1-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்




அம்மாவின் மறைவுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட நான்காக மடிக்கப்பட்ட சில ரூபாய் நோட்டுக்கள் எந்தநிறைவேறாத ஆசைக்கு என எண்ணும்போது மனம்கனக்கிறது.
   
இன்னும் பத்து வருடத்தில் வேற்று கிரக வாசிகளை கண்டு பிடித்து விடுவோம்- நாசா # மோதல்ல மலேசியா விமானத்த கண்டுபிடிங்க
   
சென்னையில் புதிய கட்டிடத்திற்கு "அம்மா மாளிகை" என பெயர்சூட்டப்படும்-மேயர்.# ஆர்வத்துல அண்ணா சமாதிக்கு அம்மா சமாதின்னு பேர் மாத்திடாதீங்கடா.!
   
வாழ்க்கையை பற்றியோ, எதிர்காலத்தை பற்றியோ எந்த கவலையும் இல்லை, இப்போதைக்கு உன் நினைவுகள் சூழ்நதிருக்கும் இந்த இரவை கடந்துவிட்டால் போதும்...
   
நம்பிக்கை தான் வாழ்க்கை. http://pbs.twimg.com/media/Bt3MBEvCcAApgA9.jpg
   
மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம் ஆரம்பிக்க இருக்கேன். ஆரம்பிக்கட்டான்னு மனைவிக்கிட்ட அனுமதி கேட்டிருக்கேன், 2 நாள்ல சொல்லிடுவாங்க
   
வருகிறது பண்டிகை நாள் சோகத்தில்....... சிலந்தியின் குடும்பம் !
   
வாலு, அஞ்சான் டீசர்கள் மொக்கை என்பவர்களே, படம் வரட்டும், உங்க வாயிலையே 'படத்துக்கு டீசர் பரவாயில்லன்னு' சொல்வீங்க பாருங்க :-/
   
நான் பார்த்த பேரழகிகள் எல்லாம் 5 வயசுக்குள்ளையே இருந்திருக்கிறார்கள்.!
   
இணையத்தில் எதுவும் புனிதமில்லை. உவப்பற்றதை ஒதுக்கி நகர்வதே உத்தமம். புலம்பலும் பொங்கலும் மேலும் கேலிக்குத் தான் வழி வகுக்கும்.
   
எனை திரும்பி பார்க்கவைக்க அவன்பேர் சொல்லி அழைத்தல் போதுமானது
   
10 சந்தானம் = 1 S.S.சந்திரன் 5 S.Sசந்திரன் = 1 சுருளிராஜன் 3 சுருளிராஜன் = 1 கவுண்டமணி 2 கவுண்டமணி = 1 M.R.ராதா
   
முத்தம் தவிர்த்த காமத்தில் காதல் இல்லை,காமம் தவிர்த்த முத்தத்தில் காதல் ததும்ப உண்டு
   
'பொய்'னா என்னப்பான்னு பசங்ககேட்கும்போதே டீவீயில்வரும் விளம்பரம்தாம்மான்னு சொல்லிப்புரிய வைத்துவிட்டால் பிள்ளைகளைப் பாதி காப்பாத்திட்டாமாதிரி
   
முட்டாள்தனமான கேள்விகளுக்கு புத்திசாலித்தனமான விளக்கங்கள் தேவையற்றது
   
தாங்கிப் பிடித்துக் கொள்ள ஆள் இல்லாதவர்கள், அழுத்தமான தடங்களைப் பதிக்கிறார்கள்!
   
தமிழ் சினிமாவுக்குப்பிடித்த #உண்மையான மனிதர்! நாங்கள் நேசிக்கும் #தலைச்சிறந்த மனிதர் #தல ஒருவரே...! http://pbs.twimg.com/media/Bt4IFTiCYAQD5Lg.jpg
   
முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட பேச கூடாதுன்னு சொல்ற பெற்றோர், கல்யாணம் மட்டும் தெரியாத யாரோ ஒருத்தவங்களைப் பார்க்கறாங்க.
   
சிவகாசி பள்ளி ஒன்றில் மாணவர்களால் வரையப்பட்ட ஓவியம். படம் - முகப்புத்தகம் http://pbs.twimg.com/media/Bt18SSZCIAESyU0.jpg
   
இங்கே ஆண்களின் நட்பில் எதார்த்தமும் பெண்களின் நட்பில் பாசாங்கும் தெரிவது எனக்கு மட்டும் தானா!
   

0 comments:

Post a Comment