10-மே-2015 கீச்சுகள்




Cristiano Ronaldo நேபாள மக்களுக்கு கால்பந்து வீரர் ரொனால்டோ ரூ.50 கோடி நிதியுதவி சச்சின்டா கடவுள்டா டோனிடா தலைவன்டா வரிசையில வாங்கடா
   
தாகமா இருந்தா இன்ஞினியரிங் காலேஜ் வாசல்கிட்ட போய் கம்யூட்டர் சயின்ஸ் பீஸ் எவ்வளவுன்னு கேட்டா போதும் ஆரஞ்ச் ஜூஸ் கொடுக்கிறானுக
   
சல்மானை கட்டி தழுவி வாழ்த்திய அமீர்கான் இவரு சத்யமேவ ஜெயதே.."ன்னு காசுக்காக தான் ப்ரோக்ராம் பண்ணார் போல மானங்கெட்ட கூத்தாடி பசங்க
   
தம்பி என்ன படிச்சிருக்க.?😮😮 கமல் படம் புரியற அளவுக்கு படிச்சிருகேன்😯😯 அப்ப பெரிய படிப்பு தான் 😁😁
   
அதிக ஃபாலோவர்ஸ் எல்லாம் எவ்வளவு வக்கனையா ட்வீட் போட்டோம் என்பதில் இல்லை. எவ்வளவு நேரம் இங்க பொழுதைக் கழிச்சோம் என்பதிலே இருக்குது.
   
சமீப காலமாய், கோர்ட்டால் தண்டிக்கப் படுகிறவர்களுக்கு ஆதரவாய் பேசும் செயல்படும் மனப்பான்மை அதிகரித்திருக்கிறது! இது சமூகத்திற்கு நல்லதல்ல!
   
பழைய காதலி என்பவள் ஒரு பெரும் காயம் ஏற்படுத்திய தழும்பை போன்றவள், தடவி பார்க்கையில் எல்லாம் காயத்தின் வலியை நினைவுப்படுத்தும்....
   
கடைசியில மனுசன்தான் மென்டல் ஆகிட்டே வரான், போன் என்னவோ 'ஸ்மார்ட்' ஆயிட்டுதான் வருது!! #மீள்
   
விபத்தில் கொன்றுவிட்டு ஓடிய நடிகனை சிறைப்படுத்தத் துப்பில்லாத சட்டமுள்ள நாட்டில் அறிமுகமாயிற்று 1ரூபாய் விபத்து இன்சூரன்ஸ் திட்டம்
   
சாதாரணமா பாட்டு போட்டாலே டான்ஸ் சொல்லத்தேவையில்ல, நீ இப்டி போட்டா என்ன ஆகும்னே தெரியலையே.. #Vijay59 http://pbs.twimg.com/media/CEia5caUgAAtsVe.jpg
   
இதவிடவாயா நீங்களா அம்மாமேல பாசம்காட்டியிருப்பிங்க? போங்கயா அங்குட்டு,வந்துட்டாங்க அம்மா ட்விட் போட! #அன்னையர்தினம் http://pbs.twimg.com/media/CEkEXx0UsAEwMV-.jpg
   
தெருவில் புதிதாக வந்த நாயை மற்ற நாய்கள் துரத்தும் போதெல்லாம் வெளிநாட்டுக்கு வேலைக்கு போன மகனை நினைத்து துடிக்குது அம்மாவின் மனசு # பபி
   
வாழ்க்கைல எவ்வளவு சம்பாதிக்கிறோம்றது முக்கியமில்ல! அதை அனுபவிக்க எவ்வளவு தெம்பா இருக்கோம்றதுதான் முக்கியம்!
   
எவ்வளவு மகிழ்ச்சி நிறைந்த மக்கள் கூட்டமுள்ள இடமாயினும் நம் நெருங்கிய நண்பர்கள் அருகில் இல்லாத இடத்தில் வேடிக்கை மட்டுமே பார்க்கத் தோன்றும்!
   
தன் தாயை குழந்தைபோல் தன் மடியில் வைத்திருக்கும் இந்த அன்பருக்கு ஒரு சல்யூட். http://pbs.twimg.com/media/CEkh1ctUEAAWYq6.jpg
   
பலருடைய பிரிவுக்கான காரணத்தை யோசித்து பார்த்தால் அதிகப்படியான அன்பும் நம்பிக்கையுமே காரணமாக இருக்கிறது.
   
#CSK ஜெயிச்சா காசு கொடுத்து ஜெயிச்சோம்பானுங்க. இப்ப தோத்துட்டோமா, இப்ப காச வாங்கிட்டு தோத்தோம்பானுங்க, அவனுங்க நெஞ்சுலையே மிதிங்க சார்
   
நான் நேரம் பார்த்து உழைப்பது இல்லை-மோடி#அது சரி! ஒவ்வொரு நாட்டுக்கும் நேர வித்தியாசம் இருக்கும்ல?
   
கமிட்மென்ட் கொடுத்துவிட்டோம் என்பதற்காகவே பல நேரங்களில் பிடிக்காத வேலைகளை சலித்துக் கொண்டு செய்கின்றோம்!
   
தாயின் கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரை அதில் பிள்ளைகளின் பெயர் மட்டுமே எழுதியிருக்கும் #அன்னையர்தினம்
   

0 comments:

Post a Comment