15-நவம்பர்-2014 கீச்சுகள்
பென்சில் சீவுன குப்பைய தண்ணில போட்டு கொதிக்க வச்சா ரப்பராகிடும்னு ஒரு எடுப்பட்ட பய சொன்னத நம்பி முழு பென்சில சீவியே தீர்த்தேன் #BalyaSettai
   
பாண்டிச்சேரி அதை சுற்றி உள்ள ஊர்களில் http://B.Com படித்த பட்டதாரிகள் வேலை தேடிகொண்டிருந்தால் இருந்தால் என்னை அணுகவும்!
   
ரோஹித்தை 264 ரன் அடிக்கவிட்ட இலங்கை கிரிக்கெட் அணிக்கு குழந்தைகள் தின வாழ்த்துகள்.!
   
நண்பரின் மனைவி கர்பவதி அவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு A negative இரத்தம் தேவை நண்பர்கள் உதவும் 9087933028#வேலூர் (மா) நாட்ரம்பள்ளி அவசரம்
   
Windows 95 முதல் windows 8 வரை உபயோகித்தவர்கள் RT செய்யவும்..
   
பசங்க தயங்கிபேசுனா 'லவ் யூ' சொல்லிடுவானோனு பொண்ணுங்க பயப்படறதும்,பொண்ணுங்க தயங்கிபேசுனா 'அண்ணா'னு சொல்லிடுவாளோனு பசங்க பயப்படறதும் சகஜம்தானே
   
மதம் மாறினால் தான் கடவுள் அசிர்வதிப்பார் என்றால் அவர் கடவுளே இல்லை.. கட்சி தலைவர்...
   
இன்று குழந்தைகள் தினம்.இதான் சாக்குன்னு புதிய தயாரிப்பில் இறங்காமல் ஏற்கனவே பெற்ற குழந்தையை பேணி காப்போம்
   
அவமானங்கள் மீது மூளைக்கு அலாதி பிரியம். என்றும் மறப்பதில்லை.
   
யார் யாரெல்லாம் இந்த விளையாட்டு விளையாண்டுகீங்க !!! http://pbs.twimg.com/media/B2ZMsKHCUAAMBrR.jpg
   
வண்டலூரில் காணோமா? அந்த வழியா போகும் ஆம்னி பஸ்களை சோதனை போடணும். சீட் காலியாக இருந்தால், புலியா இருந்தாலும் இழுத்து உள்ளே போட்டுடுவானுங்க.
   
நல்லாயிருக்குற குடும்பத்தை எப்படி பிரிக்கலாம்னு விலாவாரியா சொல்லி தரதே 'தமிழ் சீரியலோட' வேலையா போச்சி.
   
பாலியல் கொடுமையிலிருந்து பெண்களையும்,பெண் குழந்தைகளை காப்பதே குழந்தைகள் தினத்திற்கு அர்த்தமும் அவசியமுமாகும்..!!
   
மனிதனுக்கும் தர்மத்திற்கும் நடக்கும் போரில் கொல்லப்படும் முதல் தூதுவன் 'மனசாட்சி'
   
விரும்பியவரை கைப்பிடித்தல் மட்டுமல்ல விரும்பிய வரை போதுமென்று விலகுதல் கூட காதல் தான்
   
2003 வேர்ல்ட்கப் பைனல்ல கில்லி ஸ்பிரிங் பேட்ட வச்சி விளையாண்டான்,அதனால ரீமேட்ச் வப்பானுங்கன்னு ஒரு பக்கி சொல்ல,அதயும் நம்பினது #BalyaSettai
   
"போயிட்டுவரேன்"என சொல்லி கிளம்பியிருப்பீர்-திரும்பி வருவீரென நம்பியிருக்கும் குடும்பத்திற்கு நம்பிக்கைதுரோகம் செய்துவிடாதீர் #ஹெல்மட்அணிவீர்
   
ராமருக்குப் பிறகு இலங்கையை துவம்சம் செய்த ரோஹித் சர்மா- கலைஞர் புகழாரம். என்ன தலிவரே இராமர் இருந்தாரா?
   
பெண்ணின் சுதந்திரம் பற்றி பேசும் எந்த ஆணும்,தன் மனைவியோ,மகளோ இரவில் தாமதமாய் வருவதை விரும்புவதில்லை.
   
திருடன் போலீஸ் - விறுவிறுப்பான முன் பாதி திரைக்கதை , நச் வசனங்கள்,பின்பாதி கலகலப்பு - விகடன் மார்க் = 44 , ரேட்டிங் = 3 /5
   

0 comments:

Post a Comment