பாலா @Piliral | ||
ஆயிரம் ஜெனிபர்கள் ஒன்றாக இசைத்தாலும் தானைத் தலைவி ஷகீராவின் "சாமிநாதனே ஏஏஏ ஙொக்கா மக்கா டேய்யேய்" போலாகாது என்பதை பதிவு செய்கிறேன்! | ||
சௌம்யா @arattaigirl | ||
காவல் தெய்வங்களெல்லாம் கடவுள்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் போல | ||
இடியட் @jeba_idiot | ||
செருப்ப திருடிட்டு போறவன கூட மன்னிக்கலாம் ஆனா செருப்ப மாத்தி போட்டுட்டு போனவன மன்னிக்கவே கூடாது . .:-/ | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
அவ்வளவு எளிதாய் விலகி சென்றுவிட்டாய், நீ செலுத்திய அன்பு விஷமாய் மாறி சிறுது சிறுதாய் எனைக் கொன்றுக்கொண்டிருக்கிறது.... | ||
படித்துறை பாண்டி® @iampadithurai | ||
காதலிக்கதேவை ஆண் பெண் என்ற தகுதியில்லை விட்டுக் கொடுப்பதும் கடைசிவரை ஒருவரைஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பதும்தான் http://pbs.twimg.com/media/Bp_sy2GCcAE-OgQ.jpg | ||
ராதாகிருஷ்ணன் @radhavenkat2 | ||
அஜீத் ரசிகர்களுக்கு ஒரு வசனம். அவரவர் அவரவர் லாபத்துக்கு கல்யாண மண்டபம் கட்டினார்கள் தல மட்டுமே பிறர் லாபத்துக்கு வீடுகள் கட்டினார் | ||
ℳr.வண்டு முருகன் © @Mr_vandu | ||
புரியாத படத்தை பார்க்கும் போது, எல்லாரும் கை தட்டும் போது நாமும் கை தட்டுவோமே அதற்கு பெயர் தான் உலக அறிவு. | ||
கவி @kavipulla | ||
அலுவலகத்தில் நம் உச்ச பட்ச எரிச்சலை முழுதும் அறிந்தது கீபோர்ட் 'எண்டர்' கீ மட்டும் தான்..... | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
தெரியாத ஒருத்தனுக்கு ட்விட்டர், ஃபேஸ்புக் சொல்லிக்கொடுக்கும்போது ஒவ்வொருத்தனும் அண்ணா யுனிவர்ஸிட்டி ப்ரொஃபஸர் ரேஞ்சுக்கு ஆய்டுராங்க:-)) | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
ஓர் அற்ப பொய்யின் மூலம் ஒருவரை புன்னகைக்க வைக்க முடியுமெனில், உண்மைகளை பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை.... | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
இயன்ற எல்லா வழிகளிலும் என் அன்பை வெளிப்படுத்திவிட்டேன், எல்லாவற்றையும் நிராகரித்துவிட்டு வெகுஇயல்பாய் புன்னகைக்கிறாய் ஓர் கடவுளை போல்... | ||
தகர டப்பா @sathish2525 | ||
காதலிக்க நேரமில்லை என்பதை விட காதலிக்க யாருமில்லை என்பதே உண்மை | ||
♥ vaany ♥ @Vaany06 | ||
உருவாக்கிவிட்டு பின்பு அழிக்க முடியாமல் போனதில் பிளாஸ்டிக் -க்கு முன்னோடி சாதி.... | ||
இளநி வியாபாரி @GoundarReturns | ||
வீட்ல குடிக்க கூழ் இருக்காடா ? அப்புறம் என்ன ஃபுட்பால் கோல் ? ;-)))))))) http://pbs.twimg.com/media/Bp8mCsKCQAEF8fT.jpg | ||
நோபிட்டா, @iRaVuSu | ||
நான் வாழ்க்கையோடு சிரிச்சா போச்சி ரவுண்ட் விளையாட ஆசைப்படுகிறேன்,ஆனால் வாழ்க்கை என்னோடு மாத்தி யோசி ரவுண்ட் விளையாட தான் ஆசைப்படுகிறது ! | ||
❤️Lavanya❤️ @kate_laavan | ||
தன் தாயை நேசிக்கும் எந்தவொரு ஆணும் பிற பெண்களை எப்போதும் மதிப்பாகவே நடத்த முயல்வர்😊 | ||
மாண்டியர் @iMaandiyar | ||
அபியும் நானும் படம் பாத்துட்டு,அம்மா இந்த மாதிரி நானும் ஒரு பெக்கர அழச்சிட்டு வரவானு என் பொண்ணு கேட்டதுக்கு, வீட்ல இருக்குறதே போதும்ங்க்றா! | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
கொரியன் படம் பாக்குற, ஃபுட்பால்ல பிரேஸிலுக்கு சப்போர்ட் பண்ற, உக்ரைன் போர்பத்தி கவலைபடுற, அமெரிக்க ஆஸ்காருக்கு கைதட்ற, யார்ரா நீ? - தமிழன்டா | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
இந்த டேபிள்மேட் விளம்பரத்த கூட சகிச்சிக்குவேன், ஆனா இந்த அண்ணன் தம்பிங்க காப்பி விளம்பரத்துல வந்து பண்ற டார்ச்சர் தான் மரணக்கடுப்பா இருக்கு | ||
சௌம்யா @arattaigirl | ||
உன் வலியை மௌனத்தால் மறைக்கிறாய். உன் மௌனத்தை வலியாய் உணர்கிறேன். | ||
0 comments:
Post a Comment