25-ஜூன்-2016 கீச்சுகள்
ஓரே ராக்கெட்ல இருபது சாட்டிலைட்டாம், ஷேர் ஆட்டோ கண்டுபிடிச்ச ஊருடா
   
ஒரு கொலை செய்தியை அவ்வளவு சாதரணமாய் கடந்து செல்லமுடியும் அளவிற்கு மனதை இறுக்கமாக்கி வைத்திருக்கிறது இந்த நகரத்தின் வாழ்க்கை முறை....
   
பெரும்பாலும் ஏழைகள் நேர்மையா இருப்பாங்க! ஆனா அவங்க நேர்மையா இருப்பதாலத் தான் அவங்க ஏழையாவே இருக்காங்க.
   
சொந்த நாட்டுலையே பிரிட்டன் மக்களுக்கு வேலை கிடைக்காம இருக்க காரணம் யாரு? பூரா நம்ம சென்னை அமிர்தா ஸ்டூடன்ட்ஸ் தான்
   
அப்பா அம்மாவின் நிதி கஷ்டங்களைப் புரிந்து கொண்டு எதற்கும் ஆசைப்படாமல் வளரும் குழந்தைகள் கடவுளின் வரங்கள்...😉 http://pbs.twimg.com/media/Clst5LPUkAAY6Z7.jpg
   
எங்களோட நண்பணா இருக்க எந்த தகுதியும் வேணாம். ஆனா எதிரியா இருக்க தகுதி வேணும்👍👍 அந்த தகுதி உங்ககிட்ட அணில்ஸ்👎 http://pbs.twimg.com/media/ClsM5RhUsAAH1w2.jpg
   
இங்கிலாந்து பிரியறதுல இருந்து, ஒபாமா பேன்ட்ல நூல் பிரியுறது வரை, எங்க எது நடந்தாலும் இந்திய பொருளாதாரத்துக்கு ஆபத்துங்கிறானுவ
   
ஹலோ முதல்வரா😂 லோக்அயுக்தா கொண்டுவருவோம்னு சொன்னீங்க எப்போ மேடம் கொண்டு வருவிங்க உங்க கேஸ் முடிஞ்சவுடனயா#WakeupJaya http://pbs.twimg.com/media/ClpTsokUsAA-gH9.jpg
   
வீடு கரைந்துவிடும் என அறிந்தே கடல்மணலில் வீடு கட்டுகிறார்கள் குழந்தைகள்! ஆறு அழிந்துவிடும் என அறிந்தும் ஆற்றுமணலில் வீடு கட்டுகிறோம் நாம்!!
   
பணக்காரன் ஈயத்துல போட்டாக்கூட அது ப்ளாட்டினம் ஏழ தங்கம் போட்டாலும் அது கவரிங்.
   
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தம்மீது காட்டப்படும் அன்பை அலட்சியம் செய்பவர்கள் வாழ்வின் சில தருணங்களில் அதற்காக வருந்தும் நிலை வரலாம்.
   
காஃபி குடிச்சா டென்சன் போகாதுதான் ஆனா குடிக்கலனா ஆறி போயிடுமே!☕☕
   
பிரேசில் நாட்டில் மரங்களை வெட்டாமல் கட்டப்பட்ட பாலம் http://pbs.twimg.com/media/Cln7KrOWYAAI4B8.jpg
   
பெண்ணின் அன்பையும் அக்கறையும் விட, ஆண் மீது அவள் காட்டும் மரியாதை தான் ஆணின் மனதை தொடுகிறது; 💙"மதிக்கும் பெண்ணை நேசிக்க தவறியதில்லை ஆண்"💙
   
ஞாயித்துக்கிழமை சமூகசேவகின்னு போட்டானுங்க ரெண்டே நாள்ல குழந்தை கடத்தல் வழக்கில் கைதுனு செய்தி போடுறானுங்க புரியல http://pbs.twimg.com/media/ClsiEPXUsAItSDV.jpg
   
எனக்கு இன்னைக்கு சாப்ட கூட தோனாதுங்க இந்த வீடியோ பத்து சிரிச்சிட்டே இருப்பன் http://pbs.twimg.com/media/ClpqPJOWkAArvnP.jpg
   
விபத்தில் கால் முறிந்துள்ள நிலையிலும் தன்குழந்தைக்கு பால் ஊட்டும் தாய் #பெற்றோரை மதிக்காத பதர்களுக்காக ..! http://pbs.twimg.com/media/CltCbfcUkAAOwH4.jpg
   
புண்பட்ட நெஞ்சை புகைய விட்டு ஆத்தலாம், அதுக்காக புண் ஆகுறவரைக்கும் ஆத்தக்கூடாது... #கேன்சர் 😜
   
#காதலித்துப்பார் அதற்கு முன் யோசித்துப் பார். காதலியைத் திருமணம் செய்து நல்வாழ்க்கை நடத்தக் கூடிய தைரியம், தன்னம்பிக்கை, உனக்கு உண்டா என்று.
   
financially இந்த மாசம் போல ட்ரையான மாசம் இதுவரை இல்லை என்று சொல்வோர் மட்டும் RT பண்ணவும். 10பைசா இல்ல.
   

0 comments:

Post a Comment