12-ஏப்ரல்-2014 கீச்சுகள்




அது வரைக்கும் pulsar splendor scooty னு சொன்னவன் கார் வாங்கினப்பறம் "டூ வீலர்" னு சொல்லுவான் பாருங்க, அங்க தான் பணக்காரத்தனம் ஆரம்பிக்குது 
   
திரும்பிப் பார்க்கையில் 'எங்கு சென்றாலும் நீ என்னிடம்தானே வந்தாக வேண்டும்' என்ற கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது வீடு
   
இது பெரியார் பூமி. அந்தக்கிழவனின் பெயர் சொல்ல கடைசித் தமிழன் ஒருவன் இருக்கும் மட்டும் காவிக்கும்பல் இங்கு காலூன்ற முடியாது.
   
தான் செஞ்ச தப்ப பொண்டாட்டி கிட்ட மறைக்கிறவன் சராசரி மனுஷன்.. தனக்கு ஒரு பொண்டாட்டி இருக்கிறதையே மறைக்கிறவன் பெரிய மனுஷன்.!
   
ஒரு பெண்ணை உண்மையாக நேசிக்கும் ஒருவனால் .... அவளை அடுத்த ஆண்களுடன் சேர்த்து பேச முடியாது .. எந்த சந்தர்ப்பங்களிலும்
   
ஃப்ளைட் டாய்லெட் கதவுல என்னைக்கு "சாந்தி ஐ லவ் யூ"னு எழுதுறானுகளோ அப்பத்தான் தமிழன் முன்னேறுனதா அர்த்தம் :-/
   
ஒரு பெண்ணின் அழகு ஆண்களை அவள் பக்கம் திரும்ப மட்டுமே வைக்கும், அவளது நல்ல குணம்தான் விரும்ப வைக்கும் ;-)
   
இவர்களைப் போன்றோர்க்கு உணவளிப்போர்கள்----->கோவிலுக்குச் செல்லத் தேவையில்லை.....!!!! http://t.co/RYOGSgCWWz
   
வாழ்க்கைல எப்பவுமே கொஞ்சம் சேஞ்ச் வேணும் இல்லனா கண்டக்டர், பிச்சைக்காரன், ஏன் வெயிட் மெஷின் முதற்கொண்டு கேவலப்படுத்துதுங்க
   
ஆணை தவிர எந்தவொரு பெண்ணும் வயதானவர்களுக்கோ, குழந்தையுடன் ஏறிய இன்னொரு பெண்ணுக்கோ தான் எழுந்து அவர் அமர இருக்கை கொடுத்ததாக நான் பார்த்தில்லை
   
அட வெண்ணைகளா இப்பவாது உரைக்குமா உங்களுக்கு! மதச்சார்பின்மை என்றால் இந்து மத சார்பின்மை என்று பொருள்! http://t.co/1ZCn5wIfPC
   
தமிழகத்தில் திமுகவை மீண்டும் தலை தூக்கவிடக்கூடாது - சரத்குமார் # ஆமா, இல்லண்ணா அண்ணன் இன்னொரு தடவ கூட்டணி மாற வேண்டியிருக்கும்
   
கண்ண மூடிக்கிட்டு நடந்து போயி, மொதல எந்த பொண்ண இடிக்கிறோமா, அதயே லவ் பண்ணலாம், அம்புட்டு பொண்ணும் அம்சமா இருக்குங்க # பெங்களூர்
   
அன்புமனிக்கு ஆரத்தி எடுப்புது யாருனு தெரியுதா? திவ்யாவின் தாய்! (இளவரசன்) http://t.co/6cUaiyHR47
   
பேருந்தில் உட்கார ஒரு சீட் காலியாக இருக்காதா என நினைப்பவன்தான், பேருந்து முழுவதும் காலியாக இருக்கும்போது நாலு இடம் மாறி மாறி உட்காருகிறான்.
   
வாட்ச் கட்ற இடத்துக்கு 'மணி'க்கட்டுனு பேர் வச்சவன் தீர்க்கதரசி
   
எந்த சொந்தம் ஒழுங்காக அமையா விட்டாலும் வாழ்க்கை துணை நன்கு அமைந்து விட்டால் ஒரு ஆண் உலகத்தையே வெல்லலாம்..
   
ஜெயலலிதா மகிமையால் அதிமுகவில் சேர்ந்தேன்-ஜெ.கே.ரித்தீஷ்#காலம்பர நம்ம ஆத்துலயே டிஃபன்னு சொல்லிருப்பாங்களே.! http://t.co/KWkNZ2tIfQ
   
உண்மையில் மதச்சார்பற்றவர்கள் தாம் இங்கே சிறுபான்மையினர்.
   
கடைகுட்டி கடைகுட்டினு சொல்லி எப்ப பாத்தாலும் கடைக்கு அனுப்பிகிட்டே இருக்கானுங்க யா. இப்போதான்டா கடைகுட்டி அர்த்தம் புரிது.
   

0 comments:

Post a Comment