7-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்




எவ்வளவு மோசமானவராய் இருந்தாலும் சரி உங்கள்மீது அன்பு செலுத்துபவர்களை முழுதாய் நிராகரித்துவிடாதீர்கள், அது ஒரு குழந்தையை கொல்வதற்கு ஈடானது..
   
ஹாரிஸ் க்வீஸ் நடத்தலாம்னுருக்கேன் ! பாட்டெல்லாம் நானே சொல்லிடுவேன்,அந்த பாட்டோட ஒரிஜினல் ம்யூசிக் டைரக்டர் பேர நீங்க கண்டுபிடிக்கனும் :))
   
வசனம் கண்ணா'வில் ஆரம்பிச்சா அது ரஜினி. கண்ணா'வில் முடிஞ்சா அது விசு. #ISNKK
   
அன்பு செலுத்த சுற்றிலும் பலர் இருக்கும்போதும், விலகி செல்லும் யாரோ ஒருவரின் மீதே முழு கவனமும் குவிகிறது....
   
பழகியவர்களுக்கு கடன் கொடுக்கும் போதெல்லாம் "பணம் என்னதில்ல ஒருத்தன்கிட்ட வாங்கித்தான் கொடுக்கிறேன்"னு ஒருபிட்டை மறக்காமல் போடுவான் தமிழன்
   
கடவுள் எங்கே இருக்கிறார் என்று, அம்மாவிடம் கேட்டது ஒரு குழந்தை.. அம்மா எங்கே இருக்கிறார் என்று, கடவுளிடம் கேட்டது ஒரு அனாதை குழந்தை!!
   
காதல் தோல்வியால் தற்கொலை செய்ய விரும்பவில்லை.என்னைவிட சிறந்தவன் அவளுக்கு கிடைக்கலாம். ஆனால் என் அம்மாவுக்கு என்னைபோல் ஒரு மகன் கிடைக்கபெறாது
   
எந்தப் பெண் அணிந்தாலும் சேலை அழகு தான், எந்தச் சேலை அணிந்தாலும் பெண் அழகுதான்..!
   
முந்தானையில் தலைதுவட்டி விடும் பேரானந்தத்தை கொடுக்கவாவது ஜீன்ஸ் டி ஷர்ட் தவிர்க்கணும்
   
உச்சகட்ட அவமானம் என்பது யாதெனில் "எதிரில் நமக்கு தெரிந்தவர் வரும் போது அவரை பார்த்து நாம் சிரிக்கையில் அவர் அதை பார்க்காமல் போவது தான்"
   
வேலைக்காரனாகவும் எஜமானனாகவும், எந்த சமயத்தில் இருக்கவேண்டுமென்று அறிந்தவனே..! பெண்களை சரியாக கையாள்கிறான்
   
முதல்வரை பேசியது எனது தாயை பேசியது போல உணர்கிறேன் - விஜய்.. . அதை இப்படித்தான் கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு ஸ்டைலா உணருவீங்களா அண்ணா..
   
தவிற்கமுடியாத அளவு புத்திசாலியாக இருப்பவர்களை, ரசித்துக்கொண்டே வெறுப்பது தவிற வேறு ஆப்ஷன் இருப்பதாக தெரியவில்லை
   
எப்போதும் சிரித்து கொண்டிருப்பது எலும்புகூடு மட்டும்தான்
   
வெறுக்கவே முடியாதவர்களையும் சகிக்கவே முடியாதவர்களையும் அவ்வப்போது அறிமுகப்படுத்துகிறது வாழ்க்கை
   
மனசுல தேவையில்லாத எண்ணங்கள் தோன்றினால் தனிமை நம்மை பிடித்து ஆட்டுகிறது என அறிக.
   
உன் உடைந்த ஞாபகத் துண்டுகளை அள்ளி சேகரித்து வைத்திருக்கிறேன். கலைடாஸ்கோப் என அவ்வப்போது அழகாய்த் தெரிகிறது வாழ்க்கை.
   
கெமிஸ்ட்ரின்னா இப்டி இருக்கணும்டா. http://pbs.twimg.com/media/BuV3_SLIIAAD_6g.jpg #kaththi
   
இந்த பாசத்திற்கு இனை இல்லை உலகில்.. http://pbs.twimg.com/media/BuXA2X8CEAIa31T.jpg
   
'பைசா' என்றால் கோபுரமே சாய்ந்து விடுகிறது!
   

0 comments:

Post a Comment