13-ஜூன்-2014 கீச்சுகள்




"தாயிற் சிறந்த கோயிலுமில்லை,! மகனுக்கு சொல்லிக் கொடுக்கும் மனைவி, கணவனுக்கு மட்டும் சொல்வதில்லை
   
என்னுடைய ரசிகர்களே எனது பெருமை மேலும் அவர்களையே எனது முதல் கடவுளாக நினைக்கிறேன் - விஜய்
   
வில்லங்கப் பத்திரம் இணையத்திலேயே உடனடியாக இலவசமாகப் பெறலாம். http://ecview.tnreginet.net/ முன்னர் பணம் கட்டினால் தபாலில் வரும். அருமை.
   
விஜய் மைன்ட்வாய்ஸ்-: நீ இவள கல்யாணம் பண்ணுனதுகூட பரவால்ல இவள கரெக்ட் பண்ண என்ன வச்சி தலைவான்னு படம் எடுத்தபாரு அதான் http://pbs.twimg.com/media/Bp8UN_lIIAA202J.jpg
   
வரவுக்கு தகுந்த் செலவு பண்றவன் யதார்த்தவாதி,செலவுக்கு தகுந்த மாதிரி வரவை அதிகரித்து கொள்பவன் புத்திசாலி
   
கோபம் வரும் போது ஊமையாகிற மாதிரி ஒரு ஆப்ஷன் இருந்தா நல்லாயிருக்கும்:)
   
சட்டத்தின் முன் ஏழைகள் அனைவரும் சமம்.
   
"எனக்கு ஏன் ஃபோனே பண்ணவில்லை?" என்று இதுவரை என்னிடம் கோபித்துக்கொண்ட அனைவரிடமும் என் நம்பர் இருந்திருக்கிறது
   
பணம் செலவாகுற விசயமா இருந்தாமட்டும் நம்மள பாட்ஷா மாதிரி முன்னால நடக்கவிட்டுடறாங்க.. மத்தநேரமெல்லாம் குரூப்டான்சர்போலதான்.
   
தினமும் 6 மணிநேரம் பவர்கட்டாகி அதனால் கரண்டுபில் கம்மியா வர்றதால.. இப்ப நாம அனுபவிக்கிறது அம்மா மலிவுவிலை கரண்டுத் தானே...?
   
இன்று நீ என்னுடன் பேசவில்லை என்பதை சந்திக்கும் அனைவரும் 'ஏன் டல்லாருக்கே' என்ற கேள்வியால் உணர்த்தி விட்டுச் செல்கின்றனர்
   
உன்னையும் உன் கருத்துக்களையும் பிடிக்காதவரைப்பற்றி நீ கவலைப்படாதே. நீ அவர்களுக்கான கேளிக்கை பொருள் அல்லவே ! நீ நீயாகவே இரு. மற்றவரை மதி.
   
உறவினர்கள் வீட்டுக்கு வரும்போது அன்புக்கு பஞ்சமில்லை, தலையணைக்கு தான் பஞ்சம்."!
   
தான் கெட்டவன் என்பதை ஒத்துக் கொள்பவன் நல்லவனாகிவிடுகிறான் என்பது உச்சகட்ட முரண்... :)
   
இரண்டு மாத விடுமுறையில் ஒரு முறை கூட சொல்லவில்லை குழந்தைகள் "போர் அடிக்கிறதென்று" நிஜமாய் நமக்குத்தான் வாழ்க்கையை அனுபவிக்க தெரியவில்லை
   
டாக்டரிடம் நமக்குமுன் போறவங்க எல்லாரும் குடும்ப பிரச்சனைகளையும் சொல்லி அதுக்கும் ட்ரீட்மெண்ட் எடுப்பாங்க போல #எம்புட்டு நேரம்
   
பிறவியிலேயே கண் தெரியாதவர்களுக்கும் கனவு வரும்! ஆனால், கனவில் காட்சிகள் தெரியாது! வெறும் சத்தம், தொடு உணர்ச்சி ஆகியவை மட்டுமே இருக்கும்!!
   
பெட்ரோல் ட்ரை ஆகப்போகிற அந்த சில நிமிடங்கள் நமக்குள் இருக்கும் அஜித் வெளிப்படுகிறான்!!!
   
தங்கையின் நலம் விசாரிப்புகள் சில நேரம் பயம் காட்டும், பல நேரங்களில் பாசம் காட்டும் ;-)) why I love my sister http://pbs.twimg.com/media/Bp3UhVlCEAANP6g.jpg
   
கூரையை வெறித்துக்கொண்டிருக்கும் அப்பாவின் கைபிடித்து "என்ன பிரச்சினைனு" கேள், இன்னும் 40வருசம் உனக்காக உலகத்துடன் போராட கிளம்பிவிடுவார்..!!
   

0 comments:

Post a Comment