2-ஏப்ரல்-2014 கீச்சுகள்
தில்லை நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் "cosmic dance" என்று வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது!! http://t.co/pcMBfZmsKK
   
மகளுக்கு 2 வயசு இருக்கிறப்ப அவ விளையாட கூப்பிடுவா, நான் மொபைல நோண்டுவேன். இப்ப 3 வயசுல, நான் விளையாட கூப்பிடுறேன், அவ மொபைல நோண்டுறா
   
நீ உண்ணும் அழகைக் கண்ட பிறகுதான் உணர்ந்து கொண்டேன் மனிதன் நிச்சயமாய் குரங்கிலிருந்துதான் வந்திருக்கக்கூடும் என்பதை!! #அவளதிகாரம்
   
பாகிஸ்தான் இவ்ளோ கேவலமா வெளாடுறதுக்கு என்ன காரணம்?! அந்த டீம்ல எவன் வீட்லயுமே டேபிள்மேட் இல்ல!!
   
மரணமெனப்படுவது யாதெனில்,கேட்கவே மாட்டோம் என்று நினைத்த சில வார்த்தைகளை கேட்க நேரிடும் தருணத்தின் ஒரு நொடி அதிர்வே.
   
எந்த பெண்ணும் தன் கணவனை தன்னைத்தவிர மற்ற எவரும் திட்ட அனுமதிப்பதில்லை. #தன் குழந்தைகள் உட்பட.
   
ஆஃபீஸ்ல ஒருத்தன் சாப்டுரதுக்கு லஞ்ச்பாக்ஸ எடுத்தான்- பாக்ஸ் காலி. சோறே வெக்காம அவங்க வூட்டாம்மா April Fool பண்ணிருக்கு.# நல்ல சம்சாரம்:-//
   
எருமக்கெடா மாதிரி ஆயிட்டு ஏப்ரல் பூல் சொல்லி காமெடி பண்றவனுக இருக்கறதால தான் இன்னும் இது கொண்டாடப்படுது. :-/
   
@gokila_honey நீ அழகாய் இருக்கிறாய் என்பது ஏப்ரல் fool நாளில் கூட சாத்தியமில்லை ;-))))))
   
"எதையும் மனசுல வச்சுக்காத" எனச் சொல்பவர்கள் எளிதில் மறந்து போகும் படியான காரியங்களைச் செய்வதில்லை.
   
மதுரை மெகா ட்விட்டப்ல கரகாட்டம் வேணும்ங்கிறவங்க டைரக்ட் RT பண்ணுங்க. வேணாம்கிறவங்க fav பண்ணுங்க. தீர்ப்பு உங்கள் கையில் #TnMegaTweetup
   
காதலன்கள் தின வாழ்த்துக்கள் !!!!
   
தந்திடிவியில் சினிமா தகவல்கள் தினமும் தொகுத்து கொடுக்கும் பகுதிநேர பணி கிடைத்துள்ளது #Firststep
   
தோளில் சாய்ந்து அழ வேண்டும்போல் இருக்கிறது என்றேன் சரி என்றான் சட்டென சாய்ந்தபின் தோன்றியது ஏன் அழ வேண்டுமென்று!
   
பான்மசாலாவை பிரித்து தனது வாய்க்குள் நிரப்பும் அந்த சிலருக்கு மட்டும்தான், தனக்கு தானே வாய்க்கரிசி போட்டுக் கொள்ளும் பாக்கியம் வாய்க்கிறது
   
மனதிற்கு நெருக்கமாக நாம் நினைக்கும் சில உறவுகள் இவ்வளவுதான் நம் உறவு என்று உணர்த்தும் போதுதான் வாழ்க்கையே வெறுக்க தொடங்குகிறது
   
ஜடைய பிடித்து இழுத்துக் கொண்டே இருப்பவர்களே, வேட்டி பத்திரமாய் இருக்கிறதா என பார்க்கவும் மறந்துவிடாதீர்.
   
நெல் முளைத்த இடத்தில் கல் முளைத்துள்ளது " ரியல் எஸ்டேட்" #TweetLikeKMK
   
எதாச்சு பொண்ண/பையன பிடிச்சிருந்தா நாளக்கி ஐ லவ் யூ-னு சொல்லிடுங்க . ஓகே சொன்னா லவ் இல்லைன்னா ஏப்ரல் ஃபூல்னு சொல்லி தப்பிச்சுக்கலாம்
   
எல்லா அழகியலும் நமக்கு புலப்படுவது சாத்தியமில்லை. ரசிகனிடம் பேசிப்பாருங்கள்.ரசிப்பிற்குரியவையின் பட்டியல் நீளும்.
   

0 comments:

Post a Comment