27-ஜூன்-2014 கீச்சுகள்
"ஆறுதல்" என்பது நமக்கு உண்மையாக இருப்பவர்களால் சொல்லப்படும் சில பொய்கள்!
   
உற்றுப் பார்த்தவுடன் இழுத்து மூடுவீர்கள் என்றால், வீட்டிலிருந்து கிளம்பும்போதே அதைச் செய்யலாமே.
   
சிந்திக்க வேண்டிய விஷயம்தான் ;-((( http://pbs.twimg.com/media/BrCnnW4CUAEPmw8.jpg
   
மோடிக்கு உலக நாடுகள் அழைப்பு - பிரதமர் வேலையை எப்படா செய்ய வுடுவிங்க. பேக்கரிய தொறந்ததுல இருந்து பன்னை கொடு வெண்ணைய குடுன்னு!!!
   
பணம், புகழ், அழகு எல்லாம் இருந்தும் தற்கொலை செய்து கொள்பவர்கள் இதைவிட ஏதோ ஒன்று வாழ்வதற்கு அவசியம் என்பதை உணர்த்திவிட்டு செல்கின்றனர் :(((
   
பசி வந்தால் பத்தும் பறந்துவிடும் 1.முயற்சி 2 தவம் 3 பணிவு 4 கர்மம் 5 தானம் 6 அறிவுடைமை 7 மானம் 8 குலம் 9 கல்வி 10.வன்மை
   
ஆகச்சிறந்த புரிதல் என்பது விலகிச் செல்தல்.
   
உலகில் தானாக முன்னேரியவர் யாரும் இல்லை நீ உழைக்க தயாராக இருந்தால் ...! சிலர் உனக்கு உதவ தயாராக இருப்பார்கள்...!
   
கருப்பசாமியை காவலனாக வெளியில் நிற்க வைத்த ஆர்யக்கடவுள்களின் சூழ்ச்சியை இன்னமும் அறியாமல் நின்று கொண்டிருக்கிறான் கருப்பசாமி
   
இந்த பாடலில் சங்கவியை உருட்டியவர் உங்கள் விஜய்னு ஏன் ஒரு படத்துல கூட போடல சார்???? சொல்லுங்க டாடி சொல்லுங்க
   
நிறைய ஊருக்கு போயிருக்கேன், ஆனா கோவை அளவுக்கு மனசுக்கு அமைதியான இடத்தை வேற எங்கயுமே பார்த்ததில்ல.... #டிவைன்
   
அனுபவம் நிறைந்தது வாழ்க்கை என்றார்கள் ஆனால் என் அனுபவத்தில் கூறுகிறேன் அவமானங்கள் நிறைந்ததே வாழ்க்கை இன்னும் கூட நிறைய சந்திக்க வேண்டும் போல
   
இனி உன்னை காணவியலாது எனும் பொழுதாவது என்னுடன் இருப்பாயா.
   
உயரத்தில் இருந்து பார்த்தேன் அழகிய நதியாய் தெரிந்தது கொஞ்சம் இறங்கி வந்து பார்த்தேன் பெரிய சாக்கடையாய் இருக்கிறது! சில-மனிதர்கள்!
   
சிலரெல்லாம் பாக்கும் போது ப்ளாக் பட்டனயெல்லாம் தாண்டி வேற எதாவது கொடூரமான ஆப்சன் இருந்திருந்தா நல்லாருக்கும்னு தோணுது
   
"சொற்கள் என்னுடையவை; அர்த்தங்கள் உங்களுடையவை".. -ஓஷோ..
   
RT @DMariappan ஜல்லிகட்டு, கல்யாணம் 2லயும் வளர்க்குறவன் எஸ்கேப் ஆயிருவான், அடக்குறவனுக்கு தான் உசிர் போயிரும்
   
அழுகின்ற ஆண்கள் எல்லாம் கோழைகள் அல்ல.. ஆழமான அன்பின் மறு உருவங்கள்....!!!
   
கேஸ் சிலிண்டர் விலை உயருது கெர்சின் விலை உயருது ட்ரைன் டிக்கட் விலை உயருது பால் விலை உயருது ஆனா இந்தியாவோட நிலை மட்டும் உயராம இருக்குது:(
   
பேசத் தயங்கும் ஆணின் வெட்கத்திற்கு.... ஈகோ எனப் பெயர்
   

0 comments:

Post a Comment