26-ஜூன்-2014 கீச்சுகள்




பெண்களுக்கு, பனாரஸ் பட்டு காஞ்சி பட்டு சாமுத்ரிகா பட்டு... ஆண்களுக்கு, துன்பப்பட்டு துயரப்பட்டு கஷ்டப்பட்டு...
   
அடுக்கிவைத்த ரெக்கார்டு நோட்டை ஆசிரியர் திருத்தும்போது நம்ம நோட் வர்றதுக்குள்ள பீரியட் பெல் அடிச்சிடனும்னு வேண்டிய நாட்கள் இனிமையானவை
   
பெரிய ஹோட்டல்களை நடுத்தர மக்கள் லேன்டுமாரக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்
   
அம்மாவை ஓரு போதும் கடவுளோடு ஒப்பிடாதீர்கள் தன் பிள்ளைகள் படும் துயரை ஒரு போதும் தாயானவள் பொறுத்துக்கொள்ள மாட்டாள் ஆனால் கடவுள் அப்படியல்ல
   
ஒரு பிரபலம் தன்னுடைய நண்பனாக இருக்கவே அனைவரும் விரும்புகின்றனர்,தன்னுடைய நண்பன் பிரபலமாவதை நிறைய பேர் மனதார விரும்புவதுமில்லை,ரசிப்பதுமில்லை
   
இந்த வாரம் முதல் தினகரன் வெள்ளி மலரில் 'உலக சினிமா' என்னும் தலைப்பில் வாரம் ஒரு படம் குறித்த என் பகிர்வுகள்..:) http://pbs.twimg.com/media/Bq88rWXCcAAWRWd.jpg
   
வலியில் தவிக்கும் பெண்ணாக நான் இருந்தும் வலி தீர்க்கும் ஆணாய் நீ இருந்தும் அலைந்து கொண்டே இருக்கிறாய் காதலெனும் மருந்தை விழியில் சுமந்து
   
யாருமே ஒரு பொருள் பழுதடைந்தால் ரிப்பேர் ஆகிவிட்டது என்பார்கள். அதன் உண்மையான சொல் 'இம்பேர்'. சரிப்படுத்துவது தான் 'ரிப்பேர்'
   
நான் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு இரண்டு காரணங்கள் 1.நான் பிறந்து விட்டேன், 2.நான் இன்னும் சாகவில்லை
   
சாலையில் அடிபட்டவன் இருக்கிறானா,இறந்தானா என்று தெரிந்து கொள்வதற்குள் எனக்கான பேருந்து வந்து விட்டது #நகரவாழ்க்கை
   
நண்பர் வரும்போது கணவன் மனைவியை நிமிர்ந்து பார்த்தால் காபி கொண்டுவா என்றுபொருள்,அதற்க்கு மனைவி முறைத்தால் அவனுடன் வெளியபோய் குடி என்றுபொருள்
   
பெற்றோரைத் தொலைத்த சிறுவனுக்கு உதவுங்கள்.... பகிறுங்கள்...!!! http://pbs.twimg.com/media/Bq-AoMgCYAAWhbG.jpg
   
ஏர்டெல் யூசர்ஸ்லாம் இத RT பண்ணுங்கப்பா, எத்தன பேர்னு பாக்கலாம். :))
   
ராம் தியேட்டர் ஓனருடன் SUPERSTAR RAJNIKANTH ரசிகர் மன்ற உரையாடல் நான் பொறுப்பு இல்ல சார் னு கதறல் விஜய் மாமா த்தூ : http://youtu.be/rsbyXSd-rp8
   
"மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிர் கேடு புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு" இந்த வரிசையில் "இவைகளை தடை செய்யாமல் விற்பது எங்கள் நாடு"
   
ரஜினிக்கான மகத்தான அவமானம் சிவகார்த்திகேயனை அடுத்த சூப்பர் ஸ்டார் எனச் சொல்லும் சில்லறைகள் தமிழகத்தில் கணிசமாய் உருவானதே.
   
கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி தங்கம்.....கொடுத்தவனே பறித்துக் கொண்டானே..#குமுதம் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் வாபஸ் http://pbs.twimg.com/media/Bq9Gg_ACUAAwYob.jpg
   
திருவிழாவில் குழந்தைகள் காணாமல் போனது அந்த காலம் திருவிழாவே காணாமல் குழந்தைகள் இருப்பது இந்த காலம்
   
சிங்கத்திற்காக, முயல்களுக்கு துரோகம் இழைக்கும் நரிகள் வசிக்கும் வனத்திற்கு, நிறுவனம் என்று பெயர்.
   
ராகிங் செய்தது பெண் என்பதால் என்னவோ நடிகர்களுங்கு பொங்கும் சில பெண்ணியவாதிகள் பொங்கவில்லை இதற்கு. RIP http://pbs.twimg.com/media/Bq-gMiVCUAAGNqr.jpg
   

0 comments:

Post a Comment