23-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்




தீபாவளி முதல் சரவெடி
   
பார்க்கிற கல்லூரி எல்லாத்துலயும் 100%placementனு போர்டுஇருக்கு அப்ப தமிழ்நாட்ல வேலைஇல்லாம இருக்கவங்கெல்லாம் ஐரோப்பால படிச்சவங்களா இருக்குமோ
   
இந்தத் தொட்டிலில் தூங்கும் குழந்தையை எவரும் ஏழை என்று சொல்லமுடியுமா.? http://pbs.twimg.com/media/BvoyT15CAAAjJEA.jpg
   
"என்னங்க, ஏங்க இப்படி பண்ணிட்டீங்க" "என்புள்ள என்னப்பாத்து #IceBucketChallenge தெரியுமான்னு கேட்டுட்டான் கோதாவரி";-) http://pbs.twimg.com/media/Bvo6vHfCIAEStNj.jpg
   
லைக்காவுக்கு படம் பண்ணி அவனுக்கு பெரிய நஷ்டத்த ஏற்படுத்துற அண்டர்கிரவுண்ட் ஆப்பரேஷன்ல விஜய் இருக்காருன்னு இப்பதான் புரியுது.
   
பட்டாபட்டி தெரிய வேட்டிகட்டிய கிராமத்து மக்களை ஏளனமாய் பார்த்த சமூகம் Jocky தெரிய பேண்ட் போடுவதை உயர்வாக எண்ணுகிறது
   
எதுக்குடா அவன அடிச்சே? ஆறு வருஷத்துக்கு முன்ன என்ன தேவாங்குன்னு சொன்னான்.. அதுக்கு இப்போ ஏன் அடிக்கிறே? நான் நேத்து தான தேவாங்க பாத்தேன்!!!
   
நான் முதன்முதலாய் சென்னை வந்தபோது என்னை அன்புடன் வரவேற்றது ஒரு பெண்ணியவாதி தான்..."அதான் லேடீஸ் சீட்டுன்னு எழுதியிருக்குல்ல...எந்திரி" #மீள்
   
பெரும் காட்டை அழித்து பயண தூரத்தை குறைத்து விட்டோமென திரும்பி பார்த்தால்,நீண்ட தூரத்திற்கு அறுந்து கிடக்கிறது உணவுச்சங்கிலி !
   
எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் எனக்கு தேவையான பணத்தை என்னால் சம்பாதித்துக்கொள்ள முடியும், இந்த கர்வத்துடனே வாழ்ந்துவிட விரும்புகிறேன்
   
இவ்ளோ இனிப்பான மிட்டாய் கொடுத்துட்டு காசை வாங்கி என்ன பண்ணுவார் பாவம்னு கடைக்காரரை பரிதாபப்பட்டதென் குழந்தைப்பருவம்
   
சென்னை - வேர் பிடுங்கி நடப்பட்ட பல மரங்களின் தோப்பு.
   
மிக அதிகளவில் உபயோகித்துக் கொள்ளப்பட்டதும் உதாசினப்படுத்தப்பட்டதும் அன்பாகவே இருக்கும்
   
ஓர் உறவு முறிவுக்கப்புறம் என்ன ரிஸ்க் வேணா எடுக்கலான்னு ஒரு தைரியம் வரும் பாரு, அத சரியா பயன்படுத்தினா எங்கியோ போய்டலாம் வாழ்க்கைல
   
இன்று தோழி என்று நினைத்து அவள் மாமியாரிடம்,"கழுத, ஃபோன எடுக்க இவ்வளவு நேரமா?" என்று கேட்டுவிட்டேன். பின் அவள் அழைத்து 'நன்றி' என்கிறாள்.அவ்
   
தகுதியற்றவர்களிடம் காண்பிக்கப்படும் அதீத அன்பு அவர்களின் பார்வையில் பைத்தியக்காரத்தனம்
   
அடுத்தவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு வாழ்ந்துவிட்டு, அவர்கள் எதிர்பாராவண்ணம் இறந்துவிட வேண்டும்.
   
இந்த பொண்ணுங்களுக்கெல்லாம் பழைய காலம் மாதிரி சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணிவச்சிடனும் லேட்டா பண்றதாலதான் ஊர்லஉள்ளவனை எல்லாம் ஏமாத்துதுங்க;-/
   
இளையராஜா இசை மட்டுமே என் வாழ்வில் நிரந்தரம்
   
ஒரு நடிகரின் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாய் முட்டாள்கள் என முத்திரை குத்தப்படுவது உலக வரலாற்றிலேயே இது தான் முதல் முறை.
   

0 comments:

Post a Comment