28-மார்ச்-2015 கீச்சுகள்




நல்லா பாருங்கடா இக்கண்ணீரில் தெரிவது போலித்தனமோ, சுயநலமோ அல்ல! 100கோடி மக்களின் நம்பிக்கையை பொய்க்க விட்ட வலி அல்லவா! http://pbs.twimg.com/media/CBCicStUsAI3yCe.jpg
   
சரி தோத்துட்டோம்..ஆனா! தோனி ஆடிட்டு இருக்கு வரைக்கும் ஜெயிச்சிருவோம்'னு நம்பிக்கை இருந்த தோனி ரசிகர்கள் மட்டும் RT பன்னுங்க. #கணக்கெடுப்பு.
   
குடி போதையில் மது என நினைத்து பெட்ரோலைக் குடித்தவர் பலி.# ஒரு லிட்டர் பெட்ரோல் எமலோகம் வரை கொண்டு போயிருக்கு..செம மைலேஜ்..!!
   
தோனியை வெறுப்போர்க்கு நெஞ்சை நிமிர்த்தியும், தோனியை விரும்புவோருக்கு பாதம் பணிந்தும் சமர்ப்பிக்கிறேன்.!? http://www.twitlonger.com/show/n_1sldtvp?new_post=true
   
ஒரு பொன்னு உங்கள தொட்டு பேசுனாலோ, நெருங்கி நின்னாலோ,பக்கத்துல உக்காந்தாலோ காதல் க்ரஷ் னு எதும் அர்த்தமில்லை. அது உங்க.மேல இருக்க நம்பிக்கை
   
நமக்குப் பிடித்தவர்கள் அடிக்கடி உபயோகிக்கும் சில வார்த்தைகளை நாளடைவில் நாமும் உபயோகிக்கத் தொடங்கிவிடுகிறோம்.
   
கால்குலேட்டர வெயில்ல நீட்றது, டீவி ரிமோட் பின்னால தட்றது, பேட்ரிய நாக்குல நக்கிபாக்றது #இந்திய நீயூட்டன்கள் ஐயின்ஸ்டீன்கள் 😂
   
கிரிக்கெட் மூலமாகத்தான் நாட்டுப்பற்றை எடைபோடுகிறீர்கள் என்றால் உலக மகா மடையன்களில் ஒருவராக இருக்கின்றீர்கள் என்ற பெருமைக்கும் உரியவராகிறீர்
   
வெற்றி பெற்று அதை சச்சினுக்குக் சமர்ப்பித்து அவரைத் தோளில் தூக்கி வலம் வந்த தோனியே எனக்கு நினைவில் வருகிறார் . அவர் தோல்வி அல்ல
   
போன தடவை அவன அடிச்சோம், இப்ப அவன் அடிச்சுட்டான், அடிக்கு அடி சரியா போச்சு # ஐபிஎல்லுக்கு வந்து சேருங்கடா டேய்ய்ய்
   
அடேய் மோசக்காரா?! விளம்பரத்துக்காக எப்படினாலும் எழுதுவீங்களா?! இன்னைக்கு நீ தான் எங்களுக்கு சட்னி #ShameOnDinamalar http://pbs.twimg.com/media/CBEe2z0VEAAyYA1.jpg
   
எப்படி யோசித்தாலும் யாரோ ஒருவருக்கு அடிப்படைத் தேவை யாரோ ஒருவரின் அன்பாகத்தான் இருக்கிறது.
   
செய்தி இப்டிதான் இருக்கும்ன்னு நேற்றே பலர் இங்க சரியா கணிச்சிட்டாங்க, ஒரு பத்திரிகைக்கு இதைவிட பெருந்தோல்வி இருக்க முடியாது #தினமலர் சட்னி
   
கடவுள் : "மகனே என்ன வேண்டும் உனக்கு" பக்தன் : "நல்ல வேலை, அறை நிறைய பணம், நிம்மதியான தூக்கம்" கடவுள் : "ததாஸ்து" http://pbs.twimg.com/media/CBHeDbcUUAARX4T.jpg
   
சாலையோர மரங்களை சாமியாக்கியது போல் வனங்களில் உள்ள மரங்களையும் சாமியாக்கிடலாம்... மரம் வெட்டுவதாவது குறையும் #மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் !
   
கூகுளிடம் சந்தேகம் கேட்க யாரும் கூச்சப்படுவதில்லை
   
கவனிச்ச வரை மணிரத்னம் ஒரு 'மிரர் சீன்' ஆவது வைக்காத படங்களே இல்ல. A #ManiRatnam Film http://pbs.twimg.com/media/CBFtv8bUUAAsK3L.jpg
   
இன்னைக்கு நிறைய பேர் தோனி டிபி மாத்தி வச்சிக்கிட்டாங்க. வெற்றியை கொண்டாடும் போது இது சகஜம்.ஆனால் தோல்விக்கு பின் இது கண்டிப்பாக அசாதாரணம்👍
   
வெற்றியும் தோல்வியும் நிலையற்றது. வெற்றியில் உலகம் நம்மை அறியும், தோல்வியில் இந்த உலகத்தை நாம் அறிந்து கொள்கின்றோம். #Truewords
   
தோனியின் இடத்தில் ஒரு 10 நிமிடம் இருக்க சொன்னால்கூட மனஅழுத்தம் காரணமா பலர் தற்கொலை செஞ்சுப்பாங்கன்னு நினைக்கிறேன்..
   

0 comments:

Post a Comment