18-ஜனவரி-2015 கீச்சுகள்
எங்க கிராமத்து அரசு பள்ளியில் சிறிய நூலகம் அமைக்க வேண்டும் என்கிற அப்பாவின் கனவை இந்த குடியரசு நாளில் நிறைவேற்றப் போகிறேன்..#நிறைவு
   
டாக்டர்கிட்டயும், வக்கீல்கிட்டயும், ஷங்கர்கிட்டயும் சொல்லக்கூடாத ஒரு வார்த்தை, "எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல" #inspired
   
ஒரு பெண்ணிடம் பேசும்போது நம் வீட்டு பெண்ணிடம் யாராவது இப்படி பேசினால் சும்மா விடுவோமா என யோசித்துவிட்டு பேசுவது ஆண்களுக்கு அழகு
   
இப்பொழுதெல்லாம் துரோகிகளையும் ஏமாற்றுபவரையும் கண்டு ஆச்சர்யம் வருவதில்லை உண்மையாய் நியாயமாய் வாழ்பவர்களை கண்டுதான் ஆச்சர்யம் வருகின்றது!
   
டெல்லியில் ஒபாமா வருகைக்கு வைக்கும் இந்த 15000 CCTV கேமராவ மொதல்லயே வெச்சுருந்தா அந்த பொண்ணுக்கு ஒன்னும் ஆயிருக்காதே.. அதுவும் உயிர்தான?
   
மாதொரு பாகன் பிடிஎஃப் வடிவில் இங்கே கிடைக்கிறது. இதுவரையிலும் படிக்காதவர்கள் அவசியம் இறக்குமதி செய்து படிக்கவும்..! http://fb.me/7pFNcTJjg
   
இதுக்கு பேருதான் கிரியேட்டிவிட்டி ட்ராயிங்... "நானே வரஞ்சது" http://pbs.twimg.com/media/B7jW4ANCIAER7gs.jpg
   
வளர்ச்சி என்று சொல்லி வளர்ந்தது என்னவோ பிஜேபியும் மோடியும் தான்.. இந்தியா அப்படியே தான் இருக்குது..
   
மின்நூலாக மாதொருபாகன். பரப்புக. https://dl.dropboxusercontent.com/u/60228630/Mathoru%20Pagan.pdf
   
நீ யெல்லாமாடா டுவிட் லாங்கர் எழுதரனு திட்டிட்டே படிக்காதீங்க இங்க வர கேக்குது !! ஆரம்பத்துல உங்கள மாறி தான் (cont) http://tl.gd/n_1sk2a3m
   
வாழ்க்கை டுவிட்டரும் பேஸ்புக்கும் மட்டும் அல்ல. வெளி உலகைப் பாருங்கள். நிஜ மனிதர்களுடன் பழகுங்கள். ஊடகம் ஊறுகாயாக மட்டுமே இருக்கட்டும்.
   
விஜய்டிவில நல்லவேளை நியூஸ் இல்லை. இருந்திருந்தா..சென்செக்ஸ் 20 புள்ளி குறைஞ்சா சோகமா இசை போட்டு புரோக்கர்களை அழவிட்டுக்காமிச்சிருப்பாங்க.
   
சவுரி முடி வைத்து ஜடை பின்னி.....என் அழகி....#மகளதிகாரம்... 😄 http://pbs.twimg.com/media/B7hwLd0CMAEe78F.jpg
   
நடிகர்கள் அரசியலுக்கு வரலாம் ஆனால் முழுமையான மக்கள் தலைவராக அமைய முடியாது என்பதை மாற்றிய முதலும் கடைசியுமான (!) உதாரணம் எம்.ஜி.ஆர்
   
அம்மாவின் நீதிமன்றத்தில் பிள்ளைகள் எப்பொழுதும் நிரபராதிகளே!!!!
   
அப்பாவின் தோள் மிது ஏறி சாமி பாா்க்கும் பால்யத்தில் தொிந்ததே இல்லை??சாமியின் தோள் மேல்தான் இருக்கிறேன் என்று!!!
   
'ராஜா ராணி' படம் வந்த பின் பெண்கள் 'ப்ரதர்' என்று அழைத்தாலும் கோவம் வருவதில்லை. வாய்ப்பிருக்கு மச்சி... :P
   
ஆபாசமாக எழுதுவது இலக்கியமெனில் பத்திரமாக வைத்திருங்கள்..உங்கள் எழுத்தை உங்கள் பிள்ளைகள் பார்க்கட்டும்
   
சின்மயிக்கு தல மோதிரம் கொடுத்தது யாருக்கும் தெரியாது,ஏன் சின்மயிக்கே தெரியாது! அந்த அளவுக்கு தல simplicity don't like publicity!
   
ஹ்யூஸ் தலையில் அடிபட்டு இறந்ததற்காக கிரிக்கெட் தடை செய்யப்பட்டதா? பாரம்பரிய வீர விளையாட்டிற்கு தடைவிதிக்கப்பட வேண்டுமா? #WeSupportJallikattu
   

0 comments:

Post a Comment