கையில் தோற்றுப் போனவர்களென்று யாரும் இல்லை, வெற்றிக்குத் தேவையான முயற்சியைத் தராதவர்களாக வேண்டுமானால் இருந்திருக்கலாம்!
   
கிணற்றில் குதிக்க சொன்ன வாழ்க்கையிடம் நீச்சல் தெரியாதென்று சொன்னேன், தண்ணியில்லாத கிணற்றில் குதிக்க சொல்கிறது. தட் எப்படியாது நீ சாவு!
   
காமராஜர் வரும் வழியில் ஒரு தொண்டர் மின்கம்பத்தில் ஏறி காமராஜர் 'வாழ்க' என்றார் இதை கண்ட காமராஜர் நான் வாழ்வேன் நீ செத்திருவே இறங்கு என்றார்!
   
ஒவ்வொரு படம் வரும்போது விமர்சனம் பண்ண அவர் என்ன பாண்டாவா இல்ல சென்னியாரா???!!! https://twitter.com/YsThoughts/status/650981225889304576
   
கொஞ்சமாவது நல்லவனாய் மாற முயற்சி செய்யும்போதெல்லாம்... "நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்ட" என்கிறது நம் மனசாட்சி!
   
#வீட்டுக்கு ஒரு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி தந்ததுபோல், வீட்டுக்கு ஒரு குடிகாரனையும் இலவசமாக தந்திருக்கிறது இந்த அரசாங்கம்..
   
தமிழ்நாட்டு சின்னங்களும் குறியீடுகளும் - அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை Read: http://tl.gd/n_1snjme1
   
தேர்தல் நேரத்தில் சில தலைவர்கள் கேலிச்சித்திரமாகி விட்டனர் - கலைஞர் முதல் சித்திரமே உங்க புத்திரன்தான் தலீவரே
   
கவனமாகவே நடக்கின்றேன் விழுந்துவிட கூடாதென்று இருந்தும் சில நேரங்களில் விழுந்து போகின்றேன் உன் விழியிலும் மடியிலும்...😍😍😍
   
காலமான தந்தை வீட்டில் உள்ள பொருட்களாகவும் தாய் சமையல் அறையில் உள்ள மணமாகவும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் நம்முடன்
   
வெளியூரில் வசிக்கும் மகன்/மகளின் முகம் பார்த்து பேச ஆரம்பித்த பின்பு பொற்றோர்கள் ஸமார்ட் போன் மீது கோவம் கொள்வதில்லை...!
   
நமக்கு பிடித்தவர்கள் நம்முடன் மட்டும் பேச வேண்டும் என்று நினைத்து நினைத்து கடைசியில் அவர்கள் நம்முடன் பேசாமலே போயிடுறாங்க..
   

0 comments:

Post a Comment