2-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்




கண் அசந்து தூங்குவது "ஸ்லீப்பிங்" என்றும் கண் விழித்து தூங்கும் நிகழ்வு "மீட்டிங்" என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. #அறிவோம் ஆங்கிலம்
   
இலங்கைக்கு அடியில் பெட்ரோல் ஆறு ஓடுதுன்னு கிளப்பி விட்டா போதும் மீதிய அமெரிக்காககாரன் பாத்துப்பான் இது எல்லாம் நம்ம சொன்னா யாரு கேட்குறா ...
   
தன்னை ஃபிகராக காட்டிக்கொள்ள முயலும் ஆண்ட்டிக்கு எப்படிப் புரியவைப்பது.. ஆண்டியாக இருப்பது தான் உங்கள் சிறப்பென்று?
   
ஆதியில் குழந்தையின் மலத்தையும், வயதான பின் நோயுற்ற கணவனின் மலத்தையும் சுத்தம் செய்யும் பெண்கள்,பெண்ணியம் பேசாத கடவுள்கள்
   
வெட்கமின்றி முத்தம் கேட்டுவிட தோன்றுகிறது குழந்தைகளிடம் மட்டும்!
   
ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவனின் அதிகார நுழைவு போரட்டமென்பது நீங்கள் மகாத்மா என கொண்டாடும் மனிதர் (cont) http://tl.gd/n_1s2p7co
   
வயதான பின்பும் தன் மனைவியை நாணப்பட வைக்கத் தெரிந்த ஆணே மிகச் சிறந்த கணவன்
   
"வயலும் வாழ்வை" கலாய்த்ததின் சாபமாய் இருக்கலாம் இப்போதைய ரியல் எஸ்டேட் விளம்பரங்கள்..!!!
   
அருகில் இல்லாத குழந்தையின் நினைவில் சட்டென உடை நனைக்கும் தாய்ப்பால் போலவே பரிசுத்தமானது என்றோ செய்த தவறுக்காக வழியும் கண்ணீர்
   
வேடிக்கைக்காக கூட முட்டாள்களுடன் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் உன்னையும் முட்டாள் என கருதி விடுவர். http://pbs.twimg.com/media/Bt36PmkCAAISWCE.jpg
   
புற்றுநோய் எதிர்ப்பு தினம் இன்று.உங்கள் நுரையீரலை ,காற்றை மாசுபடுத்தும் தம் அடிக்கும் பழக்கத்தை இன்றே நிறுத்துவீர்
   
அடிபட்டதை விட அதிக வலி தர கூடியது,வலிக்குதான்னு கேட்க ஆளில்லாத வெறுமை
   
விரும்பும் பதில் கிடைக்கும் வரை ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்பதற்கு பெண்களுக்கு சலிப்பதே இல்லை..
   
அம்மா என்று ஒரு ஜீவன் இருக்கும் வரை, "எதுவுமே இல்லை" என்று யாரும் இடிந்துவிடக் கூடாது.
   
நான்கைந்துமுறை தோற்றபின் அனுபவம் வருகிறதோ இல்லையோ தத்துவம் வந்துவிடுகிறது.
   
உனக்கும் இப்படி ஆகி இருந்தால் நீயும் என் நண்பனே.. படம் - முகப்புத்தகம் http://pbs.twimg.com/media/Bt9JNkbCUAApqO6.jpg
   
நீங்க நல்லா இருக்கனும்னா நாலு பேர்கிட்ட கடன் வாங்குங்க..அவன் உங்களுக்காக டெய்லி சாமி கும்புடுவான்
   
அம்மாவின் உலகம் ரொம்ப சிறுசு.... நல்லாயிருக்கியா? சாப்பிட்டியா? ஊருக்கு எப்ப வருவ?... #அம்மா
   
சிவகார்த்திகேயன் என்ற திறமையான விஜேவை இழந்து சராசரிக்கும் குறைவான நடிகனைப் பெற்றிருக்கிறோம்.
   
'எம்பு எங்க போறீங்க, எங்க போறீங்க'ன்னு எறும்பு பின்னாடியே போய்க் கேட்டு அதைப்படுத்தி, அது பேசலைன்னு என்கிட்ட புகார் வேற.lol :)) #மகளதிகாரம்
   

0 comments:

Post a Comment