6-மார்ச்-2014 கீச்சுகள்




யாரோ ஒருவருக்காக தான் மனம்விட்டு அழ தோன்றுகிறது, அந்த ஒருவர்தான் எப்போதும் அழவைத்துக்கொண்டே இருக்கிறார்....
   
வேலை இல்லாத வடக்கத்தி இளைஞர்களை, பெத்தவங்க தண்ட சப்பாத்தின்னா திட்டுவாங்க?
   
தளபதி படம் பார்தத எவனுமே ரஜினி ரசிகனாகாமல் கடக்க முடியாது.... #தலைவர்டா
   
யாரும் அடுத்தவன் மனைவியிடம் பத்தினி தனத்தை தேடுவதில்லை !!
   
LIVE டெக்னாலஜிய மெகா சீரியலுக்கு யூஸ் பண்ணுன ஒரே இனம் நாம தான் = இந்த ஊருலையே கார் வச்சிருக்கிற கரகாட்ட கோஷ்டி நம்ம கோஷ்டி தான்
   
இந்த ட்வீட்டுக்கு உலகத்தையே எழுதி வைக்கலாம் RT @alexxious மௌனத்துடன் உரையாட தெரிந்தவனுக்கு பூ பூக்கும் ஓசையும் கேட்கும் !!
   
பிடித்த இதயம் அருகிலேயே இருக்க வேண்டும் என்பதே பெண்ணின் உச்சபட்ச எதிர்பார்ப்பு. ஆனால், ஆணுக்கு அப்படி அல்ல.
   
தன் மனைவி அம்மா மாதிரி இருக்கனும்னு பையன் நினைக்கிறானோ இல்லையோ, நம்மள மாதிரியே பிள்ளைய நல்லா கவனிச்சிக்கனும்னு அம்மா நினைக்கிறா!
   
RT @MEKALAPUGAZH: நிறைய மீனோடு திரும்பணும்னு வேண்டினால் இந்திய மீனவர்.. உயிரோடு திரும்பணும்னு வேண்டினால் தமிழக மீனவர்..
   
நாடி, நரம்பு, ரத்தம், சதை அனைத்திலும் இசை ஊறிய ஒருவனால் தான் இப்படி ஒரு இசையை தரமுடியும்... #ராஜாடா #தளபதிடா
   
யாரும் தீண்டிடா இடங்களில் மனதைத் தீண்டினாய் யாரும் பார்த்திடா சிரிப்பை என்இதழில் தீட்டினாய் புதிய உலகை புதிய உலகை தேடிப்போகிறேன் என்னைவிடு!
   
எல்லா ஆச்சர்யங்களும் ஒருநாள் அலுத்துபோக கூடியதுதான்.....
   
நிம்மதியை பிறரிடம் தேடும் வரை கவலைகளை பிறரிடமிருந்து பெற்றுக்கொண்டே தான் இருக்க நேரும்
   
இன்று ஹெட்ஃபோன் அணிந்திருக்கும் காதுகளில் எல்லாம், விரைவில் ஹியரிங்க் எய்ட் இருக்கக் கூடும் # எச்சரிக்கை
   
ஒரு கெட்ட பழக்கம் கூட இல்லாதவனை பெண்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை
   
எவ்வளவு அயர்ந்து தூங்கினாலும் கச்சிதமாய் எழுப்பி விட்டு விடுகிறது ஏதேனும் ஒரு கவலை!
   
உலக படங்களில் இருந்து சுடுறதால தான் கமலுக்கு உலக நாயகன்னு பேரு வெச்சிருப்பாங்களோ.??#டவுட்டு.
   
இப்போழுது கூட எங்காவது சூர்யா என்ற பெயரை கேட்டால், ஒரு நொடி தளபதி ரஜினி நினைவில் வந்து செல்கிறார்.... #த்தா! தலைவர்டா
   
பசியில் இருப்பவனுக்கு சோறு கொடுக்க முடியாவிட்டாலும் அவன் அருகில் சோற்று பொட்டலத்தை அவிழ்க்காமல் இருங்கள் போதும்
   
ஒரு பெண்ணுக்கு எதுனா பிரச்சனைன்னா முதல்ல கூட நில்லுங்க அப்புறம் பெண் தினத்தைலாம் கொண்டாடிக்கலாம் ://
   

0 comments:

Post a Comment