உமா க்ருஷ் @umakrishh | ||
ஆந்திராவில் இறந்த 20 தமிழர்களில் தங்கள் சாதிப் பிணங்கள் 6 க்கு மட்டும் போஸ்ட் மார்ட்டம் விண்ணப்பித்தது பாமக .இதுல மாற்றம் முன்னேற்றமாம் | ||
* ஜீவா * @Im_Jiiva | ||
பத்து ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் ஏழைக்கு மூன்று ரூபாய் வரி... ஐந்நூறு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் பணக்காரனுக்கு எக்ஸ்ட்ரா டாக் டைம்... | ||
செ. செந்தில்குமார் @SeSenthilkumar | ||
வெளியே இருந்தால் ஓடும் ரயிலை ரசிக்கிறார்கள். ரயிலுக்குள்ளே இருந்தால் வெளியே இருப்பதை ரசிக்கிறார்கள். குழந்தைகள்தான் எவ்வளவு வாழ்கிறார்கள்! | ||
ஜினோ கீர்த்தனா™ @JinoKeerththana | ||
உண்மையான அன்பு விரும்பினாலும் உடனிருக்கும்! வெறுத்தாலும் உடனிருக்கும்! | ||
₹ரோபோ ரோமியோ₹ @Imrobo_official | ||
காதல் என்றேன் அடி வேணுமா என்றாள் காலம் முழுதும் கிடைக்குமா என்றேன் நான் :-)) #காதல் | ||
☜⭐ RaM ⭐☞ @Siva_D_offl | ||
பழைய சாதத்தில் தொடங்கி. பழைய கீ பேர்டு தேய்ந்த செல்போன் வரை அம்மாக்களே மிச்சமானதை வைத்துக்கொள்கிறார்கள்.. #Amma 😍 | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
காதல் கொண்டேன், 7ஜி இந்த இரண்டு படம் போதும், யுவன் தமிழ் சினிமாவின் தவிர்க்கவே முடியாத இசையமைப்பாளன் என்பதை நிரூபிப்பதற்கு.. #HBDYuvan | ||
குழந்தை Talks @maanniiiiiii | ||
கர்த்தர் உங்களை விட்டு விலகுவதும் இல்லை உங்களை வாழ விடுவதும் இல்லை - சைத்தான் 14:5 | ||
பரிசல்காரன் @iParisal | ||
ராஜா, ஜெயம் ரவிட்ட இப்டித்தான் கேட்டிருப்பார்; "அரவிந்த்சாமியை வெச்சு ஒரு படம் பண்ணலாம்னிருக்கேன். உனக்கும் ஒரு ரோல் இருக்கு. பண்றியா?" | ||
•• மழையின் காதலன் •• @Im_bharathi | ||
காயப்படுத்தியபின் கேட்கப்படும் மன்னிப்புகள் ஒருபோதும் அக்காயங்களை சரிசெய்வதில்லை | ||
☜⭐ RaM ⭐☞ @Siva_D_offl | ||
அம்மாவைப்போல மணக்கும்படி சிலரால் சமைத்துவிட முடியும். ஆனால் அம்மாவை மறக்க வைக்கும்படி யாராலும் சமைக்க முடியாது.. அம்மாதான் best 😍😍 | ||
*அழகிய தேவதை* @Im_angel19 | ||
👉அடுத்தவங்க தங்களோட கவலைய நம்மகிட்ட மறைக்கிறாங்கன்னா அவங்க நம்மல விட்டு ரொம்ப தூரம் போயிட்டு இருக்காங்கன்னு அர்த்தம்.!👍 | ||
இராமநாதபுரத்தான். @Nivas_sankar | ||
வாழ்க்கைல குடிக்காத ஆண்கள் கிடைச்ச பெண்கள் பாக்கியசாலிகள்..!!! அதே போல படிக்காத பெண்கள் கிடைச்ச ஆண்கள் பாக்கியசாலிகள்...!!! | ||
•• மழையின் காதலன் •• @Im_bharathi | ||
நெருங்கியிருந்து வேதனை தருவதைவிட , விலகி நின்று மகிழ்விப்பது மேல் | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
நாட்ல கிட்னி ஃபெயிலியரானவன், லிவர் பெயிலியரானவன் கூட சந்தோஷமா இருக்கான், இந்த லவ் ஃபெயிலியராவனுங்க போடுற சீரியல் இருக்கே, அப்பப்பா | ||
கதிரவன் @iam_kanaL | ||
உனக்கென்ன வேண்டும் சொல்லு🎼🎼 . . . . . . . . . . . . . . . . . . . . குழந்தை:நீங்க வீட்டுக்கு வாங்கப்பா😭 (வெளிநாட்டில் வேலை பார்க்கும் அப்பா) | ||
Dr.படித்துறை பாண்டி® @iampadithurai | ||
ஆற்றில் நீந்திச் செல்லும் மீனைப் பிடித்து கண்ணாடி குடுவையில் அடைத்து அழகு பார்ப்பதற்கு பெயர்தான் இக்கால மனிதாபிமானம் | ||
மணல் தேவதை @nowshin_nisha | ||
60 வயதிற்கு மேல் 6 வயதுக்குக் கீழ் இருப்பவர்களிடம் 5 நிமிடங்களேனும் நம்மால் நேரம் ஒதுக்கி பேசமுடிகிறது என்றால் நாம் சிறப்பாக வாழ்கிறோம். | ||
Hαηυмαℓαя @hanumalar | ||
நீ மாறிட்ட.. நீ முன்ன மாதிரி இல்ல.. இப்படி சொல்றாங்கனா அந்த மாற்றம் தானா வந்துருக்காது.. இத சொல்றவங்கதான் இதற்கு முதல் காரணமா இருப்பாங்க | ||
⇝அருண் குமார்⇜ @Iam_A6un | ||
ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது. | ||
0 comments:
Post a Comment