26-மார்ச்-2014 கீச்சுகள்
மனைவியை விட அழகான பெண்ணை சைட் அடிக்கக் கூடாது என்பது முதல் பாடம்; மனைவியை விட அழகான பெண்ணே கிடையாது என்பது கடைசிப் பாடம்.
   
காதலி என்பவள் காதலன் சொல்வதைத் தவிர்த்து மற்ற யார் எது சொன்னாலும் உடனே நம்பக்கூடியவள் !!
   
கட்சிக்காக மகனையே தேர்க்காலில் இட்ட நவீன மனுநீதிச் சோழனே!! ;-)) #அடிங்கடா ஃப்ளக்ஸ
   
எவன் என்று நினைத்தாய் எதைக்கண்டு சிரித்தாய் விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் புதுரூபம்... #fb http://t.co/pUZq98fFjY
   
இன்றைய பெற்றோர்களின் கவலைகளே, இன்டர்நெட்டில்... மகன்களின் டவுன்லோடுகளும் மகள்களின் அப்லோடுகளும் தான். #பபி
   
நான் முழுமையாக மோடியை ஆதரிக்கிறேன்... ஒரே காரணம் தான்... காங்கிரஸை விட கேவலமான ஆட்சியை வேறு யாராலும் தந்துவிட முடியாது... #dot
   
ரொம்ப நேரமா பீட்டர் விட்டுட்டுருந்த பொண்ணுக்கிட்ட எலந்த பழத்துக்கு இங்கிலீஸ்ல என்னனு ஒரு வார்த்தைதான் கேட்டேன்,தமிழ்ல பேச ஆரம்பிச்சிடுச்சு
   
வீரமும், நகைச்சுவை உணர்வும்தான் ஆணின் கவர்ச்சி அம்சங்கள்
   
திமுகவிலிருந்து அழகிரி நீக்கம் - கலைஞர் # போதும் தலைவரே, இப்படி நீக்கி நீக்கி தான் அதிமுக, மதிமுக, லதிமுகன்னு வதவதன்னு பொறக்குது
   
கடமையை செய் பலனை எதிர்பார்காதே-மேனேஜர்களின் மைண்ட் வாய்ஸ்!!...ஓகே..கடமைய செய்றேன் பட் கரெக்டா செய்வேனு எதிர்பார்காதே--என்னோட மைண்ட் வாய்ஸ்!!
   
ஒரே விஷயம் தான் ஆனா அப்பா சொல்லும்போது அறிவுரையாவும் அம்மா சொல்லும்போது ஆறுதலாவும் தெரியுது!
   
விஜய், ஏ.அர்.முருகதாஸ் இணைந்துள்ள படத்திற்கான தலைப்பு 'கத்தி'ஆம்- "பிளேடு" னு வைங்க பொருத்தமா இருக்கும்
   
அன்பானவராய் இருப்பது பெரும்பாலும் நம்மைக் காயப்படுத்துகிறது. ஆனால் வாழ்க்கையை வாழ அதை விடச் சிறந்த வழி கிடையாது.
   
இந்தியாவின் ஆன்மாவை இரண்டாகப் பிளந்த ஓர் இனக் கலவரத்தின் கதை # குஜராத் 2002 கலவரம் # http://t.co/L27h2fPi1Y
   
என்னுடைய இயற்கை வேளாண்மை நெற்பயிர் அறுவடை குறித்த கொஞ்சம் விரிவான பதிவு இங்கே. https://t.co/oFCipGIWLC
   
தயாளு : ஏங்க... அவன் நல்லவங்க! தாத்தா: அவன் ரொம்ப நல்லவண்டீ... கொஞ்சம் கெட்டவனாதான் திரும்பி வரட்டுமே..... #தங்கமீன்கள்
   
ஆண் ஒரு பெண்ணை ஏமாற்ற பல வழிமுறைகளை கையாள வேண்டியுள்ளது. ஆனால் பெண் ஒரு ஆணை ஏமாற்ற ஒரு சிரிப்பே போதுமானதாய் இருக்கிறது.!!
   
குழந்தைகளுக்கு பொய் சொல்லத் தெரியாது என்பதில்லை... சொல்லும் பொய்கேற்றவாறு முகபாவம்தான் வைக்கத் தெரிவதில்லை பாவம்
   
கலைஞரின் மங்காத்தா - ஸ்டாலின் முதல்வர் , அழகிரி எதிர்க்கட்சித்தலைவர் இதுவே கலைஞர் விரும்புவது
   
தினமும் குறைந்தபட்சம் இருவரையாவது சிரிக்க வைக்க வேண்டும். கட்டாயம் அதில் ஒருவர் நாமாக இருக்கவேண்டும். #படித்ததில் பிடித்தது
   

0 comments:

Post a Comment