9-மார்ச்-2015 கீச்சுகள்
ட்விட்டர்ல விஜய்,சூர்யா இருக்கலாம் .. ஆனா ட்விட்டர் எப்போதும் அஜீத் ரசிகர்கள் கையில் தான்
   
பொண்ணுங்க இந்த ஒண்ணுக்காவது பயபடட்டும் நினச்சு தான்,கடவுள், கரப்பான் பூச்சிய பிங்க் கலர் ல படைக்கல #HappyWomensDay
   
தமிழ்நாட்டில் ஆழமாய் போய்க் கொண்டிருப்பது நிலத்தடி நீர் மட்டுமல்ல.டீக்கடை டம்ளர்களில் தரும் டீயும் தான்.
   
பெண்களே உங்களை விமர்சிப்பவர்கள் இருக்கட்டும்,முதுகுசொறிபவர்களிடம் மட்டும் எச்சரிக்கையாய் இருங்கள் எப்போது திரும்புவீர்களென காத்திருப்பார்கள்
   
கணவர், 'அலெக்ஸ் பாண்டியன்' பார்த்துக்கொண்டிருக்கிறார். 12 வருட திருமண வாழ்க்கை ஒருவருக்கு நம்ப முடியாத அளவு சகிப்புத்தன்மை தந்திருக்கிறது.
   
சோகம் ஒரு மேகம் அது சொல்லாமலே போகும் வருங்காலம் நேரம் மாறும் புது தென்றல் வந்து சேரும் சில காயங்களும் ஆறும் ❤️🎶 http://pbs.twimg.com/media/B_jeif0UsAADUwI.jpg
   
காரணம் தெரியாமல் ஒருவரிடம் வைத்த அன்பு ,அவர் எப்படி இருந்தாலும் விலக மறுக்கிறது
   
இப்பல்லாம் பொண்டாட்டி கிட்ட நல்ல பேர் வாங்கணும்னா கொஞ்சநேரம் மொபைலை நோண்டாம இருந்தாலே போதும்!
   
தல டிவிட்டர் வராததுக்கு காரணம்.. இங்கு நடக்கும் வசதி இல்லாததால் தான் ..
   
பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்புக் கழி சொருகி, ஒரு கொடூர வன்புணர்வுக்குப் பிறகு சாலையில் விட்டெறிந்த நாட்டில் Happy Women's day வாம். தூ.
   
தாய்மைக்கு பெருமை சேர்பவள்.. தாரத்தில் சிறந்தவள்! அன்பும், பொறுமையும் வடிவானவள்.. ஆணை சிறப்பாக்கும் தகுதியுடைய பெண்ணினமே உன்னை வணங்குகிறேன்
   
பெண் ரசிகர்கள் நிறைய இருக்றதால சூர்யா மகளிர் தினத்துல ட்விட்டர் வந்திருகாரு அதேமாதிரி முட்டாளுங்க நிறைய இருக்றதால அஜித் April 1 வருவாரு போல!
   
ஆண் எப்பொழுதாவது மட்டும் மென்மையை வெளிப்படுத்தும் வலிமையானவன்...பெண் எப்பொழுதாவது மட்டும் வலிமையை வெளிப்படுத்தும் மென்மையானவள்!!
   
பெண்கள் இல்லாத உலகில் ஆண்கள் ஜனிக்கவே முடியாது.ஆண்கள் இல்லாத உலகில் பெண்கள் உயிர்ப்பிக்கவே முடியாது.
   
தலை மேலே உக்காரவெச்சு அழகு பார்க்கும் அப்பாக்கள் நம்மால் ஒருநாளும் தலை குனிய கூடாது !
   
பெண்கள் மீது அபரிமிதமான மரியாதை இருக்கிறது, அதை இணையத்தில் வெளிக்காட்டி தான் நான் நல்லவனென்று நிரூபிக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை...
   
இவ்வளவு பாலியல் தொந்தரவு நடக்கையிலும் நம்மை காக்க ஆண்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை கொண்ட பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்
   
பெண்ணை விட ஆணை பலமாக படைச்சதுக்கு காரணமே நாம அவங்களுக்கு பாதுகாப்பா இருக்க தானே தவிர பலவந்தம் படுத்தறக்கு இல்ல. #HappyWomensDay
   
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பெண்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளித்தாலே போதும்....மகளிர் தினம் ஓன்று தனியாக கொண்டாட தேவை இல்லை.
   
உன்னிடம் நான் அன்பாக இருக்கிறேன் என்பதை உணர்த்தமுடியுமே தவிர சொல்லமுடிவதில்லை ..
   

0 comments:

Post a Comment