15-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்




என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை என் நெஞ்சில் நிலைத்தவளை http://pbs.twimg.com/media/Bu7gYt0CYAAB6BS.jpg
   
கோவிலுக்குள் வர மறுக்கும் அந்த நாத்திகருக்குத் தான் எவ்வளவு நம்பிக்கை, கோவிலில் கடவுள் உள்ளார் என..
   
நீங்கள் சரியான வாயாடியெனில் தயவுசெய்து திருமணம் என்ற பெயரில் ஒரு ஆணின் வாழ்வை வீணாக்காதீர். நாங்கள் பிறக்கும்போது பஞ்சோடு பிறப்பதில்லை :(
   
இ த ந் ழியா வ க நீ கடந் திறா ருக் கி ய்... சொ க ள் ற் ம யங் கி க்கி ன் ன ற கிட
   
கோவிலுக்கு வெளியே பிச்சை கேட்பவரை ஏளனமாக எண்ணாதே .. நீயும் ...அதற்க்குதான் கோவிலுக்கு செல்கிறாய் ...
   
"பாத்து போயிட்டு வா" என்பதில் இருக்கும் அக்கரை ஏனோ இந்த TAKE CAREகளில் இல்லை...!!
   
சரிம்மா... sorry ம்மா.... இந்த ரெண்டு வார்த்தை இருந்தாலே போதும் குடும்பத்துல ஒரு பிரச்சனையும் இல்ல
   
"வாங்குவது எல்லாமே வெளிநாட்டுப் பொருட்கள், 'சுதந்திர தினம்' வரும்போது மட்டும் உங்கள் "தேசப்பற்றை" கண்டு வியக்கிறேன்...!!"
   
பணம் சம்பாதிக்கும், பணம் சேமிக்கும், பணம் செலவழிக்கும் ஆசையே போய் விடுகிறது பாரத ஸ்டேட் வங்கிக் கிளைக்கு ஒருமுறை போய் வந்தால்.
   
மரியாதையை வெளிப்படுத்த ஹெட்செட்டை காதிலிருந்து எடுத்தால் போதுமானதாக இருக்கிறது இப்போதெல்லாம்
   
இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடைப்பட்ட வானமும் கடலும் நீல நிறம் இல்லை, ஈழ நிறம்!
   
யார்கிட்டயும் பேச பிடிக்கலைன்னு புத்தி சொல்லுது, யார்கிட்டயாவது கதறி அழனும்னு மனசு சொல்லுது!
   
நான் இந்தியனா! தமிழனா? என்ற கேள்விக்கு . பாகிஸ்தானும்,உலககோப்பையும் ஒரு பதில் சொன்னது! ஆனால் காவேரி நீரும் ஈழமும் ! வேறு பதில் சொன்னது!
   
அஞ்சான் படம் ஒன்ணும் சொல்லிக்கிறாப்ல இல்லயாம். இனி நாளைக்கே 'சக்சஸ்மீட்' வச்சுதான் படத்தை ஓட்டணும்போல...சேனல் சேனலா வருவாய்ங்களே...
   
பணி நிமித்தம் நீங்கள் வெளியூரில் இருந்தால் உங்கள் பெற்றோரிடம் ஒரு வரி அவர்கள் நலம் விசாரித்து சாப்டாச்சா? னு கேட்டா அவங்க மனசு நிறையும்
   
மதம் மாறினால்த்தான் கடவுள் ஆசீர்வதீர்ப்பார் என்றால் உண்மையில் அவர் கடவுள் இல்லை கட்சித் தலைவர்.
   
குடும்பம் "விசு" படம் போலவும், வேலை "வெங்கட் பிரபு" படம் போலவும் சமூகம் "ஷங்கர்" படம் போலவும் அமைந்துவிடுவதுதான்..வாழ்வின் எதார்த்தம்..
   
உதிரும் மலர்கள் தேன் தந்தன, காயும் நிலா பால் தந்தது, எங்கள் தேநீருக்கு! http://pbs.twimg.com/media/Bu99cBQCQAAAUYa.jpg
   
"KFC" யில் உணவருந்தி கொண்டு,இடையில் ஒரு "COCA-COLA "ஆர்டர் செய்து விட்டு"VODAFONE" இன்டர்நெட் வழியாக சுதந்திர தின வாழ்த்துகளை பரிமாறுகிறோம்.
   
RT @MEKALAPUGAZH: ஒரு மனைவி கணவனுக்குக் கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை முதலில் செத்துப்போவதுதான்...
   

0 comments:

Post a Comment