25-நவம்பர்-2014 கீச்சுகள்
பிரசவவலி பற்றி என்ன தெரியுமென்று ஆண்களிடம் கேட்கக்கூடாது. இரண்டு உயிர்களும் பிழைக்க வேண்டுமே என்ற உயிர் பதறும் வலியை அவன் மட்டுமே அறிவான்.
   
சந்தோஷம் சிம்பு படம் மாதிரி ரெண்டு வருஷத்துக்கு ஒருக்கா தான் வருது ! ஆனா,கவலை விமல் படம் மாதிரி வாரா வாரம் கரெக்ட்டா வந்துடுது !
   
ஐன்ஸ்டீனே படிச்சு முடிச்சிட்டு இரண்டு வருஷம் வேலை தேடி அலைந்தாராம்.. ஐன்ஸ்டீனை மதிக்காத சமூகமா நம்மை மதித்துவிட போகிறது
   
ஏழைக்கு வந்தால் சொறி சிரங்கு! பணக்காரனுக்கு வந்தால் ஸ்கின் இன்ஃபக்ஷன்! :-/
   
இன்று மகனின் பிறந்த தாள் http://pbs.twimg.com/media/B3LhTFvCIAAo8e7.jpg
   
வெளிநாட்டில் இருந்துகொண்டு, பிள்ளை தன்னை தேடுகிறதா? என்று விசாரிக்கும் அப்பனின் கண்ணீர் அவ்வளவு தூய்மையானது தாய்ப்பாலை விட!.
   
இந்த அசிங்கம் உனக்கு தேவையா? அவன் மூஞ்ச நீ DPயா வச்சிருந்தும், செருப்பாலடிச்ச மாதிரி ஒரு பதில்! http://pbs.twimg.com/media/B3LyxukIYAAyU4K.jpg
   
வீரத்தோட வந்த ஜில்லாவாலையே கல்லா கட்ட முடில, இதுல ஐ வருது ஆம்பள வருதுன்னு கிச்சுக்கிச்சு மூட்டிக்கிட்டு # பாப்பா தள்ளி போய் விளையாடு
   
புரிஞ்சு படிக்க டிரை பண்றதாலதான் பசங்கள்ல பாதி பேர் படிக்காமலே நாசமா போயிடறானுக. பொண்ணுகளுக்கு அந்த பிரச்சனையே இல்ல.
   
எத்தனை பேரு இருக்காங்குறது முக்கியம் இல்ல.. யார் இருக்கா அதான் முக்கியம்.. ஐ இல்ல எவன் வந்தாலும் ஆட்ட முடியாது http://pbs.twimg.com/media/B3Me0ONCAAE5-To.jpg
   
நான் வளைந்து கொடுக்கிறேன் என்பதற்காக ஒரேடியாக ஒடிக்க முயற்சிக்காதீர்கள்... நிமிர்ந்தால் சேதாரம் உங்களுக்குத்தான் !
   
எல்லா வாட்ஸப் குரூப்புலயும் பிட்டுபடம் அனுப்பும் ஒரு வெப்பன்சப்ளையரும், வேறெதும் பேசாம அத கமுக்கமா பாக்கும் ஒரு பிக்காலிப்பயலும் இருப்பான்-/
   
அழுதுக் கொண்டிருக்கும் குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு கொட்டாவி விட்டு மீண்டும் அழுகையைத் தொடர்வது அழகிய கவிதை!
   
நாளைக்கு என்ன ட்ரஸ் போடாலாம்னு யோசித்தால் பெண், நாளைக்கு என்ன ட்ரஸ் துவைச்சிருக்கும்னு யோசித்தால் ஆண்.!
   
எழுதப் படிக்க தெரியாத தாய் ஒருத்தி, தன் மகனோ! மகளோ! எழுதிய கடிதத்தின் எழுத்துகளை வருடிப்பார்க்கும் சுகம், அவள் மட்டுமே அறிந்தது.
   
வீட்டில் இருந்தால் பாத்திரம் தீய்ந்துப் போனாலும் கவலைப் படாத மனது, வீட்டை பூட்டியதும் அணைத்த அடுப்பையும் சந்தேகிக்கிறது! 😅
   
இந்திய ரயில்வேயில் அனைத்து கோச்சுகளிலும் குப்பைத் தொட்டி வைக்கப்படும் #குப்பைத் தொட்டிக்குள்ள எதுக்குடா தனியா இன்னொரு குப்பைத் தொட்டி :-/
   
முதல் அடியில் நடுங்க வேண்டும் --> Nov 27 மறு அடியில் அடங்க வேண்டும் --> Dec 11 மீண்டு வந்தால் மீண்டும் அடி --> Jan 1 மறுபடி மரண அடி -->Jan 8
   
நான் ஆண் இனமென்று நீங்க பெருமை கொள்ள பெற்றெடுக்க ஒரு பெண்ணும்,நிருபிக்க ஒரு பெண்ணும் தேவைப்படுகிறாள்#நோ கமெண்ட்ஸ் ப்ளிஸ்
   
ட்வீட் புடிக்கலனா மூடிட்டு போய்டு. அடுத்தவன்/ள் தப்பா நினைப்பாங்கனு வாழ்ந்து போர் அடிச்சு இங்க வந்தேன். யார்னே தெரியாத நீ என்ன நினச்சா என்ன.
   

0 comments:

Post a Comment