5-மார்ச்-2015 கீச்சுகள்




காலைல வாய்ல பேஸ்ட் நுரையோட பாத்ரூம்ல செத்த நேரம் கண் அசந்துட்டேன், உடனே சொந்தகாரனுக்கெல்லாம் சொல்லியனுப்பிச்சிடானுங்க 😥😥
   
"சமூகம் மலடி என அழைப்பவளையும் அம்மா என்று அன்போடு அழைக்கிறான் பிச்சைக்காரன்!"
   
இவர்களில் யாருக்கு மாஸ் லுக் நல்லா இருக்கு? தளபதி பேன்ஸ் = RT செய்யவும் தல பேன்ஸ் = Fav செய்யவும் http://pbs.twimg.com/media/B_LX825VIAAYLR2.jpg
   
ரேப்பின் போது அமைதியாக இருந்திருந்தால் டெல்லி மாணவி செத்திருக்க மாட்டாள் - accused // புடிச்சவுடனே பொளந்திருந்தா இப்டி பேசி இருக்க மாட்ட!
   
திண்ணைகளில்லாமல் வீடு கட்டத் துவங்கிய போதே முதியவர்களுக்கு இடமில்லை என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது
   
சிரிப்பு மட்டும்தான் என்னை மிருகத்திடமிருந்து வேறுபடுத்தியது, இப்போது அதையும் மறந்துவிட்டேன்....
   
எழுதுங்கள் என் கல்லறையில்.. இவன் இரக்கமில்லாதவன் என்று.. பாடுங்கள் என் கல்லறையில்.. டங்காமாறி ஊதாரி புட்டுகின நீ நாறி என்று..
   
தயங்குபவர்களுக்கும் பயப்படுபவர்களுக்கும் யோசிப்பவர்களுக்கும் இந்த உலகில் எதுவும்சாத்தியமில்லை, துணிவும் முயற்சியும்தான் வெற்றியின் முதற்படி!
   
அவமானப்பட்டுவிடக்கூடாது என வாழ்பவர்களே அதிக அவமானத்தை சந்திக்கிறார்கள். யாரைப் பற்றியும் கவலை கொள்ளாமல் வாழ்பவர்களை அவமானம் நெருங்குவதில்லை.
   
படிக்காதவர்களிடம் பேசும்பொழுது அவர்களுக்கு புரியும்படி பொறுமையாக ஆங்கிலம் கலக்காமல் பேசி ஒரு விஷயத்தை சொல்பவரே உண்மையாக புரிந்து படித்தவர்!
   
பஸ்ல ஒருத்தனை அடிச்சானுங்க. இடுப்புல கை வச்சானா?ன்னு புருஷன் கேக்க,அந்தம்மா "அதுக்கும் மேல"ன்னு சொல்லுது. பெரிய விக்ரம் ஃபேனா இருக்குமோ?
   
சிகரெட்டுக்கும் கேன்சருக்கும், 'ஊதிய' ஒப்பந்தம்!
   
முன்னேறுன்னு தட்டிக் கொடுப்பது நட்பு இல்ல. கையை பிடிச்சி தர தரன்னு வாழ்க்கை படி மேல உயர உயர இழுத்துட்டு போவதுதான் நட்பு.
   
தமிழ்ல டைப் மட்டுமே பண்றோம் ஆனா எழுத வாய்ப்பு கிடையாது கையெழுத்து மறந்து போச்சோன்னு ஒருசந்தேகம் அதனால எழுதி பார்த்தது http://pbs.twimg.com/media/B_PoBakUoAEBtsI.jpg
   
பெற்றோர்களே… உங்கள் மகள்களுக்கு அழக்கூடாது என்று மட்டும் சொல்லி வளர்க்காதீர்கள். ஆண்களை அழவைக்கவும் கூடாது என்பதையும் சொல்லி வளர்க்கவும்.
   
பார்லிமெண்ட் ஹோட்டலை நம்ம ஊர்ல வச்சிட்டு ,நம்ம ஊர் சரவண பவன் ஹோட்டலை பார்லிமெண்ட்ல வச்சாதான் டா தெரியும் !நாங்க படுற அவஸ்தையை
   
வீணையின் நரம்பை மீட்டி மீட்டி அது வலியில் கதறும் ஒலியை நாம் இசை என்று ரசிக்கிறோம்
   
இன்றைய சூழலில் கல்யாணத்துக்கு வருபவர்களை நன்கு உபசரித்து அனுப்புவதை மறந்து, அவர்களை பிரமிக்க வைக்கவே அதிக முயற்சிகள் எடுக்கப்படுகிறது.
   
இணையத்தில கடலை போடுறவன செருப்பால அடினு டயலாக்.. நீங்க ஏன்மா கடலை போடுறீங்க, எல்லா பசங்களும் எல்லா பெண்களிடமும் கடலை போடுவதில்லை
   
பொம்மைத் துப்பாக்கியை பிடித்திருப்பவர்கள் தான் ஹீரோவாக வர்ணிக்கப்படுகிறார்கள். மீன்பிடி வலையையோ, ஏர் கலப்பையையோ பிடித்திருக்கும் கைகளை அல்ல!
   

0 comments:

Post a Comment