26-மார்ச்-2015 கீச்சுகள்
வில்வித்தையில் தேசிய சாதனை படைத்த 3வயது சிறுமி! சூப்பர்சிங்கர் மட்டுமே திறமை என நினைக்கும் சிலபெற்றோர்கள் கவனத்திற்கு http://pbs.twimg.com/media/CA66_G5WQAEEnFW.jpg
   
இந்தியா ஜெயிக்கும்னு சொல்றவங்க ஆர்டி பண்ணுங்க, ஆஸ்திரேலியா தோற்கும்னு சொல்றவங்க Fav பண்ணுங்க #IndvsAus
   
மாண்புமிகு, இதய தெய்வம், கழகத்தின் நிரந்தர பொது செயலாளர், வாழும் வரலாறு.... லஞ்ச் டைம் ஆயாச்சு சாப்பிட்டுட்டு வந்துடுங்க # பட்ஜெட்
   
கோவிலுக்கு சென்று "வரம்" கேட்பதற்கு பதிலாக, வீட்டுக்கு ஒரு "மரம்" வளர்க்க கற்றுக் கொள்ளுங்கள். வரம் காட்டிலும் மரம் நல்லது.
   
அடுத்தமுறை உங்களை படைக்கும் பொழுது வாயே இல்லாமல் படைக்க போகிறேன்...என்னா பேச்சு....
   
ஒரு விஜயை தவிர , மற்ற எல்லா விஜய்களும் ஏதோ உருப்படியாய் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் போல !!
   
இது டெல்லியோ,மும்பையோ? இல்லை நம்ம வேலூர் சிஎம்சி தெருக்களில் தான் இந்த அவலம் தமிழை மறந்த வணிகர்கள் ;-(( #தமிழ்வாழ்க http://pbs.twimg.com/media/CA67lPrWcAEVlHD.jpg
   
கைக்குழந்தை ஒன்று அறுவை சிகிச்சை மையத்தின் வாயிலை நுழையும் போது அக்குழந்தையின் அம்மா இடும் அந்த நீண்ட முத்தத்தில் எவ்வளவு வலி இருக்கும்..
   
சாகப்போகிறோம் எனும் பயத்தை விட, சிறுபுழுவிற்கு ஆசைப்பட்டு மாட்டிக்கொண்டோமே எனும் அவமானமே அதிகமாக தெரிகிறது, தூண்டில் மீனின் கண்களில்! பபி!
   
வேலைபார்க்கும் மக்கள் வரி கட்டும்போது,வேலையே பார்க்காமல் சும்மா நின்று கோடிகளில் சம்பாதிக்கும் கோவில் சிலைகளுக்கும் வருமான வரிபோட்டால் என்ன
   
தாயே அங்காள பரமேஸ்வரி நாளைக்கு ஒருநாள் மட்டும் கரைசேத்தி விட்ரும்மா புன்னியமா போவும் _/|\_ http://pbs.twimg.com/media/CA7I-K6WQAAtsp1.jpg
   
திருமணம் 'ஆகவில்லையே'என்ற வருத்தத்திற்கும், 'ஆகிவிட்டதே'என்ற வருத்தத்திற்கும் இடையிலான பேரானந்தத்தை தருவது 'திருமணம் ஆகப்போகிறது'!
   
இன்றையே தேதிக்கு செய்கிற வேலைக்கு சோறும் போதையும் மட்டும் போதும் என்று வாழ்கிற ஐடி தொழிலாளிதான் கர்மயோகி.
   
விமானம் வெடிச்சாலும் அதுல இருக்கர கருப்பு பெட்டி க்கு எதும்ஆகாதாம் பேசாமா மொத்தவிமானத்தையும் கருப்பு பெட்டிசெய்யர மூல பொருளால தயார்பண்ணஎன்ன
   
எனக்கு அப்பவே தெரியும்! என்னது? விஜய் TV-ல #CWC15 மேட்ச் போடும் போதே., TRB க்காக, இப்படி அழுது செண்டிமெண்ட் பண்ணி தான் முடிப்பாங்கன்னு!
   
👉காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை; ஆனால் கோபத்தின் காரணம் பெரும்பாலும் நல்லதாய் இருப்பதில்லை....!!💕💕
   
பைனலுக்கு வந்து இந்தியாட்ட தோத்திருந்தா டிவில்லியர்ஸ் ரொம்ப மனசு உடைஞ்சிருப்பான் அதனாலதான்.....
   
இந்த வயதிலும் என்னைக்கொஞ்சும் என் தாயிடம் மறைந்து கிடக்கிறது, ஒருகோடி பிள்ளை வளர்ப்புக்கான வழிமுறைகள். ஒவ்வொரு தாயும் ஒவ்வொரு நூலகம்"🚶
   
நோ பால்! ஏண்டா? அவன் ஒக்காந்துனுருக்கான்! :-))))) #localcricket
   
தமிழில் பேசுபவர்களை மரியாதைக் குறைவாக பார்க்காத இடம் என்பதாலேயே, எனக்கு ட்விட்டர் மீதான ஈர்ப்பு அதிகரித்து...!!! மீள்...!!!
   

0 comments:

Post a Comment