22-மார்ச்-2014 கீச்சுகள்
அதான் தோத்துட்டீங்கள்ல இப்பவாச்சும் சொல்லுங்கடா எங்க அந்த மலேசியா ப்ளைட்ட ஒளிச்சு வெச்சிருக்கீங்க?
   
எவ்வித தயக்கமுமின்றி ஒரு பெண் நம்மிடம் பேசுகிறாள் என்றால் நம்மை முழுமையாக நம்பகிறாள் என்றர்த்தம்.
   
இனி ஸ்கூல் போக வேண்டிதில்லன்னு சந்தோசப்படும் 12th மக்களுக்கு, வாழ்வின் ஆகச் சிறந்த மகிழ்ச்சியான காலம் முடிந்துவிட்டது என்று எப்படிச் சொல்வது
   
அடுத்த கமல் என்ற பேச்செல்லாம் வேண்டாம். அதற்கும் கமலே மேக்கப் போட்டு வந்து நின்று விடுவார்.
   
அழகான பெண்ணை பார்த்த உடன் மனசுல பட்டாம்பூச்சி பறக்குமே அதை புடிச்சி சாகடிச்சிட்டா நாம வாழ்க்கையில முன்னேறிடலாம்.
   
ஒருத்தர புடிச்சுதுன்னா அவங்க என்ன தப்பு பண்ணாலும் புடிக்கும். ஒருத்தர புடிக்கலன்னா அவங்க என்ன நல்லது பண்ணாலும் புடிக்காது ..!!
   
20வது செகண்ட்ல பாருங்க! அன்புமணி கேப்டன அவமானப்படுத்திட்டார். பாவம் கேப்டன் மூஞ்சியே தொங்கிருச்சு :-( https://t.co/U6pAi46khM
   
ஒதுக்கியவர்களுடன் மீண்டும் சேர ஏனோ மனம் வருவதில்லை ஈகோவையும் தாண்டி ஒதுக்கப்பட்டதன் வலி தடுக்கிறது
   
எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள். அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது
   
உங்கள் குழந்தை தமிழ் கற்க 200+ பக்கங்கள் கொண்ட வண்ணப் புத்தகம், இலவசம், தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திலிருந்து http://t.co/XtBSZ3eFe4
   
கேப்டன் மைண்ட் வாய்ஸ் : முக்கியமான விஷயத்த மட்டும் இங்கீலிஸ்லபேசிக்கிட்டு நம்மள மிச்சர் திங்க விடுராங்களே... ;-))) http://t.co/l13eR9xf4s
   
எம்புட்டு உசரம் இருக்கான்யா இந்த பாக் பவுலர் ஜுனைத்? திருப்பூர்ல நின்னுக்கிட்டே திருச்சில ட்ரெயின் கிளம்பிடுச்சான்னு சொல்வான் போல
   
ரெய்னா கிரவுண்டுக்குள்ள வரப்பவே, சங்கர் சிமென்ட் கான்கரீட் கலவைய கைல தடவிட்டு வந்திருப்பான் போல # சிஎஸ்கேடா
   
@Talkativewriter விஜய் எல்லாம் ஒரு ஆளு அவன் மூஞ்சிய பார்த்தா நாய்க்கு கூட பழைய சோறு கிடைக்காது இப்படி கூட ஓட்டுறாங்க கா தளபதிய ;-(
   
முதல் முறை களத்தூர் கண்ணம்மா பார்க்கிறேன். கமலைத் தூக்கி அணைக்கணும் போல் உள்ளது. விளையும் பயிர்... பழமொழிக்குச் சரியான உதாரணம்!
   
"தா வரங்கள் எனக் கேட்காமலே வரங்கள் கொடுப்பவை தாவரங்கள்..!!!"
   
என்னவொரு தத்துவம், பஞ்சாயத்து லைட் கம்பம்போல் ஸ்தம்பித்து நிற்கிறேன் http://t.co/PIWyAWbRS7 (HT @Rasanai )
   
ஆறுதல் தேவைப்படும்போது அப்பாவை ஒரு கணம் தேடிக்கொள்கிறது மனது. அவர் புகைப்படம் அறியும் நான் கடந்து வந்த சோகங்களை.
   
இவ்வளவு ஒல்லியா இருக்கற ஊசிக்கு எவன்டா குண்டூசினு பேரு வச்சது.?
   
o பெற்றோர்கள் அமைவது விதி; நண்பர்களை அமைப்பது மதி
   

0 comments:

Post a Comment