13-மார்ச்-2015 கீச்சுகள்
நல்லவேள நியூட்டன் இங்கிலாந்துல இருந்ததால விஞ்ஞானி ஆனாரு,இந்தியாவுல இருந்திருந்தா,ஆப்பிள்மரம் போதி மரமாகிருக்கும்,நியூட்டன் புத்தனாகிருப்பார்
   
சட்டமன்ற தேர்தலை சந்திக்க தாராளமாக நிதி தாருங்கள்: கருணாநிதி #கலாநிதி, தயாநிதி, உதயநிதி, அருள்நிதி போதாதா? இன்னும் நிதி வேணுமா?
   
இன்று நான்காவது பிறந்தநாள் கொண்டாடும் இளையமகள் நிகிலா, ஆறரையாவது பிறந்தநாள் கொண்டாடும் மூத்தமகள் நித்திலா http://pbs.twimg.com/media/B_3OgfGVEAAnHkb.jpg
   
எர்வாமேடினுக்குத் தில் இருந்தா சத்யராஜுக்கு முடி வளர்த்திக் காட்டட்டும்! சும்மா போட்டோ ஷாப் பண்ணி விளம்பரம் செய்து மக்களை ஏமாத்திக்கிட்டு!
   
மிடில் க்ளாஸ் அப்பா வாங்கிய டூவீலர் வண்டி- அவருக்காக அந்த வண்டி ஓடியதை விட வண்டி வாங்குவதற்காக அவர் ஓடியதே அதிகம்!!
   
இதுதான் நடக்கும் என்று தெரியும் இருந்தாலும் ஒரு அதிசயம் நிகழ்ந்துவிடாதா என்று காத்துக்கொண்டே இருக்கிறது மனம் !
   
நாம கஷ்டப்படக்கூடாதுன்னு நெனைக்கிற ஒரு ஜீவனுக்காக, எவ்வளவு வேணும்னாலும் கஷ்டப்படலாம்...!!!
   
உலகில் பெயரைக் கொண்டே மொழியின் தன்மையை அறியும் பெயர் வேறு எந்த மொழிக்கும் கிடையாது! த-வல்லினம் மி-மெல்லினம் ழ்-இடையினம்! இ.#அறிவோம்தமிழ்!
   
(((((""சபாஷ்""))))) வரும் 15-ம்தேதி முதல் மனிதக் கழிவுகளை மனிதன் அள்ள தடை அமலாகிறது. http://pbs.twimg.com/media/B_3SD-UUwAE9FXm.jpg
   
செல்ஃப் ஷேவிங் பண்ணும்போதும் ஒரு "undo" ஆப்ஷன் இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்?! மீச போச்சே~ #செல்ஃப்த்தூ
   
நாம் வளர்ந்துவிட்டு சட்டை சிறிதாகி விட்டது என்று சட்டையை குறை சொல்லுகிறோம். அதுசரி நாம்தான் மற்றவர்களை குறை சொல்லி பழகியவர்கள் ஆச்சே.!!!!
   
பிள்ளைகளுக்கு மோடி என்று பெயர் வையுங்கள்-தமிழிசை மொதல்ல வடஇந்தியன பாரதி , வஉசி , வாஞ்சிநாதன்னு பேர் வைக்க சொல்லுங்க !
   
பெப்ஸி கேட்டு கோக் தான் இருக்குன்னு சொன்னவுடனே 10செகண்ட் திங்க் பண்ணிட்டு சரி குடுங்கன்றான்! 2க்கும் எதோ வித்யாசம் கண்டுபிடிச்சிருப்பான் போல
   
"அம்மாவை தவிர்த்து நள்ளிரவில் போன் செய்தவுடன் எடுத்து என்னடா ஆச்சு இந்த நேரத்துல என முகம் சுழிக்காமல் பேசும் ஒருவரையாவது பெற்றிடவேண்டும்
   
பிரபு சாலமன் சத்தமே இல்லாம மோடி வாழ்க்கையே தத்ரூபமா "கயல்"ன்னு படமா எடுத்துட்டாரு # பறவையா பறக்கிறார்,காத்துல மிதக்கிறார்
   
சிம்புவை கிண்டல் செய்வதை நிறுத்தி கொள்ளுங்கள் - பிரேம்ஜி #சாதா காக்காவை சொன்னா அண்டங் காக்காவுக்கு கோவம் வருது பாரேன்...
   
"இல்லடி.. குடிச்சிட்டிருக்கேன்.." "சரி. நான் அசைன்மெண்ட் எழுதுற மாதிரி நடிக்குறேன். 11மணிக்குள்ள வந்துரு. டோர் தொறக்குறேன்." #தங்கச்சி 😍☺️💗
   
ஒருவருடைய முக்கியத்துவம் அவர் விலகியே நொடியில் உணரப்படுகிறது ..
   
பார்முலானு படிச்சவன் .. ஃபாரின்ல இருக்கான் .. சூத்திரம்னு படிச்சவன் .. சும்மா வெட்டியா சுத்திக்கிட்டு இருக்கான் .. என்னா உலகம்டா ??
   
டுவிட்டர்ல மூலைக்கு மூலை லவ் பண்றாணுக,சண்டையும் போட்றாணுக,சூசைட் அட்டம்ட் கூட பண்றானுக..யார்டா நீங்கல்லாம்.?
   

0 comments:

Post a Comment