28-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்




மதிப்புக்குரிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட முன் வந்திருக்கும் தமிழக அரசுக்கு என் மனமார்ந்த நன்றி.. பாராட்டுகள்..
   
பிரசவவலி பெண்ணை 7 கி.மீ. சுமந்த இந்திய ராணுவ வீரர்கள் மனிதாபிமானம் நிறைந்த நமது ராணுவ வீரர்களின் பணியினை பாராட்டுவோம் http://pbs.twimg.com/media/CNXarMRUAAAMxJP.jpg
   
சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் - முதல்வருக்கு சரத்குமார் நன்றி #மணிமண்டபம் கட்டமுடியாதுன்னு சொன்னாலும் நீங்க நன்றிதான் சொல்லுவேள் #டிசைன்அப்டி
   
ஒரு கோடி ரூபாயை மக்கள் நலனுக்காக்காகக் கொடுத்து சாதனை படைத்துவிட்டார் ராகவா லாரன்ஸ். இவர் சாதனையைத் தான் டிரெண்ட் பண்ண்ணும் ட்விட்டர்!
   
விகடனில் வெளியான என் ட்விட் ஒன்று உங்கள் பார்வைக்கு ..கூடுதல் மகிழ்ச்சி பெரியார் படத்தோடு வந்த முதல் ட்விட் என்பதில் http://pbs.twimg.com/media/CNY6G5VU8AUNmlP.jpg
   
👉நல்ல குணம் மட்டும் இருந்தாலே போதும் அடுத்தவர்கள் மனதில் இடம்பிடித்து விடலாம் அழகினால் மட்டும் எதையும் சாதித்து விட முடியாது..!!👍
   
""ஒரு தந்தை பத்து குழந்தைகளை காப்பாற்றுவார், ஆனால் பத்து குழந்தையும் ஒரு தந்தையைக் காப்பாற்றும் என்று உறுதியாக நம்ப முடியாது..""
   
28/8/15 அன்று மதுரை ராகவேந்திரா மருத்துவமனையில் நடைபெறும் இருதய அறுவை சிகிச்சைக்கு A+ve இரத்தம் 5யூனிட் தேவை தொடர்புக்கு Samadu 9443684892
   
நண்பன் எவ்வளவு பெரிய கெட்ட வார்த்தையில திட்டினாலும் கோபம் வரமாட்டேங்குது. ஆனா சொந்தகாரன் ஒரு வார்த்தை சொன்னாலும் பட்டுன்னு கோபம் வந்துருது..
   
ஒரேக்கல்லாலான சிற்பமே தாங்கும் தூணாய்! கீரிடம், நகைகள்,ஆடை மடிப்புகளின் நுணுக்கமான அலங்கார வேலைப்பாடுகள் #திண்டுக்கல் http://pbs.twimg.com/media/CNa8PxIUsAA8b31.jpg
   
ஆண்களை வெட்கப்படவைக்க பெண்களின் கண்களால் மட்டுமே முடியும்
   
நயன் தாரா திருமணம் என் தலைமையில் தான் - சிம்பு # சுப்ரமண்யம் சுவாமி டெக்னிக்படி தாலியை எடுத்துக்கொடுக்க்கும்போது டக்னு கட்டிடலாம்னு ஐடியாவா?
   
எத்தன நல்லவங்க நமக்கு நண்பனா இருக்காங்கங்குறது முக்கியமில்ல நம்ம கூட பழகுற அத்தன நண்பனுக்கும் நாம நல்ல நண்பனா இருக்கமாங்குறது தான் முக்கியம்
   
உன்னை நீ எந்த இடத்தில், யாருக்காக மாற்றிக்கொள்கிறாயோ அவர்களால் அந்த இடத்திலிருந்து உனக்கான வலிகளும் காயங்களும் தொடங்குகிறது
   
வழியில் கிடைத்த வெங்காயத்தை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த இளைஞனுக்கு பாராட்டுக்கள் மிகவும் உயர்ந்த மனிதா்! #salute http://pbs.twimg.com/media/CNaxzwUUEAABk--.jpg
   
நம்ம தாத்தா அப்பா அனுபவிக்காத இன்பம் துன்பத்தையா நாம அனுபவிச்சிட போறோம் இந்த வாழ்க்கையில #ரிஸ்கா_இருந்தாலும்_லைஃப்_ரொம்ப_ஜாலி_பாஸ் :))
   
புகைப்பட கவிதை: விழிகள் முடிந்தவரை உன் கண்களையும் மூடிவை... அணுஆயுதமென்று ஜ.நா அபகரிக்ககூடும்! http://pbs.twimg.com/media/CNWDSgeUcAAOm06.jpg
   
இவ்வுலகத்தில் தன்னுடைய சுயசரிதையை இரண்டே வரிகளில் எழுதியவன் பாரதி மட்டுமே!... "பல வேடிக்கை மனிதரைப்போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!"
   
என் இதயத்தில் நீ இருப்பதாலோ என்னவோ இதயம் தொட்டு வரும் புகையும் உன் முகம் காட்டுதடி உன்னை போலவே என் உயிரை வாங்குதடி..! http://pbs.twimg.com/media/CNUci2aUkAA0f8a.jpg
   
விழுப்புரத்துல இருந்து சென்னை வந்து இறங்கும் போது எடுத்த போட்டோ போல http://pbs.twimg.com/media/CNbCGmXVAAEjpHg.jpg
   

0 comments:

Post a Comment