7-ஜூன்-2014 கீச்சுகள்




"இவ்வளவு குறைவா மார்க் வாங்கியிருக்கே ... இனி என்னை அப்பானு கூப்புடாதடா" "அப்பா அது கிளாஸ் டெஸ்ட் தான் ... டிஎன்ஏ டெஸ்ட் இல்ல"
   
இப்ப புரியுதா.. ஒரு படத்துக்கு கதை, திரைக்கதை, இயக்கத்த விட விஜய் முக்கியம்ன்னு.. #இளையதளபதிடா #துப்பாக்கிடா
   
தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் - ராமதாஸ் # அப்புறம் 8ல வகுத்து 9 கூட்டினா, நம்ம வீட்டு டோர் நம்பர் வரும், சூப்பர் விளையாட்டுணே
   
விதைக்க வேண்டாம்.. வளர்வதை தடை செய்யாமலிருங்கள்! http://pbs.twimg.com/media/BpbvV2jCQAAkIwc.jpg
   
தமிழ்நாடு பொறியியல் அட்மிஷனுக்கு உதவும் ஓர் அற்புதமான தளம் - நண்பர் முகுந்த் செய்துள்ளார். http://tnea.panuval.com/
   
ஒரு துப்பறியும் கதையை இரண்டு தடவை படிப்பது மகாபாவம்.அதற்குப் பதில் நகம் வெட்டலாம்.முதுகு சொரியலாம்' - சுஜாதா
   
இருக்குமிடம் தெரியாமல் அமைதியாக இருப்பதில் கடவுளிடம் எல்லோரும் தோற்றுவிடுகிறோம்!
   
எந்த ஒரு அவசரத்திலும் ஒரு குழந்தையின் புன்னகையையோ அன்பையோ புறக்கணிக்காமல் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்
   
ஆண்களுக்கு எதையுமே இரெண்டாவது முறை சொன்னால் பிடிப்பதில்லை; முதல் முறை அவர்கள் கவனிப்பதுவுமில்லை
   
டேய் பெரியவங்க பேசும் போது குறுக்க பேசாதனு சொன்னா நம்ம ரொம்ப சரியா பேசுறோம்னு அர்த்தம்.!!
   
நல்ல மகனாகவும் மகளாகவும் இல்லாதவர்கள் நல்ல பெற்றோராய் ஆவதில்லை...
   
ராஜனுக்கு வாழ்க போடறேனு யாரும் கிளம்பாதீங்க ப்ளீஸ். அவர அவர் போக்குல விட்ருவோம். அவர மறந்துருங்க. அவருக்கும் எதிர்காலம்னு ஒண்ணுஇருக்கு :(
   
துப்பாக்கி ஃபேன்ஸ் விஷ் பண்ணியும் ஹாலிடே மூவி ஹிட்டாகாம போனதுல ஆச்சர்யம் ஒன்னும் இல்லை! ஹிட்டானாதான் ஆச்சர்யம் -/
   
ட்விட்டரில் ஏன் மச்சி அதிகம் பொண்ணுங்க இல்லன்னு கேட்ட நண்பனுக்கு எப்படி சொல்வேன், இங்கல்லாம் கொஞ்சமாச்சும் மூளைய யூஸ் பண்ணணும்ன்னு.
   
ட்ரெய்ன்ல ஒருத்தன் ஆன்ட்டிய மறச்சு நின்னான், மறைக்குது தள்ளி நில்லுய்யான்னா, அது என் வொய்ப் தோழரேன்றான். #அவ்வ் ஓனர்னா ஓரமா போங்கய்யா
   
காதலை புரியவைத்து தான் காதலிக்க வேண்டுமென்றால் அதை விட பரிதாபம் வேறு என்ன இருக்க முடியும்...!?
   
புகையிலை கேன்சரை உருவாக்கும் ஆனால் மது டேன்சரை உருவாக்கும்.. Factu factu!!!! http://pbs.twimg.com/media/BpbIPNiCAAAoTXX.jpg
   
அப்பாவின் காசில் உடம்பை வளர்த்த வரை தெரியவில்லை, மாசக்கடைசி என்பது எவ்வளவு கொடுமையானது என்று :(
   
அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் போதும் சர்வலங்கார பூஷிதையாக ஜொலிக்கின்றனர் பெண்கள். ஆண்கள் பேயடித்த பங்கரை போல் வீடு திரும்புகின்றனர்!
   
கண்மூடித்தனமாக என்கிற பதத்திற்கு சில நேரம் 'following religiously' என்கிறார்கள். ச்ச.. எவ்வளவு பொருத்தம்..!
   

0 comments:

Post a Comment