5-மார்ச்-2014 கீச்சுகள்




ஏசி என்பது நாம் இருக்கும் சின்ன அறையை குளிராகவும் இந்த பெரிய பூமியை சூடாகவும் மாற்றுகிறது
   
குளிக்கிறத வீடியோ எடுத்து நெட்ல போட்டா சைபர் கிரைம். டிவியில போட்டா சோப்பு விளம்பரம்.
   
மகளுக்கு பொம்மை வாங்கி கொடுக்கிற அப்பாவ பார்த்திருப்பீங்க மகளுக்காக போம்மையாவே மாறின அப்பாவ பாத்திருக்கீங்களா! கோச்சடையான்டா!
   
செய்தி:காப்பி அடிப்பவர்களை தடுக்க 500 பறக்கும் படைகள்! #ஹாரீஸ் ஸார் நீங்க ஏன் பயப்படுறீங்க...அது +2 பசங்களுக்கு...
   
சத்தத்துக்கும் இசைக்கும் உள்ள வித்தியாசம், தயாராகின்ற கொத்து புரோட்டா நமக்கா, அடுத்த டேபிளில் இருப்பவனுக்கா என்பதைப் பொறுத்தது..!
   
இனிமேல் சாகும்போது எதை கொண்டுபோறேன்னு கேட்டால், "பாஸ்வேர்டு" என்று தயங்காமல் சொல்லுங்கள்.!
   
உடனிருப்போர் பொறாமைப்படும் அளவுக்கு முன்னேறுவது உங்கள் தவறுதான். ஏங்கும் அளவுக்கு முன்னேற வேண்டும்.
   
சோற்றை விட உப்பிற்கே மரியாதை அதிகம்; ஆனாலும் விரலளவிற்கு மேல் சாப்ட முடியாது "ஆடம்பரமும் அப்படித்தான்"
   
7 வயது முதல் 8 வயது வரை உள்ள நடிப்பு ஆர்வமுள்ள சிறுவர்,சிறுமிகள் புகைப்படங்களை pasangaproductions@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்
   
பிடித்தவர்களை விட அழகானவர்கள் யாருமில்லை #மீள்
   
ஐந்து ஆண்டு நமது எம்ஜிஆராகவும், ஐந்து ஆண்டு முரசொலியாகவும் வெளியாகும் பத்திரிக்கை எது? நம்ம தினத்தந்தி தான்!
   
பெண் தன் உடல் தெரியும்படி உடையணிந்து வேண்டியவற்றை சாதித்துக் கொள்வது 'மூடா நம்பிக்கை'
   
பொண்ணு அஞ்சரை அடி உயரம்னு சொன்னீங்களே.... மூன்றரை அடி அகலம்னு சொன்னீங்களா.... அடேய்ய்ய் தரகரே.. :-//
   
'ஏதாவது ஐந்து கேள்விகளுக்கு விடையளி'க்குப்பதில்,'ஐந்து கேள்விக்கு ஏதாவது விடையளி'#மக்கு மாணவன் கனவு!
   
மதுக்கடைல கலப்பட மதுவாக இருந்தாலும் வாங்கி குடிக்குற பக்கிங்க வீட்ல பழைய சோறு போட்டதுக்கு சண்ட போடுதுங்க...
   
மகன் / மகளின் மடியில் தலைவைத்துப் படுக்கும் பெற்றோரை பார்க்கும்போது, இந்த வாழ்வில் ஒருவித அழகியல் இருப்பதாகத்தான் படுகிறது.
   
தோனி இல்லாமா நீங்க ஜெயிக்கவே முடியாது. . அடேய் இது பாகிஸ்தான் பங்களாதேஷ் மேட்ச்டா. .
   
12 வருசமா அடிமையா நடிச்சாலே ஆஸ்கார் அவார்டு தர்றாங்க, ஆனா தாலி கட்னதுல இருந்து வாழ்க்கை பூரா அடிமையாவே இருக்கோம், நமக்கு எதுவும் இல்லை
   
சமூக வலைத்தளங்களை பற்றி ஒரு நல்ல பதிவு ... சினிமா எக்ஸ்‌ப்ரெஸ் இதழில் ... படித்து பாருங்கள் http://t.co/PTXjxGf3Xf
   
பிடித்த திண்பண்டம் தந்து 'எடுத்துக்கோ' என்றவர்களிடம் 'இல்ல வேண்டாங்க' என்று ஆதங்கமாய் மறுப்பதில் துவங்கியது கவுரவம்
   

0 comments:

Post a Comment