9-ஜூன்-2014 கீச்சுகள்
'நீ எனக்கு வேண்டும்' என்பது காமம். 'நானிருக்கிறேன் உனக்காக' என்பது காதல்.
   
உறங்கும் குழந்தையை பார்த்துகொண்டிருப்பதை விடவா தியானம் அமைதியை தந்துவிடபோகிறது
   
யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை என்பது ட்விட்டரின் ஈர்ப்பு. யாரையும் சகித்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை என்பது அதன் சுதந்திரம்.
   
குடிப்பழக்கம் இல்லாதவர்கள் இந்த ட்வீட்டை RT செய்யவும் . #கணக்கெடுப்பு
   
விமல் நடிக்கிறத பாத்தா கூத்துப்பட்டறயில நடிப்பு கத்துக்கிட்டது மாதிரி தெரியல...லேத் பட்டறையில வேலை பாத்தவன் மாதிரி தெரியுது..
   
தமிழ் உலகில் ஆறு நாடுகளில் அலுவல் மொழியாக உள்ளது!! ஆனா ஹிந்தி ஒரே ஒருநாட்டில் மட்டுமே அலுவல் மொழியாக உள்ளது!!
   
எல்லாம் தெரிந்தும் அமைதியாய் இரு, கணினியைப் போல.!
   
முளைத்து 3 இலை என்பது பேச்சு, நடை, சிந்தனை
   
கற்பழிக்கபட இருந்தவளை காப்பாற்றி காதலித்து கொஞ்சம் தாமதமாய் கற்பழிப்பான் நாயகன் #தமிழ்சினிமா
   
மகனால் பாதிக்கப்பட்டவரும் மகளால் பாதிக்கப்பட்டவரும் சந்தித்த போது பேச முடியவில்லையே#ரஜினி - கலைஞர் சந்திப்பு
   
நம்மாளுங்க சிக்னல்ல பச்சை எரியுதா இல்லை சிகப்பு எரியுதான்னு பார்க்கிறதுக்கு முன்னாடி,சிக்னல் பக்கத்துல போலீஸ் இருக்குதான்னுதான் பாக்குறாங்க
   
இரட்டைக்கிளவி அவள் கண்கள், அடுக்குத்தொடர் உதடுகள்
   
எத்தனை பிணக்குகள் தாண்டியிருந்தாலும் நேருக்குநேர் இணைகையில் "சரிடா மச்சான்.அத விடு" ஆண்களின் உலகம் பெருந்தன்மைகள் நிறைந்த நிஜமான ஆச்சரியம்..
   
மரங்கள் குறைஞ்சுட்டே போகுது. வெய்யில் அதிகமாகிட்டே போகுது #இரண்டும் வெவ்வேறு செய்திகள்னே வாழ்ந்துட்டு இருக்கு ஒரு கூட்டம்
   
சவுந்தர்யா,விஜயகாந்தை வைத்து ஒரு மோசன் கேப்சர் படம் எடுத்தால்,முதலில் ரோபோ சங்கரிடம்தான் கால்ஷீட் வாங்குவார் :-)
   
நல்ல வழில சம்பாதிக்குறவன்லாம் அமைதியா இருக்கான்.திருடி சம்பாதிக்குறவன்,அவன் பொண்டாட்டி புள்ளையெல்லாம் எவ்ளோ சவுண்டு விட்டுட்டு திரியுதுங்க.
   
எல்லாக் கதைகளுக்கும் விருமாண்டி வெர்ஷன் என்று ஒன்று இருக்கிறது !
   
குழந்தைகளை தோளில் போட்டு தூங்க வைத்த அப்பாக்களுக்கு தான் தெரியும், அமிர்த்தம் தோள்பட்டையில் தேங்கியிருக்குமென்று # சலவாய் :-)
   
ஸ்டார் விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்! எலிகண்ட் லேடி அவார்ட் நடிகை ராதாவுக்கு! எனக்கு மட்டும்தான் எலிபண்ட் லேடி அவார்ட்னு கேக்குதா? ஹிஹிஹி
   
ஒரு டொக் டொக் .. டேபிள் மேட் வாங்கிட்டேன்னா,இந்த அட்வர்டைஸ்மென்ட நிறுத்திருவோம்னு சொல்லுங்கடா! சத்தியமா வாங்கிடறேன்
   

0 comments:

Post a Comment