8-அக்டோபர்-2014 கீச்சுகள்




உண்ணாவிரத பந்தல்ல பசி பொறுக்கமுடியாம இருந்த எவனோ ஒருத்தன்தான் ஜாமின் கிடைச்சிடுச்சின்னு கெளப்பி விட்டுருப்பான்.
   
தர்மத்தின் வாழ்வதனை சூதுகவ்வும், மறுபடியும் பத்தே நிமிசத்துல தர்மமே வெல்லும்
   
ஜாமீன் கிடைச்சாச்சுன்னு சொன்ன உடனே கத்தி படம் ரிலீசாகாதுன்னு ட்வீட் போட்ட அந்த முட்டாள்கள நினச்சா தான் சிரிப்பா வருது :P
   
அடேய் பந்தள பிரிக்காதா பிரிக்காதா நாளைக்கு உண்ணாவிரதம் இருக்கு
   
சும்மா :) என் மகளின் கைவண்ணத்தில்... http://pbs.twimg.com/media/BzV6Al5CYAAtNaa.jpg
   
ஆளுங்கட்சியினர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறும், எதிர்கட்சிகள் மெளனவிரதத்தை தொடங்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.!
   
வீட்டம்மா சீரியல் பிசியில் ரிமோட்டை தராத போது மெல்ல குழந்தையின் காதில் இந்நேரம் சோட்டா பீம் போட்டுருப்பான்லன்னு ஓதி விடுவதும் ஜென் நிலையே !
   
"கணபதி ஓவியம்"பிடித்திருந்தால் RT செய்யவும், மிகவும் பிடித்திருந்தால் வாங்கவும் Oil Painting on canvas Size: 2ft x3ft http://pbs.twimg.com/media/BzVUsmJCEAAba5W.jpg
   
ஏன்யா கத்துறீங்க? எதிர்க்கட்சி வக்கீல் கத்துற கத்த விட நீங்களே கத்தி ஜட்ஜ்கிட்ட மாட்டிவிட்டு போயிடுவீங்க போலருக்கே? http://pbs.twimg.com/media/BzUzp2KIYAEqQ--.jpg
   
கிச்சன்ல இருந்து வாசனை வந்தா அம்மா சமையல்; வாசனை வருதான்னு சத்தம் வந்தா பொண்டாட்டி சமையல்
   
ஜெவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதை கண்டித்து சென்னை விமான நிலைய மேற்கூரை தானாகவே முன்வந்து 27வது முறையாக விழுந்தது.
   
லேடீஸ் சீட்ல உட்காந்த ஆம்பளைய எழுப்பி விடாத லேடீஸே இல்ல! ஆனா ஜென்ஸ் சீட்ல உட்காந்த லேடீஸ ஆம்பளைக எந்திரிக்க சொன்னதே இல்ல! #gentleman
   
ஜட்ஜ் பெயில் கொடுத்தாரு! இந்த கருணாநிதி போன் பண்ணி கொடுக்காதேன்னு சொல்லிட்டாரு! -இப்படி எங்கூரு மீட்டிங்லே ஒருத்தன் பேசுவான் பாருங்க
   
எவ்வளவு தான் பேச்சிலர் வாழ்க்கையைப் பற்றிப் பெருமையாகப் பேசினாலும் திருமணம் ஆன பிறகு ஆணுக்கும் பெண்ணுக்கும் அழகு கூடுவது என்னவோ உண்மை!
   
மாநில முதல்வர் என்ற அடிப்படையில் ஜாமீன் வழங்கலாம்.. ராம்ஜெத்மலானி வாதம். #ஒபிஎஸ்'கு எதுக்கு ஜி ஜாமீன். வக்கீல் வண்டுமுருகன் தேவலாம் போல
   
வெடிச்ச பட்டாசு மேல நின்னு அழுவறாங்க... இந்த மாதிரி நிலைமை எதிரிக்கு கூட வரக்கூடாது :((((
   
கஸ்டமர்: ஏண்டா என்ன கேக்காம என் ஆர்டரை கேன்சல் பண்ண? ப்ளிப்கார்ட்: உன் மூஞ்சி எனக்கு பிடிக்கல 😂😂😂
   
லீவுனு சொல்லிட்டு அப்புறம் இல்லனு சொன்னப்போ எவ்ளோ கஷ்டப்பட்டுர்ப்போம். இப்போ நல்லா அனுபவிங்க வினோத் 6ம் வகுப்பு "ஆ பிரிவு"
   
மக்கள் முதல்வர் மட்டுமில்லை, அனுதாப அலையால இனி நிரந்தர முதல்வரே அவங்கதான் ... #AmmaIsBack
   
ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பு நகல். (முழு தீர்ப்பு விவரம்- English) பாதுகாக்கவேண்டிய புத்தகம்! http://www.thehindu.com/multimedia/archive/02136/Jayalalitha_Assets_2136932a.pdf Plz RT!
   

0 comments:

Post a Comment