12-மார்ச்-2015 கீச்சுகள்




நல்லவேளை தாலி மஞ்ச கலர்ல தான் இருக்கனும்னு சொன்னாங்க, இல்லைனா இதுங்க டிரஸ்க்கு ஏத்த மாதிரி கலர் கலரா போட்டுட்டு திரியும்ங்க.. 😉😜
   
ATM PIN திருப்பி போட்டா போலிஸ் வருமாம் அதுக்கு கரைட்டா போட்டு என் பேலென்ஸ் பார்த்தா திருடனே பரிதாபபட்டு ஒரு 1000, 2000மோ கொடுத்துட்டு போவான்
   
மனதிற்கு பிடித்தவர் ஆர்டி செய்கையில் கன்னத்தை கிள்ளுவது போன்றதொரு உணர்வு !!
   
மோடியின் பெயரை குழந்தைகளுக்கு சூட்டுங்கள் - தமிழிசை எதுக்கு வருங்காலத்துல பொண்டாட்டிய விட்டுட்டு ஓடுறதுக்கா
   
புரிந்துகொள்ளாத மனிதர்களின் நட்பை தூக்கி எறிய ஒருநொடி ஆகாது பழகியதற்காக அமைதியாக இருக்கின்றோம் என்பதை மட்டும் அவர்கள் புரிந்து கொண்டால் சரி!
   
கடவுள் என்பது கற்பனை எனில் இந்த கற்பனைக்கு கடவுள் என்று பெயர் வைத்தவன் எவ்வளவு கற்பனை திறன் உடையவனாக இருப்பான்...
   
எல்லா எடத்துலயும் இப்படிதான் போல!!! :P)))))) #பசங்கடா http://pbs.twimg.com/media/B_z9wokUIAE7ztq.jpg
   
கடவுள் எப்போதும் நாத்திகவாதி தான்! யாரையுமே வணங்குவதே இல்லை.!!
   
என்னதான் அமெரிக்காரன் நைட்டிய கண்டுபிடிச்சாலும் அதுல துண்டு போட்டு கவர்பண்ணி கற்ப காப்பாத்துற டெக்னிக்க கண்டுகிட்டது நம்மூர் பொண்ணுங்க தான்.
   
மருந்து மாத்திரைகளை விட பேசும் வார்த்தைகளே நோயை குணப்படுத்துகின்றன, அதிலும் டாக்டரின் '2000 ரூபாக்கு ஒரு ஊசி இருக்கு, போடவா?'
   
"திருப்பதி"யில வெறும் பஸ் ஸ்டாண்ட் தான்டா இருக்கு.. "திருமலை"யில் தான் சாமியே இருக்கு! ;))
   
புரிதலுக்கு நன்றி என்பது நீங்கள் புரிந்து கொள்ள போவதும் இல்லை உங்களுக்கு புரிய வைக்கும் அளவுக்கு நான் வெட்டியும் இல்லை என்பதன் சுருக்கமே
   
இன்னைக்கோட விட்டுடனும்னு தினசரி நினைக்கிற கெட்ட பழக்கம் எல்லாருக்கும் உண்டு. விடவும் முடியாது. விடனும்னு நினைக்காம் இருக்கவும் முடியாது...
   
ஊர்ல இருக்கற பசங்க /பொண்ணுங்க எதுனா ஒரு மொக்கை ஜோக் போட்டுட்டு அவங்க தப்பிக்க ட்வீட் லைக் சிபி னு போட்ராங்க.;-)))
   
ஏ.ஆர்.முருகதாஸ் மயங்கி விழுந்தப்போ ஆஸ்பத்திரில சேர்த்து கூடவே இருந்து பார்த்தார் ஒரு போட்டோ கூட இப்போ வர நான் பார்க்கல அதான் "விஜய்"
   
இவரு பெரிய லாடு லபக்கு தாசு'னு ஒரு கேலி சொல்லாடல் இருக்கு! இதுல வரும் லாடு லபக்குன்றவர் சென்னையில் வாழ்ந்த மேதாவி 'Lord Labough Dash' ஆகும்!
   
குடிக்காதவனுக்கு மட்டுமல்ல... பகுத்தறிவாளனுக்கும் நண்பர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள் போல...
   
ஆரம்பம் முதல் தமிழர் கலாச்சரத்துடன் இருக்கும் பறையை ஒதுக்கும் அதே சமூகம், சில நூறு ஆண்டுகள் முன் வந்த தாலியை கலாச்சார அடையாளம் என்கிறது
   
பஞ்சம்பிழைக்க வந்த பரதேசிகள்பன்னாட்டுகம்பெனிகள் கோடிகளில்புரள தாய்மண்ணில்தத்தி தவழ்ந்த விவசாயி தெருவியில்புரள்கிறான் http://pbs.twimg.com/media/B_yiizOUsAEUVmj.jpg
   
ஒரு பெண்ணை ஈர்ப்பதற்கு ஆண் அழகன் தேவை இல்லை! கொஞ்சம் அழகான அன்பைப் பொழிந்தால் போதுமானது..!!
   

0 comments:

Post a Comment