19-ஜூன்-2014 கீச்சுகள்




ஒவ்வோர் இரவிலும் கதை கேட்டு நச்சரிக்கிறாள், ஏதோ ஒரு இளவரசியின் காதல் கதையென பொய் சொல்லி உன்னைப் பற்றியே தினமும் சொல்கிறேன்
   
குமுதம் - விஜய் இரு தரப்புக்கும் ஏதோ லடாய் இருந்துச்சாம் .அதுக்கு சமாதானக்கொடிதான் சூப்பர் ஸ்டார் வாக்கெடுப்பில் விஜய்க்கு சாதகமாம்.
   
நெருங்கி பழகி பின் பிரிதலின் உச்சமாய் யாரோவாகிய அந்த பார்வையை தவிர்த்திருக்கலாம் நீ.
   
அழகான ஆண், முட்டாளாய் இருந்தால், பெண் ஏமாற்றம் அடைகிறாள். அழகான பெண், புத்திசாலியாகவும் இருந்தால், ஆண் ஏமாற்றம் அடைகிறான்.
   
பிய்த்தெறியப்பட்ட தன் சிறகுகளை ஒவ்வொரு பெண்ணும் சேகரித்து கோர்த்து வைக்கிறாள்... தன் மகளுக்காக!
   
பேருந்துப் பயணத்தில் பலதரப்பட்ட முகங்கள் ,காட்சிகள் எல்லாவற்றையும் ரசித்துவிடலாம்தான் ,இந்த சில்லறை மட்டும் கிடைத்துவிட்டால் ..
   
தமிழகத்திடம் மின்சாரம் கேட்க சீமாந்திரா முடிவு செய்துள்ளது. http://pbs.twimg.com/media/BqbHls_CIAAWuIb.jpg
   
குங்குமம் தோழியில் வெளிவந்த "என் ஜன்னல்"....! #மை​_டக்கு http://pbs.twimg.com/media/BqaErtkCcAAhM54.jpg
   
விளம்பரத்தில வராத பொருள நீங்க சாப்பிடுறீங்களா ? அப்ப நீங்க சாப்பிடுவது பெரும்பாலும் ஆரோக்கியமானது
   
அஜித் சூப்பர் ஸ்டார் இமேஜிக்கும் மேலே போய் விட்டார், இனி இந்த தலைப்பே தேவை இல்லை. இனி அடுத்த தல யார் அப்படின்னு தான் பார்க்க வேண்டும்.
   
டிவி,ப்ரிட்ஜ்,வாஷிங்மெஷின் மாதிரி இன்ஜினியரிங் படிச்ச வாரிசு ஒன்னு இப்ப எல்லா வீட்டுலயும் இருக்கு..
   
துப்பாக்கிடா போடா போடா துப்பாக்கிடா ://// http://pbs.twimg.com/media/BqZgmrwCAAAyyG_.jpg
   
பணக்காரன் 1000 ரூபா ரீசார்ஜ் பண்ணி ஃபுல்டாக் டைம் பெறலாம்.ஏழை 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணி 3 ருபா வரி கட்டணும்#கம்யூனிஸம்/குழப்யூனிஸம்
   
கைகோர்த்து செல்லும் காதலர்களை எப்போதும் பார்க்க முடிகிறது சாலைகளில். எப்போதாவதுகூட பார்க்க இயலவில்லை அப்படியொரு கணவன் மனைவியை.! #காதலின்கதை
   
பிள்ளை வரம் கேட்டு கோயில் கோயிலாக ஏறிஇறங்கும் யாருக்கும் தெரிவதே இல்லை. அம்மா வரம் கேட்டு அனாதைஇல்லத்தில் காத்திருக்கும் குழந்தைகளின் ஏக்கம்
   
சண்டை போட்டு பின் பேசாமலிருப்பதைத் தவிர்க்க சிறந்த வழி...சண்டையின் போதே பேசாமலிருந்துவிடல்
   
கடவுளின் பிரசவ காலம் எத்தனை யுகங்களோ? இன்னும் கருவறைக்குள்ளேயே கடவுள்!
   
எதையும் கற்றுக்கொள்ள பொறுமை தேவை...எனில் முதலில் கற்றுத் தர வேண்டியது பொறுமையே
   
அடுத்த சூப்பர் ஸ்டார் யாருனு கணக்கெடுப்பு நடக்கிறது...ஆனா அடுத்த உலக நாயகனா யாரும் வர முடியாது...தலைவரு மாஸ் டா... http://pbs.twimg.com/media/BqYnXp2CcAA4FnT.jpg
   
யாராச்சும் சோடா வாங்கிட்டு வாங்களேன்ப்பா, யாராச்சும் ஆம்புலன்ஸ கூப்புடுங்களேன்ப்பா ஆசாமிகளால் நிறைந்தது இணையம்
   

0 comments:

Post a Comment