28-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்




தீபாவளிக்கு "ஐ" பார்க்கப் போகிறவர்கள் ஆர்டி செய்யவும். "கத்தி" பார்க்கப் போகிறவர்கள் பேவ் செய்யவும். #கணக்கெடுப்பு
   
நேரத்த காட்றதுக்கு 300ரூபாய் வாட்ச்சே போதுமானது ஆனா நம்ம கெளரவத்த காட்டத்தான் 3000ரூபா வாட்ச் தேவைபடுது
   
பணம் இருந்தால் செத்த காதலிக்கு கூட தாஜ்மகால் கட்டலாம் !! பணம் இல்லனா காதலிக்கு தாலி கூட கட்ட முடியாது !!!
   
நவக்கிரகங்கள் ஆண்களாக இருக்கும்போதே நம்மை இப்படி ஆட்டுவிக்கின்றவே, அவை பெண்களாக இருந்திருந்தால்!
   
பெண்களால் ஒரு நொடியில் அள்ளி கொட்டக்கூடியது கண்ணீர்; ஒரு ஜென்மமானாலும் அடக்கி வைக்கூடியது காதல் :-)
   
சரியான முடிவெடுக்கும் திறன் அனுபவத்திலிருந்தே வரும்,ஆனால் அனுபவம் என்பது நாம் எடுத்த தவறான முடிவுகளில் இருந்தே வரும்.
   
இந்தியா-இங்கிலாந்த் கிரிக்கெட் மேட்ச்ல கூட லைகாவும் ஸ்பான்சர். அந்த 65 அமைப்புகள் கத்தி போலவே கிரிக்கெட்டையும் தடை பண்ண சொல்லி போராடுமா??
   
எனக்குத் தெரிந்து அவர் நடித்ததே இல்லை, ஆனால் அவர்தான் என் ஹீரோ.. I love you Dad
   
எவ்வளவு புகழ்ச்சி வந்தாலும் ஜஸ்ட் லைக் தட்டா எடுத்துட்டு போயிடனும்ன்னு பாக்றேன், அந்த புகழ்ச்சி மட்டும் வந்து தொலைக்க மாட்டேங்குது.
   
தொலை நோக்கு பார்வை என்பது தூரத்தில் டிராபிக் போலீஸ் பிடிப்பதை அறிந்து யூ டேர்ன் எடுத்து மாற்று பாதையில் செல்வது :)
   
சாட் பண்ற பொண்ணு நம்மை கட்டிக்குவான்னு நம்பி காதலில் குதிக்கிறதும், சக்திமான் காப்பாத்துவாருனு நம்பி மாடியிலிருந்து குதிக்கிறதும் ஒன்னு தான்
   
அஞ்சான் குழந்தைகளுக்கான படம் -லிங்குசாமி #அடபாவிங்களா அப்ப ராஜுபாய் வாய்ல வச்சி இருந்தது "குச்சிமிட்டாயா"
   
ஒரு ஆண் தன்னை ஏன் காதலிக்கிறான் என்பதையும் தன்னை ஏன் விட்டு விலகிச்செல்கிறான் என்பதையும் பெரும்பாலான பெண்கள் ஏனோ அறிந்திருக்கவில்லை..!
   
மனைவி திட்டுவது மகனைத்தான் என்று நம்புபவனை விடவா ஒரு உலக மகா முட்டாள் இருக்கப்போகிறான்.
   
அஜித் என்ற நடிகர் தன்னோட தனிப்பட்ட வாழ்க்கையை அவர் விருப்பம் போல வாழுகிறார் அதை பற்றி எழும் விமர்சங்கள் அவரை பாதிப்பதில்லை
   
கேரளாவை தொடர்ந்து ஆந்திராவிலும் மதுவிலக்கு : செய்தி. இதுவரை நாம அவங்கள்ட்ட தண்ணி கேட்டு நின்னோம்,இனி அவனுங்க நம்மள்ட்ட தண்ணி கேட்டு வரணும்.
   
"இதுவே நீ என்கிட்ட பேசுரது கடைசியாஇருந்தா நான் சந்தோஷப்படுவேன்" என்று உன்னைப்பார்த்து யாராவது சொன்னா கட்டாயம் அவரை சந்தோஷப்படுத்திவிடு.!
   
எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை எங்கெங்கோ தேடி அலைவதற்கு பெயர் தான் ஆன்மிகம்... #ஆமென்
   
பஞ்ச பாண்டவர் அஞ்சு பேரு. பாஞ்சாலிக்கு பிரச்னையே இல்ல. கண்ணகி மாதவி ரெண்டு பேரு. கோவலன் செத்தே போனான்..! #நீதிக்கதைகள் #மீள்
   
அத்தனை பேரும் பொறாமை கொள்வது உலக அழகியிடமோ, உலகப் பணக்காரரிடமோ அல்ல, தன்கையிலிருந்து குழந்தை தாவிச்செல்லும் அந்தநிமிடம் அதன் அம்மாவிடம்தான்!
   

0 comments:

Post a Comment