8-ஜூன்-2014 கீச்சுகள்
தாவரங்கள் என்று பெயர் வைத்தோம். நன்மைகளைத் தந்துகொண்டே இருக்கின்றன!
   
லச்சுமியும் சரஸ்வதியும் ஸ்கூல்லதா ஒண்ணு சேருவாங்க போல.! #எம்புட்டு ஃபீஸு
   
தியேட்டர்ல பாப்கார்ன் வாங்கிட்டு வரும்போது அதுல ரெண்ட எடுத்து வாயில போடாம வர்ரவனுக்கு பேர்தான்டா புத்தன் :))
   
முதன்முதலா ஒரு நடிகை கல்யாணம் பண்ணி ரிட்டயர்ட் ஆகறதுக்கு தமிழ் சினிமா ரசிகன் சந்தோஷப்படுறான்னா அது அமலா பாலுக்கு தான்.!
   
புத்தர், ஏசு, மாமனார் பொறந்தது பூமியில் எதற்காக.... தோழா ஏழை நமக்காக...! :))
   
அடிக்கடி நாம் அதை பார்த்துக்கொண்டே இருப்பதால் தான் கடிகாரத்துக்கு ஆங்கிலத்தில் "வாட்ச்" என்ற பெயர் போலும்:)
   
உன்னை அடுத்தவங்ககிட்ட ரொம்ப நல்லவனா காமிச்சுக்காதே.எதிர்காலத்துல உன்னால எந்த பிக்கலித்தனமும் செய்யமுடியாம போய்டும்!
   
கூட்டுகுடும்பம் கூட தேவையில்லை குறைந்தபட்சம் யார் என்ன உறவென்றாவது சொல்லிகொடுங்கள் எல்லா உறவையும் ஆண்டி அங்கிளுக்குள் அடக்கிவிட வேண்டாம்
   
ஆணின் முகச்சுளிப்பெல்லாம் பெண்ணின் ஓர் உதட்டுச்சுழிப்பில் நீங்கிப் போகிறது
   
குழந்தைகள் பெரும்பாலும் மன்னிப்பு கேட்பதில்லை....பழம் விடுகிறார்கள்:)
   
விழித்துக்கொண்டிருக்கும் நேரமெல்லாம் விட்டுவிட்டு, தூங்கும் குழந்தையை கொஞ்சி, எழுப்பி, அழ விட்டு செல்பவர்களுக்கு "அப்பா" எனப்பெயர்!
   
லைட் அடிக்கிற மூதேவி மூடிகிட்டு போறியா இல்ல கீழ வரவா..!!! http://pbs.twimg.com/media/BphrELgIIAAEoPy.jpg
   
தல நிஜ வாழ்க்கைல ராமனா இருக்கலாம், ஆனா அவர் ரசிகைகள் அவர எப்போவும் கிருஷ்ணனா தான் பாக்குறாங்க ♥ #Thala http://pbs.twimg.com/media/BpYj8qzIMAARA6u.jpg
   
வாலி அஜீத்தும் வில்லந்தான். அழகிய தமிழ் மகன் விஜய்யும் வில்லந்தான். பசுவும் மாடுதான். எருமையும் மாடுதான்!
   
அத்தனை கோடி இன்பங்கள் வைத்த இறைவா ஏன் அத்தனையும் எனக்கு எட்டாமலே வைத்தாய்
   
வாழ்க்கைங்கிறது விமல் படம் மாதிரி ஏன் தயாரிக்கிறோம் தயாரிக்கிறவனுக்கும் தெரியாது ஏன் நடிக்கிறோம்னு அவனுக்கும் தெரியாது -))
   
ஊரின் ஓரத்தில் ஒற்றை மரத்தடியில் இருக்கும் தெய்வம் தரும் நிம்மதியை மக்கள் கூட்டத்தில் கோபுரத்திற்கு கீழ் இருக்கும் தெய்வங்கள் தருவதில்லை
   
எப்படி இருக்கு! "இசை" தந்தைடா ராஜாடா! நல்லா வரைஞ்சு இருக்கனா! ;))) http://pbs.twimg.com/media/BphEmJJCAAARm6V.jpg
   
வெளிநாட்டில் தமிழ் பேசுவதை கௌரவமாக நினைக்கும் அதே சமூகம்தான் தமிழ்நாட்டில் தமிழ் பேசுவதை கேவலமாக நினைக்கிறது :(
   
கணவன் மனைவியை மலடி என்று.... திட்டுகிறான். வாசலில் நின்றவாறு பிச்சைக்காரன் - அம்மா என்கிறான்
   

0 comments:

Post a Comment