25-ஜனவரி-2015 கீச்சுகள்
ஓபாமா மனைவிக்கு 100 பட்டு புடவை பரிசளிக்கிறார் மோடி. இதே நாம அடுத்தவன் பொண்டாட்டிக்கு வாங்கி குடுத்தா ஊர் ஒன்னுசேந்து காரித்துப்பும்!
   
அடுத்தவர் தோல்வியைக் கொண்டாடும் மனநிலை இருக்கிறதெனில் நாம் தோற்று விட்டோம் என்றே அர்த்தம்!
   
ஒபாமா:"யோவ்..என்னய்யா எனக்கு குடுத்த டீ கால் டம்ளர்தான் இருக்கு... பாதுகாப்பு அதிகாரி"அது மூன்றடுக்கு பாதுகாப்பை தாண்டி வந்திருக்கு சார்...
   
யப்பா பாதயாத்திரை பக்தனுங்களா, கடவுளாய்யா வந்து கிளீன் பண்ணுவாரு? (நேற்றைய க்ளிக்) http://pbs.twimg.com/media/B7-OKOuCEAAToYy.jpg
   
விஜய் = என் ரசிகர்கள் உங்களை ஓட்டிட்டு இருக்காங்க போல? அஜித் = படம் ரிலீஸ் ஆகி ஓட ஆரம்பிச்சதும் தெறிச்சு ஓடுவாங்க பாருங்க
   
இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கிய ""மாவீரர்"" நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ""பிறந்த தினம் இன்று"" <---23-01-1897---> http://pbs.twimg.com/media/B7_1PoOCQAAfMCa.jpg
   
PK படம் 600 கோடி வசூலாம், இப்ப அந்த PKன்னா, புதிய கீதைன்னு வடை சுட நாலு பேரு, அடுப்ப பத்தவச்சு, எண்ணைய காய வைப்பாங்க பாருங்க
   
புத்திசாலித்தனமாக பேசினால் பெண்களை கவர்ந்துவிடலாம் என்று நினைப்பவர்கள் நினைவில் கொள்க, பெண்களுக்கு பேசப்பிடிக்கும்.. கேட்க அல்ல.
   
பிப்ரவரி மாதமாவது பொங்கல் வருமா....தல ரசிகர்கள் தூக்கம்..!!!! http://pbs.twimg.com/media/B79J7ksCQAEXLAu.jpg
   
கட்சி அனுமதியின்றி தனிப்பட்ட முறையில் கூட்டங்கள் நடத்துவது கட்சிக்கு விரோதமானது-ஈ.வி.கே.எஸ்#ரெண்டு பேரு நின்னு டீ குடிச்சது குத்தமாய்யா?
   
பாஸ்போர்ட், விசா இல்லாம கூட வெளிநாடு வரைக்கும் போய்ட்டு வந்துடலாம் ஆனா.. வேலை இல்லாம சொந்தக்காரங்களோட வீட்டு விஷேசத்துக்கு போகவே முடியாது..!
   
என் பேட்ச்ல, பல பசங்களை தல பக்கம் திருப்புனது ரெட்டை ஜடை வயசுல வரும் 'காஞ்சிப்பட்டு சேலை கட்டி' பாட்டு தான் :-) # என்னா பாட்டுடா
   
விஐய் படம் : பிரச்சனை உண்டு ஆனாலும் வாங்க distributors உண்டு! அஜித் படம் : பிரச்சனை இல்லை ஆனாலும் வாங்க distributors இல்லை!
   
இந்த விஜயை 'மிஸ்' பண்ணுகிறவர்கள்தான் விஜயை அதிகம் இரசித்தவர்கள் ;-)) http://pbs.twimg.com/media/B8CfaIsCYAIW9Ob.jpg
   
என் படையில் சேரும் எல்லா வீரர்களுக்கும் சம்பளம் உண்டு. சம்பளம் வீர மரணம் -நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
   
ஓபாமா மனைவிக்கு 100 பட்டு புடவை பரிசளிக்கிறார் மோடி. #ஏய்யா..ஒரு பலூன் வாங்கித்தர வக்கில்ல.. http://pbs.twimg.com/media/B8A-Lk3CIAAD83u.jpg
   
அவன் போடும் ' ம் 'களை மாலை தொடுத்தால் நான் விஸ்வரூபம் எடுத்தாலும் பாதம் தொடும்.
   
உயிரோட இருந்தா இருப்பு சாண்றிதழ் செத்தா இறப்பு சாண்றிதழ், இடைல ஏன்டா சாதி சாண்றிதழ்
   
ரப்பர் வைத்த புதுப்பென்சிலுடன் பள்ளிக்குச் சென்றபோது பெற்ற குதூகலப் பெருமை, ஸ்மார்ட் போன்/டேப் வாங்கியபோதும் கிடைக்க வில்லை...!!!
   
ஒபாமா விசிட்டுக்கு போட்ட 15000 சிசி கேமரால, 1000தான் அவர் பாதுகாப்புக்கு, மீதி 14000 அந்த 1000 கேம்ரா திருடு போகாம கண்காணிக்கவாம்
   

0 comments:

Post a Comment